சில ஆச்சரியங்கள்,சில அதிர்வுகளைக் கொடுத்துவிட்டு தமிழ் சினிமாவிற்கு ‘குட் பை’ சொல்லியிருக்கிறது 2010. இந்த வருடம் மட்டும் நூற்றிமுப்பத்தியாறு படங்கள் வெளி வந்திருக்கின்றன.அதில் டாப் 10 படங்கள் எவை? சினிமா விமர்சகர்கள், சினிமா துறைகளில் அனுபவம் அதிகமுள்ளவர்களிடம் கேட்டுத் தயாரித்த, பட்டியல் இது.
2010-இல் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால், ஜெயம் ரவி, கார்த்தி, பரத் என தமிழ் சினிமாவின் ‘ஆல் ஏஜ் குரூப்’ முன்னணி ