ஒரே நாளில் உலகத்தைப் புரட்டிப் போடுறதெல்லாம் நடிகர் விஜய்க்கு சாதாரணம். சினிமாவில் அவர் செய்யும் சாகஸத்தை பாவம்… அவரது தந்தையும் நம்பிக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் நமது கவலை. இந்த சினிமா ஹேங்ஓவரில் அவர் ஈழம் குறித்து உதிர்த்திருக்கும் வார்த்தைகள் பக்கா ப்ளாக் க்யூமர்.
விடுதலைச் சிறுத்தைகள் பாசிஸ ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடித்தி வருகிறார்கள். விஜய்யிடம் கையெழுத்து கேட்ட போது போட முடியாது என்று சொன்னதாக சிறுத்தைகள் குற்றம்சாற்றுகிறார்கள். விஜய் சார்பில் வாய்ஸ் கொடுக்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். அதற்கு மேல் அவர் சொன்னதுதான் காமெடி.
தமிழ் ஈழம் மலரவும், ஈழத்தமிழர் பாதுகாப்பாக வாழவும் விஜய் வழி செய்வார் என்று கூறியிருக்கிறார். காவலன் படத்தை ஒழுங்காக ரிலீஸ் செய்ய முடியாமல் விழி பிதுங்கி அதிமுகவிடம் அடைக்கலம் தேடியவர் ஈழத்தை மலர வைக்கப் போகிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் கீறி வைகுண்டம் போன கதைதான்.
நண்பா உங்களுக்கு ஒன்று தெரியுமா? அதிமுக ஜெயித்ததே விஜய் அவர்களுக்கு ஆதரவாக மாறியதால்தான் என்று நினைத்து கொண்டிருக்குதுகள் இந்த பக்கிகள்.
ReplyDelete