வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, January 26, 2013

விஸ்வரூபம் – திரை விமர்சனம்


7 வருடங்களாக கமல் மனதிலே ,கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட கதை ,அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது , DTH அறிமுகம், இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு , தமிழகத்தில் வெளியிட தடை, படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிறச் செய்ததது . எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்றால் , கண்டிப்பாக , ஓரளவுக்கு நிறைவேற்றியது எனச் சொல்லலாம். கமல் என்ற கலைஞனின் உழைப்பு, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
Vishwaroopam poster
80களில், ராக்கெட்தொழில் நுட்பத்தை காட்டிய விக்ரம் , DTS அறிமுகம் செய்த குருதிப்புனல்,DTHஐ அறிமுகம் செய்ய எடுத்த முயற்சிகள். இருவேறு கோணங்களில் கதை சொன்ன சண்டியர்(விருமாண்டி) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். களத்தூர் கண்ணமாவில் துவங்கிய தேடல் , இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.
“கதக்” மாஸ்டராக பெண்மை போன்ற நளினம் கொண்ட கமலை,அவரது மனைவி சந்தேகம் கொண்டு,டிடெக்டிவ் அமைத்து துப்பறிய,கமல் யார் என்ற கேள்வியும், அவரை பற்றிய மர்ம முடிச்சுகளும்தான் மொத்த படமும். படத்தின் சுவராஜ்யம் போய் விடும் என்பதால் இதற்குமேல் கதை சொல்வதில்லை.
இஸ்லாமிய நண்பர்கள் மனம் புண்படும் காட்சிகள் ஒன்றும் இல்லை .எந்த வித காம்ப்ரமைசும் செய்யாமல்,அல்கொய்தா நெட்வொர்க் பற்றி, ஆய்வு செய்து திரைக்கதை அமைத்துள்ளார். கண்டிப்பாக கதைக்களமும் , காட்சி அமைப்புகளும் தமிழ் சினிமாவிற்கு புதிது . கதையில் ஒவ்வொரு சஸ்பென்சும்,மாட்ரிக்ஸ் பாணியில் வெளிப்படும் காட்சியில் இயக்குனர் கமல் தெரிகிறார். ஆப்கான் காட்சிகளில் வரும் கமலும், அவரது மேக்கப்பும் அட்டகாசம். தசாவதாரத்தில் தெரிந்த செயற்கைத்தனம் இல்லை.
பூஜாகுமார் ,அவர் கள்ளக்காதலனுடன் தோன்றும் காட்சிகளில், அவ்வளவு அழகாகா தெரிகிறார். ஹிஹி . ஆண்ரியா எதற்கு வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு ..ஒரு காட்சியில் குண்டடிபட்ட, கமலுக்கு தையல் போட்டு விடுகிறார். இதற்க்கு ஒரு நர்ஸே போதுமே?
ஒரு குறிப்பிட்டவர்களை தீவிரவாதிகளாக காட்டி ,எதிர்ப்புகளை சமாளிக்க ,இந்துவுக்கு ஒரு முஸ்லீம் நண்பரோ /vice versa இருப்பது போன்று காட்சி அமைப்பது, தமிழ்சினிமாவின் தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம் .அதுபோன்ற காட்சிகளை கமல் தவிர்த்திருக்கிறார். மணிரத்னம் பாம்பேயில் கூட, நாசரை இந்துவாகவும், கிட்டியை முஸ்லிமாகவும் காட்டியிருப்பார்.
ஆப்கான் காட்சிகளில் ஒளிப்பதிவு அபாரம். குரிதிப்புனலை போல பாடல்களை தவிர்த்திருந்தால்,இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.ஆப்கான் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.டாகுமெண்டரி பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.கமல் பாணியில் சொல்ல வேண்டுமானால், கொஞ்சம் மொக்கை ,அதிகம் சூப்பர், இரண்டும் சேர்ந்த கலவை இது. AR ரகுமான் பாட்ட கேட்டவுடனும் ,கமல் சார் படத்த பார்த்தவுடனே புரியாது .பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும் .இந்த படமும் அப்படித்தான்.
முதல் முதல் பார்த்தவுடம் புரியாது . புரியனுமுன்னா இரண்டு முறை பார்க்கணும். மிகப்பெரிய வெற்றி பெறாது.
இந்த படத்தில் நடித்த நாசர் ,விஸ்வரூபம் படத்தை பார்த்து, அதற்க்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்த, ஹாசன் முகமது ஜின்னா, இருவரும் முஸ்லிம்கள்தான். தன் மதத்தை தவறாக சித்தரித்திருந்தால் எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டார்களா என்ன ?

Related Posts:

  • அங்கீகாரம் பெறப் போகும் விஜயகாந்த்....(பா.ம.க-வின் டவுசர் கிழிந்தது!!!) சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமகவின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்யப் போகிறது. அதே நேரத்தில் தேமுதிக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்… Read More
  • சகுனி கலக்கல் விமர்சனம்... தேர்தல் முடிவு வந்தவுடன் வேலாயுதம் ட்ரெய்லரை ஜெயா டிவியில் உற்சாகமாக ஒளிபரப்பினார்கள். இந்த பரபரப்பில் ஒன்றை பலரும் கவனிக்க தவறினர். அது சகுனி படத்தின் ட்ரெய்லர். இதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.சகுனி கார்த்தி நடிக்… Read More
  • சீழ்பிடித்த தலையர்-"சீத்தலைச் சாத்தனார்" "பிழையான தமிழைப் பார்க்கும் போதெல்லாம், எழுத்தாணியால் தன் தலையில் குத்திக் கொள்வாராம்... சாத்தனார் என்ற புலவர். அதனாலேயே, சீழ்பிடித்த தலையோடு இருந்த அவருக்கு, சீத்தலைச் சாத்தனார் என்பது காரணப் பெயராக ஆகியது!' என குப்பண்ணா சொ… Read More
  • சங்கடத்தில் சன் பிக்சர்ஸ்... ஒரு நாள் ஊரை ஏமாற்றலாம் பல நாள் ஏமாற்ற முடியாது என்ற படிப்பினையை தாமதமாக புரிந்து கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ்.அரைவேக்காடு படங்களை அதீத விளம்பரங்கள் மூலம் வெற்றி பெறச் செய்ய முடியும் என்பதை முதலில் உலகுக்கு நிரூபித்ததே சன் … Read More
  • பாவம்.... Read More

0 comments:

Post a Comment