என்னிடம் என்ன இருக்கு? ரசிகர்களுக்கு த்ரிஷா கேள்வி!!


என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்? என நடிகை த்ரிஷா, ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கிசுகிசுவுக்கும், த்ரிஷாவுக்கும் ரொம்பவே நெருக்கம் அதிகம்.

வாரத்திற்கு ஒரு கிசுகிசுவாவது அம்மணியைப் பற்றி வந்துவிடும். அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் செய்தி, அம்மணிக்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், மாப்பிள்ளையை த்ரிஷாவின் தாயார் உமா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதுதான். இதனை மறுத்துள்ள த்ரிஷா, வதந்திகளை பரப்புபவர்களையும், ரசிகர்களையும் வசை பாடியிருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எந்த ரகசியமும் இல்லை. ஆனாலும் என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. கற்பனையான செய்திகளை பரப்புகிறார்கள். எனக்கு அமெரிக்க மாப்பிள்ளையை பார்க்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. ஒரு நடிகருடன் திருமணம் நடக்கப் போவதாகவும் வதந்திகள் பரவி உள்ளது. இப்படி என் திருமணத்தை பற்றி விதவிதமான செய்திகள் வந்தபடி உள்ளன. ரசிகர்களுக்கு இதனால் என்ன பயன் என்று எனக்கு புரியவில்லை. நடிகைகளின் சொந்த வாழ்க்கைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புவதாகவும் அதனால்தான் இதுபோன்ற செய்திகள் வருவதாகவும் கூறுகின்றனர்.
என்னிடம் என்ன இருக்கிறதென்று ரசிகர்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என தெரியவில்லை. இதைத் தெரிந்து கொண்டு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நான் ரகசிய திருமணம் செய்ய மாட்டேன். எந்த விஷயத்தையும் பகிரங்கமாக அறிவித்து விட்டுதான் செய்வேன். ரசிகர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசியுடன்தான் எனது திருமணம் நடைபெறும், என்று கூறியுள்ளார்.