PTI Photo
FILEவிளையாட்டு என்பதே திறமை தொடர்பானது. திறமை எவ்வளவு ஆண்டுகளுக்கு இருக்கிறதோ அது வரைதான் விளையாட்டு வீரருக்கு மதிப்பு மரியாதை, பணம் எல்லாம். ஒரு வீரர் நன்றாக விளையாடிய காலத்தில் எவ்வளவு 'தேச பக்தராக' இருந்தாலும் திறமை போய்விட்டால் அவரது தேசப்பக்திக்காக எந்த வாரியமாவது அணியில் வைத்திருக்குமா?
இதனைப் பற்றி கிரிக்கெட் வாரியங்களில் உள்ள 'தலைகள்', என்ன நினைக்கிறது என்றால், பணத்தாசை பிடித்து நாட்டுக்காக விளையாடுவதைக் கூட பொருட்படுத்தாத வீரர்கள் என்ற எண்ணத்தை தாங்கள் வளர்த்துக் கொள்வதோடு, பொது மக்கள் மனத்திலும் வீரர்கள் பற்றிய இது போன்ற ஒரு அவதூறை ஏற்படுத்துகின்றனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்கள் நன்றாகப் பணம் ஈட்டுகிறார்கள். ஆம்! ஆனால் அதற்காக கடின உழைப்பை வெளிப்படுத்துவதும் அவசியம். இதனை ஒரு பொழுது போக்கு கிரிக்கெட் என்றாலும் உழைப்பு அளவில் எல்லாம் ஒன்றுதான். சினிமா ஒரு பொழுதுபோக்குக் கலைதான் ஆனால் ஒரு சினிமாவை எடுக்க எவ்வளவு முட்டி மோதுகிறார்கள். எவ்வளவு செலவு, எவ்வளவு உழைப்பு...!
ஐ.பி.எல். கிரிக்கெட்டிற்காக பாண்ட், பிளிண்டாஃப், மலிங்கா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டை உதறுகின்றனர் என்று குற்றம்சாட்டினால் ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்பு 'தேச'த்திற்காக விளையாடி காயமடைந்து, உடல் நிலை மோசமான வீரர்கள் பலருக்கு இந்த கிரிக்கெட் வாரியங்கள் என்ன கிழித்து விட்டது என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டும்.
ஒரு வேகப்பந்து வீச்சாளரின் காலம் எவ்வளவு? பொதுவாகவே அனைவரும் சச்சின், ஸ்டீவ் வாஹ் போன்று 15 ஆண்டு, 20 ஆண்டுகள் வரை விளையாட முடிவதில்லை. குறிப்பாக பந்து வீச்சாளர்களின் காலம் 6 முதல் 7 ஆண்டுகள்தான். அதுதான் அவர்கள் உச்சத்தில் இருக்கும் காலம்.
அதுவும் காயமடையாமல் இருப்பது அவசியம். காயமடைந்தால் நம் தேசப்பற்று வாரியத் தலைகளா வந்து காப்பாற்றப் போகிறது? சொந்தக் காசில்தான் சிகிச்சை பெறவேண்டியுள்ளது.
மேலும் 18 வயதில் ஒரு வீரர் விளையாட வருகிறார் என்றால் அவர் எம்.பி.ஏ. ட்ரிப்ளி, எம்.பி.பி.எஸ். படித்து விட்டா வருகிறார்? நேராக பள்ளி அல்லது தெரு கிரிக்கெட்டில்லிருந்து லீக், மாவட்டம், மாநிலம் பிறகு நாட்டு அணிக்குள் வருகின்றனர்.
0 comments:
Post a Comment