ஆயிரம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இந்த தகவலை, டெல்லி மேல்சபையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
1,000 ரூபாய் நாணயம் வெளியிடுவது பற்றிய மசோதா, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டது. அந்த மசோதா நேற்று மேல்-சபையில் தாக்கல் ஆனது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், ``ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் படி இந்த நாணயங்களின் தயாரிப்பு, மற்றும் வினியோகம் இருக்கும்'' என்றார்.
இந்த நாணயம் எப்போது வெளியிடப்படும் என்பதை அவர் அறிவிக்க வில்லை.
"இந்தியாவில் 10 லட்சம் நோட்டுகளில் 8 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கள்ள நோட்டுகளை அதிக அளவில் இந்தியாவுக்குள் அனுப்பி, இந்திய பொருளாதாரத்துக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் முயற்சியில், சில அண்டை நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். பின்னர் இந்த மசோதா மேல்-சபையில் நிறைவேறியது.
0 comments:
Post a Comment