உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேப்டன் டோனி பயன்படுத்திய அவரது பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.
அவரது அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பதற்காக இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்த பேட்டை வைத்துத்தான் இலங்கைக்கு எதிராக ஏப்ரல் மாதத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 91 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தார் டோனி என்பது குறிப்பிடதக்கது.
இதே ஏலத்தில் டோணி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைக் கெளரவிக்கும் வகையில், உலகப் புகழ் பெற்ற கலைஞர் சச்சா ஜாப்ரி உருவாக்கிய கலைப்படைப்பும் ஏலத்தில் விடப்பட்டது. சமூகத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளஞ்சிறார்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படும் என்றார் டோனி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment