கல்யாணம் பண்ணிப்பார்...

தினமும் துணி துவைப்பாய்...
மூன்று வேளை பாத்திரம் துலக்குவாய்...
காத்திருந்தால்....'வரட்டும்... இன்னிக்கி வச்சிருக்கேன்' என்பாய்...
வந்துவிட்டால்....'வந்திட்டியா செல்லம் போலாமா' என்பாய்....

வீட்டு வேலைக்காரி கூட உன்னை மதிக்காது -ஆனால்
வீடே உன் கண்ட்ரோலில் உள்ளதாய்
வெளியே பீலா விடுவாய்...

கார் வாங்கச்சொல்லி
கட்டியவள் வயிற்றில் மிதிக்க,
கடன் கொடுத்தவன் கழுத்தைப் பிடிக்க,
வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த மானம், இந்த வெக்கம் ,
இந்த சூடு, இந்த சொரணை,
எல்லாம் கட்டிய நாளோடு
கழட்டி வைத்து விடுவது தான்
கொண்டவளை கவுரவிக்கும்
ஏற்பாடுகள் என்பாய்...!!!!!
கல்யாணம் பண்ணிபார்..!!!


Thanks - நகைச்சுவை துணுக்குகள் facebook