வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, April 4, 2011

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அதிமுகவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க: நடிகர் ஆனந்த்ராஜ்


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து நடிகர் ஆனந்த்ராஜ் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அவர் வேடசந்தூர், எரியோடு, பூத்தாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக தேர்தல் அறிக்கையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கம்யூட்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ள்ளது. அவர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிலா ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் கருணாநிதியோ கல்லூரி மாணவர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு மட்டும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தாய்மார்களுக்கு மிக்சி அல்லது கிரைண்டர் வழங்கப்படும் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதாவோ மிக்சி, கிரைண்டர் இரண்டும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும், தாய்மார்கள் மிக்சி, கிரைண்டர் பயன்படுத்தும்போது வியர்க்காமல் இருக்க மின்விசிறியையும் சேர்த்து தருவதாக கூறியுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது அதிமுக தேர்தல் அறிக்கை. எனவே, அனைவரும் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாங்கள் வெற்றி பெற்ற பிறகு இதே இடத்தில் மேடை போட்டு நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment