வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Tuesday, July 19, 2011

22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

ரூ.22,500 கோடி கடன் பாக்கியை செலுத்தவில்லை என்றால், இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்துவோம் என ஈரான் கூறியுள்ளது. 


சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, ஈரான் நாட்டில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

 மாதத்துக்கு 1 கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஈரானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. இதற்காக செலுத்தப்படும் பணம் ஜெர்மனியின் சென்ட்ரல் பாங்க் மூலம் செலுத்தப்பட்டு  வந்தது.

 அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால் ஈரானுக்கு சர்வதேச நாடுகள் தடை விதித்திருந்தன. இதனால் ஜெர்மனி வங்கி மூலமாக ஈரானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பணம் செலுத்துவது தடைபட்டது.

 மாற்று வழியில் ஈரானுக்கு பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கடன் பாக்கி ரூ.22 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்தது

. இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் எண்ணெய் அமைச்சக அதிகாரி ஒருவர், இந்தியா கடன்பாக்கியை செலுத்தவில்லையென்றால்,
 அடுத்த மாதம் 1ம் தேதி முதல் கச்சா எண்ணெய் அனுப்பமாட்டோம் என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment