This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
Thursday, August 15, 2013
YOU TUBE - உள்ள சூப்பர் வீடியோஸ்!!!
11:53 AM
No comments
இணையத்தில் இதுவரை நீங்கள் எவ்வளவோ வீடியோக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் நிச்சயம் இது மாதிரி வீடியோக்களை நீங்கள் பார்த்திருக்க மாட்டிர்கள் பாஸ். இதோ அந்த அழகி. வீடியோக்களை பாருங்கள் இவைதான் மொத்த யூ-டியூப்பிலேயே செம காமெடியான வீடியோக்கள் ஆகும்....
Wednesday, August 14, 2013
கொஞ்சம் யோசிங்க பிரண்ட்ஸ்......
2) ரோட்ல கண்ட கண்ட இடத்துல அசிங்கம் பண்ணுவோம், குப்பை கொட்டுவோம் ஏன்னா இது சுதந்திர நாடு.
3) சேலை, சுடிதார், மோர்டன் ஆடை இப்படி என்ன ஆடை போட்டாலும் அந்த பெண்னை கைபேசில படம் பிடிசுகிட்டே வரலாம், அத எவனும் தட்டி கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர நாடு.
4) வேலை இல்லாதவன் பத்தாயிரம் ரூபா திருடினா சிறைல போடலாம், அரசாங்க வேலைல உள்ளவன் பத்தாயிரம் கோடி திருடினாலும் வெளிய சுத்தலாம் ஏன்னா இது சுதந்திர நாடு.
5) வீடு இல்லாதவன் புறம் போக்கு நிலத்துல அரையடி ஆக்கிரமிச்சா இடிக்க சட்டம் இருக்கு, பணக்காரன் ஆறு ஏக்கர் புறம் போக்க வளச்சு போட்டா சட்டமே மாற்றி அமைக்கப்பட்டு ஏன்னா இது சுதந்திர நாடு.
6) நடைபாதை உணவகத்துல சாப்பாட்டுல பூச்சி இருந்தா உணவு பாதுகாப்பு சட்டம் பாயும இதுவே அரசாங்க உணவு சேகரிப்பு கிடங்குள பூச்சிகள் இருந்த உணவு பாதுகாப்பு சட்டமே திருத்தி அமைக்கப் படும்... ஏன்னா இது சுதந்திர நாடு.
7) மாடா உழைச்சு நல்ல அரிசிய அரசாங்கத்துக்கு விப்பான் ஆனா மலிவுவிலை கடைகள் மூலமா நாறிப்போன அரிசிய தான் அரசாங்கம் உழவனுக்கு கொடுக்கும் அத இவன்னாலயும் தட்டி கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர நாடு.
8 ) ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் வாங்கி 67 வருடம் ஆச்சு ஆனா நீதி மன்றத்துல தமிழில் வழக்காட சுதந்திரம் வாங்கி ஒரு வருடம் கூட ஆகல, இதுவும் சுதந்திர நாடு.
9) இலங்கையில் லட்சகணக்கான இந்தியர்களை(தமிழர்கள்) கொன்னான் நடவடிக்கை எடுக்கல, அமெரிக்காவில் பத்து இந்தியர்களை(சீக்கியர்கள்) கொன்னா உடனே நடவடிக்கை எடுக்குறாங்க. யாரும் ஏன்னு கேக்க முடியாது ஏன்னா இது சுதந்திர நாடு.
10) இல்லாதவனுக்கு ஏற்றவாறு சட்டம் இயற்றாமல் அவனை இல்லாமல் ஆக்கத்தான் சட்டம் இயற்றுகிறார்கள். இதை கேட்க்க ஆளில்லை ஏன்னா இது சுதந்திர நாடு.
11) நம்ம வரிப்பனத்துல நமக்கே இலவசம் கொடுப்பான் அதையும் இலுச்சுகிட்டு வாங்கிகிட்டு அவனுக்கே ஓட்டு போடுவோம்..
என்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.
Thanks FB frined,,,,
Tuesday, August 13, 2013
தினமும் ரன்னிங் பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
7:30 PM
No comments
ஒவ்வொருவரும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியம்.
அவ்வாறு உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், உடற்பயிற்சி
செய்ய வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பர். உடற்பயிற்சி என்றதுமே
அனைவரும் ஜிம்முக்கு தான் படை எடுப்பர். ஆனால் ஜிம்மிற்கு சென்று
உடற்பயிற்சி செய்வதை காட்டிலும், நாம் எளிதான ஒரு உடற்பயிற்சியை செய்யலாம்.
அது தான் ரன்னிங் / ஓடுதல்.
அதிலும் ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு மேல் ஓடினால், உடலில் உள்ள நல்ல
கொழுப்புகளானது அதிகரிப்பதாகவும், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடின்
அளவையும் குறைத்து, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. மேலும் ஓடுதல் சிறந்த
உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடலின் எடை குறையவும், ஆரோக்கியமாகவும், அழகிய
உடலமைப்புடன் இருக்கவும் உதவுகிறது.
இப்போது ரன்னிங்/ஓடுதல் மூலம் ஒவ்வொருவரும் பெறக்கூடிய ஆரோக்கிய நலன்கள்
பற்றி தொகுத்து வழங்கியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல்
ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Wednesday, August 7, 2013
ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள்...
10:25 PM
No comments
1) சேலை, தாவணி கட்டினா பட்டி காட்டு பொண்ணுன்னு, மார்டன் உடை போட்டா அணிஞ்ச கலாசாரத்தை கெடுக்குற பொண்ணு அப்படி சொல்லுறீங்க அப்ப நாங்க என்ன உடை தான் அணியிறது?
2) மஞ்சள் பூசுனா மரியாதா மாறி இருக்கு, மேக்கப் போட்டா மெர்லின் மன்றோனு நெனப்புனு சொல்லுறீங்க நாங்க என்ன தான் போட்டுகுறது?
3) தங்க நகை போட்டா இவகிட்ட தான் நகை இருக்குனு அள்ளி மாட்டிக்கிறானு சொல்லுறது, நகை போடலேனா ஆம்பள பையன் மாதிரி திரியிறானு சொல்லுறது அப்ப நகை போடுறதா வேண்டாமா?
4) போன் நம்பர் கேட்டு தரலேனா ரொம்ப பண்ணுறாநு சொல்ல வேண்டியது, கேட்ட உடனே போன் நம்பர் தந்தா இவ சரி இல்லா டா கேட்ட அடுத்த நிமிஷம் போன் நம்பர் தர்றா எல்லா பசங்களுக்கும் இப்படி தான் போன் நம்பர் தருவளோ ? அப்படினு தப்பா பேசுறது.. நாங்க போன் நம்பர் தரதா வேணாமா?
5) பொண்ணுங்களால தான் கலாசாரமே அழிஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க ஆனா இன்னைக்கும் கல்யாணத்துல பொண்ணுக போடவதான் கட்டியிருக்கோம் ஆண்கள் தான் கோட்டும், டையும் கட்டி இருக்காங்க. கலாச்சாரத்த கெடுக்குரது யாரு?
6) இதை எல்லாம் விட பெரிய கொடுமை என்னனா, பெண்களுக்கு முழு சுதந்திரம் இருக்குன்னு சொல்லிட்டு, பெண்கள் அணியிற உடைகளுக்கு கட்டுப் பாடு விதிச்சுட்டு, இரவு நேரத்துல தனியா பெண்கள் பிரயாணிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க...
பிறர் மனதை புண்படுத்த இதை பதிவு செய்யவில்லை மனதில் தோன்றியதை பதிவு செய்தேன்.
-- நந்தமீனாள்
மதுரை.
2) மஞ்சள் பூசுனா மரியாதா மாறி இருக்கு, மேக்கப் போட்டா மெர்லின் மன்றோனு நெனப்புனு சொல்லுறீங்க நாங்க என்ன தான் போட்டுகுறது?
3) தங்க நகை போட்டா இவகிட்ட தான் நகை இருக்குனு அள்ளி மாட்டிக்கிறானு சொல்லுறது, நகை போடலேனா ஆம்பள பையன் மாதிரி திரியிறானு சொல்லுறது அப்ப நகை போடுறதா வேண்டாமா?
4) போன் நம்பர் கேட்டு தரலேனா ரொம்ப பண்ணுறாநு சொல்ல வேண்டியது, கேட்ட உடனே போன் நம்பர் தந்தா இவ சரி இல்லா டா கேட்ட அடுத்த நிமிஷம் போன் நம்பர் தர்றா எல்லா பசங்களுக்கும் இப்படி தான் போன் நம்பர் தருவளோ ? அப்படினு தப்பா பேசுறது.. நாங்க போன் நம்பர் தரதா வேணாமா?
5) பொண்ணுங்களால தான் கலாசாரமே அழிஞ்சு போச்சுன்னு சொல்லுவாங்க ஆனா இன்னைக்கும் கல்யாணத்துல பொண்ணுக போடவதான் கட்டியிருக்கோம் ஆண்கள் தான் கோட்டும், டையும் கட்டி இருக்காங்க. கலாச்சாரத்த கெடுக்குரது யாரு?
6) இதை எல்லாம் விட பெரிய கொடுமை என்னனா, பெண்களுக்கு முழு சுதந்திரம் இருக்குன்னு சொல்லிட்டு, பெண்கள் அணியிற உடைகளுக்கு கட்டுப் பாடு விதிச்சுட்டு, இரவு நேரத்துல தனியா பெண்கள் பிரயாணிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க...
பிறர் மனதை புண்படுத்த இதை பதிவு செய்யவில்லை மனதில் தோன்றியதை பதிவு செய்தேன்.
-- நந்தமீனாள்
மதுரை.
Tuesday, August 6, 2013
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?

காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை! அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது
3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14 இன்னும் சொல்லவா? 159 நூல் நூற்பு ஆலைகள் 4 சைக்கிள் தொழிற்சாலைகள் 6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள் ரப்பர் தொழிற்சாலை காகிதத் தொழிற்சாலை அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று. தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார். மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே...!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்... இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில் இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா..? இல்லை "இலவச"த்தின் பேரில் நம்மைப் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா..?
நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா?
12:15 PM
No comments
சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு...
... விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...
கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....?? கீழே படியுங்கள்...
ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 39.
இன்று 1 US $ = ரூ 61.09
அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???
அதுதான் இல்லை..
இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!
நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...
ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...
இதை தடுக்கவே முடியாதா...??? முடியும்.
நாம் மனசு வைத்தால்...!!!
நாம் என்ன செய்ய வேண்டும்...???
1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...
அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.
2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...
LIST OF PRODUCTS:--
COLD DRINKS:-
வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...
தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE
BATHING SOAP:-
வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA
தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE
TOOTH PASTE:-
வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.
தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.
TOOTH BRUSH:-
வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.
தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B
SHAVING CREAM:-
வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.
தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.
BLADE:-
வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.
தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.
TALCUM POWDER:-
வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.
தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.
MILK POWDER:-
வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.
தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.
Food Items:-
வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.
தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

இன்று 1 US $ = ரூ 61.09
Monday, August 5, 2013
ஹீரோவாக நடிக்கிறார் 'காமெடி கிங்
சென்னை: தமிழ் சினிமா உள்ளவரைக்கும் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வாய்மை என்ற படத்தில் டாக்டராக நடிக்கும் அவர், அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் இன்றைய காமெடியன்கள் யாராலும் இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு நீக்கமற நிறைந்திருப்பவர் கவுண்டர் என செல்லமாக (சாதிப் பெயர் இல்லீங்) அழைக்கப்படும் கவுண்டமணி. கவுண்டமணி -செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள்.
கவுண்டமணி மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12. எவ்வளவோ வாய்ப்புகள் வந்தும், தங்கம் படத்துக்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த கவுண்டமணி, தற்போது ‘வாய்மை’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து கவுண்டரை கவுரவிக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன் ஒரு படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைக்கிறார். வெற்றி மாறனின் உதவியாளர்களுள் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம். படத்தின் கதையைக் கேட்டும் சம்மதமும் சொல்லிவிட்டார் கவுண்டர் என்கிறார்கள். அட்ரா சக்க.. அட்ரா சக்க… அட்ட்ரா சக்க!
சீதாப்பழத்தில் இத்தனை மருத்துவ குணமா..
1:35 PM
No comments
சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்!!
***************************************
***************************************

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.
பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
சீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
*சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.
* சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் புசி வர பிளவை பழுத்து உடையும்.
*இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.
* விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.
*சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
*சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
*சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
*சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.
* சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.
*சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.
*சீதாப் பழத்திலுள்ள பல சத்துக்கள் இதயத்தைப் பலப்படுத்தி, சீராக இயங்கச் செய்யும். இதயம் சம்பந்தமான நோய்கள் வராது காக்கும் என அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சீதாப்பழத்தை சாப்பிடுவோம் இதயத்தைக் காப்போம்.
• ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திம நிலை காச நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வர, நோயை கட்டுக்குள் இருக்கச் செய்யும்.
• அறுவை சிகிச்சைக்குப் பின் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும்
• மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் விலகும்.
• இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும்
• இரவில் படுக்கப் போகும் முன் ஒரு சீதாப்பழத்துடன் இரண்டு பேரீச்சம் பழமும் தின்றால், நன்கு தூக்கம் வரும். தூக்கம் வராது அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல எளிய இயற்கை மருந்து.
முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.
மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.
சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்
எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம்.
சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும்.
தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால்,
இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
-உடுமலை.சு.தண்டபாணி
Monday, July 22, 2013
பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் வாங்கியுள்ள அஜீத்,,,
12:24 AM
No comments
சென்னை: அஜீத் குமார் பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். கார் பந்தய வீரரான அஜீத் குமாருக்கு பைக்குகள் என்றாலும் கொள்ளைப் பிரியம். அவர் நடிக்கும் படங்களில் பைக் சாகசம் செய்ய அவர் தயங்குவதே இல்லை. மங்காத்தாவில் கூட அவர் பைக் சாகசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் டுகாட்டி பைக்கில் சாகசம் செய்யும் காட்சி உள்ளது. அஜீத் வீட்டில் ஏற்கனவே பல சூப்பர் பைக்குகள் உள்ளன. இந்நிலையில் அவர் பிஎம்டபுள்யூ எஸ்1000ஆர்ஆர் என்னும் ரேசிங் பைக்கை வாங்கியுள்ளார். காலில் காயம் ஏற்பட்டு வரும் அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருக்கும் அஜீத்தால் இந்த பைக்கை ஓட்ட முடியுமா என்று தான் தெரியவில்லை.
பிரணாப் முகர்ஜி ...குடியரசுத் தலைவராக ஒரு வருடம்.. !
12:21 AM
No comments
டெல்லி: பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்துள்ளார். அரசியல் மற்றும் அதிகாரத்தி்ல பல்வேறு பொறுப்புகளை வகித்தவரான பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில்ஒரு வருட காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார். பிரதீபா பாட்டீலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர் பிரணாப் முகர்ஜி.
விதிமுறைகளைத் தாண்டாமல் அரசியல் சாசனச் சட்டத்தைத் தாண்டாமலும், விதிமுறைகளைத் தாண்டாமலும் வழக்கமான குடியரசுத் தலைவராகவே செயல்பட்டு வருகிறார் பிரணாப்.
சொன்னபடி கேளு... அரசியல் சாசனச் சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்கிறார் பிரணாப். அவராக எதையும் செய்வதில்லை.
கலாம் போல வருமா அப்துல் கலாம் இப்படி இருந்ததில்லை. விதிமுறைகளைத் தாண்டியும், அதேசமயம், வரம்பு மீறாத வகையிலும் மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்தவர் கலாம். ஆனால் பிரணாப் அப்படி எதையும் செய்யவில்லை.
அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் பிரணாப் ஆட்சிக்காலத்தில்தான் அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பதே அவருடைய ஒரே சாதனையாக உள்ளது.
மீதமுள்ள காலத்தில் இனி பாக்கி உள்ள பதவிக்காலத்திலாவது வித்தியாசமான குடியரசுத் தலைவராக பிரணாப் செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
Saturday, January 26, 2013
விஸ்வரூபம் – திரை விமர்சனம்
11:25 AM
No comments
7 வருடங்களாக கமல் மனதிலே ,கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட கதை ,அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது , DTH அறிமுகம், இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு , தமிழகத்தில் வெளியிட தடை, படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிறச் செய்ததது . எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்றால் , கண்டிப்பாக , ஓரளவுக்கு நிறைவேற்றியது எனச் சொல்லலாம். கமல் என்ற கலைஞனின் உழைப்பு, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
80களில், ராக்கெட்தொழில் நுட்பத்தை காட்டிய விக்ரம் , DTS அறிமுகம் செய்த குருதிப்புனல்,DTHஐ அறிமுகம் செய்ய எடுத்த முயற்சிகள். இருவேறு கோணங்களில் கதை சொன்ன சண்டியர்(விருமாண்டி) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். களத்தூர் கண்ணமாவில் துவங்கிய தேடல் , இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.
