‘ஓம் ஒபாமா’… சினிமாவில் ஒரு அரசியல் கலாட்டா!
ஓம் ஒபாமா…. இது மந்திரமல்ல, புதிதாக தயாராகும் தமிழ் சினிமாவின் தலைப்பு.
ஸ்ருத்திகா பவுண்டேஷன் தயாரிப்பில் ஜானகி விஸ்வநாதன் இயக்கும் படம் இது.
கேடாரபாளையம் எனும் ஊரைச் சேர்ந்த இரு அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.இவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வருவதாக செய்தி பரவுகிறது. இதை நம்பும் மக்கள் ஒபாமாவுக்காக யாகம் பூஜை என அமர்க்களப்படுத்துகிறார்கள்.
பஞ்சாயத்து, தேர்தல் பிரசாரம், அரசியல் மோதல், காதல், ஊரின் நிதி நிலை, ஊடக ஆதிக்கம், மூட நம்பிக்கை போன்றவற்றுக்கு ஒரே முடிவாக அமைகிறது ஒபமாவின் வருகை.
இந்தக் கதையை காமெடியும் எள்ளலும் கலந்து உருவாக்கியிருக்கிறார்களாம்.
பால் ஜேகப் இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குநர் ஜானகி விஸ்வநாதன் ஏற்கெனவே தேசிய விருது வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment