வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, August 25, 2011

சிங்கப்பூர்ல பாட்டு, தீபாவளிக்கு ட்ரீட்டு!


தயாநிதி ஸ்டாலின் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் '7ஆம் அறிவு' படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு, இன்று பதில் கிடைத்திருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக, இதன் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்திருக்கிறார். இப்படம் எப்போது வெளிவரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அதற்கு காரணங்களும் இருக்கின்றன; டி.என்.ஏக்களின் ரகசியத்தை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். நம் மூதாதையர்கள் எவ்வளவு சர்வ வல்லமை பொருந்தியவர்கள், நமது வரலாறு என்ன, நம் திறமைகள் என்னென்ன என்பதை அறியவியல் பூர்வமாக காட்டியிருக்கிறாராம். சூர்யா இப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறார். ஒருவர் புத்த துறவியாகவும், ஒருவர் சர்க்கஸ் கலைஞராகவும் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் கதாநாயகியாக (விஞ்ஞானியாக) நடித்துள்ளார். 'கஜினி' படத்தில் சூர்யா-ஏ.ஆர்.முருகதாஸ்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது. இரண்டாவது முறையாக இக்கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் புனைகதையாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்தில், வில்லன் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார். ஹாலிவுட்டிற்கு இணையாக படத்தை உருவாக்கி வருவது, குங்பூ சண்டைக் காட்சியை கிளைமாக்ஸில் இணைத்திருப்பது, இவை எல்லாம் தமிழ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விலை சுமார் ஏழு கோடியாம். அதுமட்டுமல்ல, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் நேரடியாக ஒளிபரப்பப் போகிறதாம் சன். இப்படத்தை பெரிய விலை கொடுத்து வாங்க அத்தனை சேனல்களுக்கும் அடிதடி போட்டி. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படங்கள் எல்லாமே கலைஞர் டிவி அல்லது விஜய் டிவி தவிர வேறெந்த சேனல்களுக்கும் கொடுப்பதில்லை அவர். இந்த நிலையில்தான் சன் குழும தலைவர் கலாநிதி மாறனும் உதயநிதியும் சந்தித்திருக்கிறார்கள். முழு படத்தையும் வாங்கி வெளியிட சன் தயாராக இருந்தும், தற்போதைக்கு சேனல் ரைட்ஸ் வரைக்கும்தான் கொடுத்திருக்கிறாராம் உதயநிதி. செப்டம்பர் 10ந் தேதி சிங்கப்பூரில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி, அதாவது வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டர் இணைய பக்கத்தில் உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார். ஓ.கே. ஓ.கே. ட்ரீட்டுக்கு எல்லாரும் ரெடி..........


0 comments:

Post a Comment