ஒரு ஹீரோ, 'உங்களுக்கு கால்ஷீட் கண்டிப்பா தர்றேன்-. நடிக்க வரும்போது சம்பளம் ஃபிக்ஸ் பண்ணினா போதும்' என்று சொன்னால் அது தயாரிப்பாளருக்கு தரப்பட்ட ஃபேவர் இல்லை, ஃபீவர்! அப்படியொரு ஃபீவரைதான் உதயநிதிக்கு வரவழைத்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.எதிர்நீச்சல் ஹிட் என்றதும் தனது பேனரில் ஒரு படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தாராம் உதயநிதி.

உடனடியாக ஓ.கே சொல்லிவிட்டார் சிவகார்த்திகேயன். அதற்கப்புறம் சம்பளம் பேசி அட்வான்ஸ் கைமாற வேண்டியதுதானே பாக்கி? ஆனால், நான் இப்போ மூணு படத்துல நடிச்சுட்டு இருக்கேன். அது ரிலீஸ் ஆன பிறகு சம்பளத்தை பேசிக்கலாமே என்றாராம் சிவகார்த்திகேயன்.

தற்போது சுமார் இரண்டு கோடி மட்டும் வாங்குகிற அவர், இந்த மூன்று படங்களும் வெளியான பின்பு நாலு கோடிக்கு தாவ மாட்டார் என்பது என்ன நிச்சயம்? உதயநிதியின் கவலை இதுதான்.
                                                     

பாம்பு தரைக்கும், தேரை தண்ணிக்கும் மாறி மாறி இழுத்துக் கொண்டிருக்க, புதுப்பட புராஜக்ட்டின் ரிசல்ட்? 'அது கெடக்கு போங்க'வாகிக் கொண்டிருக்கிறதாம் இப்போது.