வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, August 22, 2011

போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு...

ஒரே வாரத்தில் 400 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு...



தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 இன்ஸ்பெக்டர்கள்(சட்டம்-ஒழுங்கு) அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து காவல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏராளமான போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர், செய்யப்பட்டு வருகின்றனர்.

ஓரிரு உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படும் நிலை மாறி தற்போது பலர் கூண்டோடு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 250 டி.எஸ்.பி.க்கள், 400 சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.பி., சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment