வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Tuesday, June 28, 2011

ராணாவில் வடிவேலுதான் காமெடி....


யாராவது தன்னை எதிர்த்தால் அவர்களை மன்னித்து தனது ஆட்டு மந்தையில் இன்னொரு ஆடாக சேர்த்துக் கொள்வது ரஜினிகாந்தின் ஏசு ராஜா ஃபார்முலா.
முன்பு மனோரமா ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று ரஜினியை மேடைகளில் தாறுமாறாக விமர்சித்தார். வடிவேலு விஜயகாந்தை விமர்சித்ததைவிட மோசம். தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. மனோரமாவை யாரும் படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த மனோரமா நடித்த விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. ஒரே இரவில் யாருடைய நிர்ப்பந்தமும் இன்றி திரையுலக ஆனாதையாக்கப்பட்டார் மனோரமா.
பிறகு ரஜினி தானாக முன் வந்து மனோரமாவுக்கு தனது படத்தில் வாய்ப்பு கொடுத்தார். ரஜினியின் புகழ் வானை முட்டியது.

இதேபோல் மன்சூரலிகான் அவரை விமர்சித்த போது படையப்பாவில் வாய்ப்பு என்ற பெயரில் ஒரு காட்சியில் நடிக்க அனுமதிக்கப்பட்டார். படையப்பா பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்கும் கேரக்டர்.
இந்த மன்னிப்பு ட்ரிட்மெண்டில் சமீபத்தில் அடிபடும் பெயர் வடிவேலு. ராணாவில் வடிவேலுதான் காமெடி என்று தீர்மானமான பிறகு வடிவேலுவின் ஓவர் பேச்சால் படத்திலிருந்து நீக்கப்பட்டார். இது பற்றி நிருபர்கள் கேட்டபோது ராணாவாவது கானாவாவது என தெனாவட்டாக பதிலளித்தார் வடிவேலு.
அன்று மனோரமாவுக்கு ஏற்பட்ட கதிதான் இன்று வடிவேலுக்கு. சீண்டுவார் யாருமில்லை. வழக்கம் போல தனது மன்னிப்பு ஃபார்முலாப்படி ராணாவில் மீண்டும் வடிவேலுவை சேர்த்துக் கொள்ளப் போகிறாராம் ரஜினி. அய்யா தெரியாம பண்ணிட்டேன்.. உங்க முன்னாடி எல்லாம் நிற்க முடியுமா என்று வடிவேலு கதறும் காட்சி ராணாவில் இடம் பிடித்தால் ஆச்சரியப்படாதீர்கள்.

0 comments:

Post a Comment