தேர்தல் முடிவு வந்தவுடன் வேலாயுதம் ட்ரெய்லரை ஜெயா டிவியில் உற்சாகமாக ஒளிபரப்பினார்கள். இந்த பரபரப்பில் ஒன்றை பலரும் கவனிக்க தவறினர். அது சகுனி படத்தின் ட்ரெய்லர். இதுவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.
சகுனி கார்த்தி நடிக்கும் அரசியல் படம். அதாவது இரு கட்சிகளுக்கிடையே சண்டை மூட்டி அதில் குளிர் காயும் அரசியல்வாதியின் கதை. கோள் மூட்டியே பெரியாளாகிறார் கார்த்தி. இந்த ஒன் லைனில் பல கதைகள் வந்திருக்கின்றன. இதனால் அவற்றிலிருந்து வித்தியாசப்படுத்த அரசியல் தரகர் நீராராடியாவின் கதையை உள்ளீடாக சொல்லியிருக்கிறார்களாம்.
ஆளும் கட்சியே வெற்றி பெற்றிருந்தால் சகுனிக்கு சங்கு ஊதியிருப்பார்கள். வெற்றி பெற்றது எதிர்க்கட்சி என்பதால் கெத்தில் இருக்கிறது சகுனி டீம்.