வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Friday, August 23, 2013

திமுகவுடன் மீண்டும் கூட்டணிக்கு காங். மும்முரம்! ஞானதேசிகன் நீக்கப்படுகிறார்?

லோக்சபா தேர்தலில் திமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான ஆலோசனைகளை காங்கிரஸ் முடுக்கிவிட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக திமுகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் திமுக, காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்தித்தது. திமுகவும், மத்திய அரசில் பங்கேற்றது. ஈழ இறுதிப் போர் நடைபெற்ற சூழலிலும் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. அண்மையில் தமிழக மாணவர்கள் போராட்டம் வெடித்த நிலையில் மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் வெளியேறுவதாக திமுக அறிவித்தது. இருப்பினும் ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி முதலில் அறிவித்தது. திமுக கேட்காமலேயே காங்கிரஸ் ஆதரவு தர முன்வந்த போதும் திமுக, தேமுதிகவை நம்பி இருந்தது. பின்னர் தேமுதிக- காங்கிரஸ் அணி உருவாகும் நிலையால் காங்கிரஸ் கதவுகளை திமுக மீண்டும் தட்ட ஆதரவும் கிடைத்தது.



ராகுலின் வியூகம்

              இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்தில் எப்படி கூட்டணி அமைப்பது என்பது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ப. சிதம்பரம், ஜி.கே.வாசன், சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் ராகுல் விவாதித்துள்ளார்.



திருநாவுக்கரசர், கோபண்ணா, ஞானதேசிகன் இதேபோல் திருநாவுக்கரசர், ஞானதேசிகன், கோபண்ணா உள்ளிட்ட நிர்வாகிகளையும் ராகுல் நேரில் அழைத்து ஆலோசித்துள்ளார்.



திமுகவுக்கு அதிகம் 'ஜே' இப்படி தமிழகத்தில் இருந்து ராகுல் காந்தியால் அழைக்கப்படுவோரில் பெரும்பான்மையினோர் திமுகவுடனேயே மீண்டும் கூட்டணி அமைக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். ஒருசிலர் தான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறுவதாகவும் தெரிகிறது.



தேமுதிக- காங்கிரஸ் தனி அணி அதேபோல் தேமுதிக, காங்கிரஸ் மற்றும் சிறு கட்சிகள் இணைந்து தனி அணி அமைத்தால் இருக்கிற இடமே தெரியாமல் காங்கிரஸ் காணாமலேயே போய்விடும் என்று ராகுலிடம் தமிழக காங்கிரசார் கூறியுள்ளனர்.




ஞானதேசிகன் காட்டம் இந்தப் பின்னணியில்தான் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் திமுகவை சீண்டும் வகையில் கடுமையான அறிக்கை ஒன்றை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டதாக கூறப்படுகிறது.


கருணாநிதி பதிலடி ஞானதேசிகன் போன்றோர்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி, ஞானதேசிகனை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டார். வேதாந்தம் பேசுகிறார், ஞானோபதேசம் செய்கிறார் என்றெல்லாம் கருணாநிதி சாடியிருந்தார்.



காங். மேலிடம் எரிச்சல் ஒரு பக்கம், திமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க ராகுல் வழிகளை ஆராய்ந்து வரும் நிலையில் அதை கெடுக்கும் வகையில் ஞானதேசிகன் செயல்படுகிறார் என்று ஒருதரப்பு புகாரை டெல்லிக்கு தட்டிவிட்டது. இதனால் ஞானதேசிகனுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.




ஞானதேசிகனுக்கு ஆப்பு? திமுக -காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் நிலையில் அனேகமாக ஞானதேசிகன், தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment