ஒவ்வொருவரும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியம்.
அவ்வாறு உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், உடற்பயிற்சி
செய்ய வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பர். உடற்பயிற்சி என்றதுமே
அனைவரும் ஜிம்முக்கு தான் படை எடுப்பர். ஆனால் ஜிம்மிற்கு சென்று
உடற்பயிற்சி செய்வதை காட்டிலும், நாம் எளிதான ஒரு உடற்பயிற்சியை செய்யலாம்.
அது தான் ரன்னிங் / ஓடுதல்.
அதிலும் ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு மேல் ஓடினால், உடலில் உள்ள நல்ல
கொழுப்புகளானது அதிகரிப்பதாகவும், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடின்
அளவையும் குறைத்து, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. மேலும் ஓடுதல் சிறந்த
உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடலின் எடை குறையவும், ஆரோக்கியமாகவும், அழகிய
உடலமைப்புடன் இருக்கவும் உதவுகிறது.
இப்போது ரன்னிங்/ஓடுதல் மூலம் ஒவ்வொருவரும் பெறக்கூடிய ஆரோக்கிய நலன்கள்
பற்றி தொகுத்து வழங்கியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல்
ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment