திமுகவில் சேர்ந்தால் தியேட்டர் கிடைக்குமா? இப்படியோரு கேள்வியை தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கேட்டு
வருகிறாராம் சினேகா. முதலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியலில் தனக்கென்று ஒரு நாற்காலியை உருவாக்கிக்கொள்ள நினைத்திருந்தார் சினேகா. ஆனால் அடுத்த முறையும் திமுகதான் ஆட்சிக்குக்கு வரும், திமுகவுக்கு வந்தீட்டிங்கன்னா, நீங்க தனி ஆவர்த்தனம் பண்ணப் போற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கும் என்று எக்குத்தப்பாக யாரோ அவருக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்கள். இதைக் கேட்டு திமுகவில் சேர்ந்தால் என்னென்ன நண்மை தீமைகள் என்று சினேகா ஆய்வு பண்ணாத குறையாக கேட்டு வருகிறார் என்கிறார்கள்.
சினேகாவை இப்படி புலம்ப வைத்ததற்குக் காரணம், அவர் ஆக்‌ஷன் நாயகியாக அவதாரம் எடுத்திருக்கும், பாவாணி ஐ.பி.எஸ் படத்துக்கு இன்னும் சரியான தியேட்டர்கள் கிடைக்காததால் கைப்பிசைந்து கொண்டிருக்கிறார் இவரை ஆக்‌ஷன் நாயகியாக்கிய இயக்குனர் தயாரிப்பாளர் கிச்சா!. இதுவரை இப்படத்திற்காக ஏகப்பட்ட ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார். ஆனால் ஒரு முறை கூட சொன்ன தேதியில் படத்தை கொண்டு வர முடியவில்லை கிச்சாவால்.
இந்தப்படம் வெளிவந்தால் அடுத்து அர்ஜுனை வைத்து இயக்கி முடித்த மாசி படத்தை வெளியிடலாம் என்றால் அர்ஜுன் மார்கெட்டும் அவுட்! இந்ததுயரம் போதாதென்று கிச்சாவே நாயகனாக நடித்து ஒரு படத்தை இயக்க இருக்கிறாராம். அது இந்த இரண்டு படங்களும் வெளியாகி கலெக்‌ஷன் வந்தால்தான் இவரது கதாநாயகன் கனவு நிரைவேறும்! தேர்தலுக்கு முன்னாடி பவானி படத்துக்கு தியேட்டர் கொடுங்கப்பா. இல்லேன்னா சினேகா அரசியல்ல குதிக்கிறத யாராலயும் தடுக்க முடியாது.

யப்பா! இன்னொரு தங்கத் தலைவியா?.. தமிழ் நாடு தாங்காது சாமியோவ்..!