“கதக்” மாஸ்டராக பெண்மை போன்ற நளினம் கொண்ட கமலை,அவரது மனைவி சந்தேகம் கொண்டு,டிடெக்டிவ் அமைத்து துப்பறிய,கமல் யார் என்ற கேள்வியும், அவரை பற்றிய மர்ம முடிச்சுகளும்தான் மொத்த படமும். படத்தின் சுவராஜ்யம் போய் விடும் என்பதால் இதற்குமேல் கதை சொல்வதில்லை.
இஸ்லாமிய நண்பர்கள் மனம் புண்படும் காட்சிகள் ஒன்றும் இல்லை .எந்த வித காம்ப்ரமைசும் செய்யாமல்,அல்கொய்தா நெட்வொர்க் பற்றி, ஆய்வு செய்து திரைக்கதை அமைத்துள்ளார். கண்டிப்பாக கதைக்களமும் , காட்சி அமைப்புகளும் தமிழ் சினிமாவிற்கு புதிது . கதையில் ஒவ்வொரு சஸ்பென்சும்,மாட்ரிக்ஸ் பாணியில் வெளிப்படும் காட்சியில் இயக்குனர் கமல் தெரிகிறார். ஆப்கான் காட்சிகளில் வரும் கமலும், அவரது மேக்கப்பும் அட்டகாசம். தசாவதாரத்தில் தெரிந்த செயற்கைத்தனம் இல்லை.
பூஜாகுமார் ,அவர் கள்ளக்காதலனுடன் தோன்றும் காட்சிகளில், அவ்வளவு அழகாகா தெரிகிறார். ஹிஹி . ஆண்ரியா எதற்கு வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு ..ஒரு காட்சியில் குண்டடிபட்ட, கமலுக்கு தையல் போட்டு விடுகிறார். இதற்க்கு ஒரு நர்ஸே போதுமே?
ஒரு குறிப்பிட்டவர்களை தீவிரவாதிகளாக காட்டி ,எதிர்ப்புகளை சமாளிக்க ,இந்துவுக்கு ஒரு முஸ்லீம் நண்பரோ /vice versa இருப்பது போன்று காட்சி அமைப்பது, தமிழ்சினிமாவின் தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம் .அதுபோன்ற காட்சிகளை கமல் தவிர்த்திருக்கிறார். மணிரத்னம் பாம்பேயில் கூட, நாசரை இந்துவாகவும், கிட்டியை முஸ்லிமாகவும் காட்டியிருப்பார்.
ஆப்கான் காட்சிகளில் ஒளிப்பதிவு அபாரம். குரிதிப்புனலை போல பாடல்களை தவிர்த்திருந்தால்,இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.ஆப்கான் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.டாகுமெண்டரி பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.கமல் பாணியில் சொல்ல வேண்டுமானால், கொஞ்சம் மொக்கை ,அதிகம் சூப்பர், இரண்டும் சேர்ந்த கலவை இது. AR ரகுமான் பாட்ட கேட்டவுடனும் ,கமல் சார் படத்த பார்த்தவுடனே புரியாது .பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும் .இந்த படமும் அப்படித்தான்.
முதல் முதல் பார்த்தவுடம் புரியாது . புரியனுமுன்னா இரண்டு முறை பார்க்கணும். மிகப்பெரிய வெற்றி பெறாது.
இந்த படத்தில் நடித்த நாசர் ,விஸ்வரூபம் படத்தை பார்த்து, அதற்க்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்த, ஹாசன் முகமது ஜின்னா, இருவரும் முஸ்லிம்கள்தான். தன் மதத்தை தவறாக சித்தரித்திருந்தால் எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டார்களா என்ன ?















