நம்ம ஹீரோக்கள் மீது ரசிகைகளுக்குதான் எத்தனை எத்தனை மோகம்…? சமீபத்தில் சென்னை ஈ.சி.ஆர்., சாலையில் ஒரு விபத்து. ஒரு அதிவேக கார், முன்னால் டூ-விலரில் சென்ற இரண்டு இளம் பெண்கள் மீது மோதியதில், இளம் பெண்கள் இருவரும் சாலையில் விழுந்து சிராய்ப்பு காயங்களுடன் விழுந்த வேகத்தில் எழுந்திருக்கின்றனர்.
அதற்குள், அவர்கள் மீது மோதிய காரையும், பொது மக்கள் தடுத்து நிறுத்த, காருக்குள் இருந்து இறங்கிய வாலிபரை கண்டதும், காயம்பட்ட இளம்பெண்கள் இருவர் மட்டுமல்ல, பொதுமக்களும் ஆச்சர்யத்தில் ஆடிப்போய் அவரிடம் சண்டைபோடாமல் ஆட்டோகிராஃப் வாங்கி வழிந்திருக்கின்றனர்.
காருக்குள் இருந்து அரை மப்பில் இறங்கிய அந்த வாலிபர் வேறு யாருமல்ல, “திருட்டுபயலே” ஜீவன் தான். ஜீவனுடன் திருமணமாகாத ஒரு இளம் பெண்ணும் இருந்தார். அந்தபெண் யார் என்பது ஜீவனுக்கே வெளிச்சம். ஜீவனிடம், ஏன் போதையில் வந்து மோதினீர்கள் என்று யாரும் கேட்கவில்லை…? யார் அந்த பெண் என்றும் யாரும் கேட்கவில்லை…?
அடிபட்டவுடன் காரை மோதியவர் மீது ஆவேசப்பட்ட அந்த பெண்கள் மற்றும் அங்கு கூடியிருந்தவர்கள், காருக்குள் இருந்து ஹீரோ இறங்கி வந்ததும் அவரிடம் கோபப்படாமல் ஆட்டோகிராஃப் வாங்குபவர்கள் என்னவென்று சொல்வது.
இப்பொழுது சொல்லுங்கள்… நம் ஹீரோக்கள் மீது ரசிகர்களுக்கு குறிப்பாக, ரசிகைகளுக்கு தான் எத்தனை, எத்தனை மோகம்…?