மும்பை: அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான, 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இத்தொடர் வரும் பிப். 19 ம் தேதி முதல் ஏப்.2 வரை நடக்க உள்ளது. இந்த முறை இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, கனடா, கென்யா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாட உள்ளன. இத்தொடரில் பங்கேற்க உள்ள அணிகள், 30 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவிக்க இன்று கடைசி நாள் என அறிவித்திருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,). இதனையடுத்து தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில், இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அணி வருமாறு: தோனி (கேப்டன்), சச்சின், சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ், முரளி விஜய், ரோகித் சர்மா,சவுரப் திவாரி, ஹர்பஜன், ஜாகிர் கான், பார்த்திவ் படேல், சகா, தினேஷ் கார்த்திக், யூசுப் பதான், ரஹானே, சிகர் தவான், புஜாரா, அஷ்வின், ஸ்ரீசாந்த், பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா, நெஹ்ரா, இஷாந்த் சர்மா, வினய் குமார், பியுஸ் சாவ்லா, பிரக்யான் ஓஜா மற்றும் முனாப் படேல்.
0 comments:
Post a Comment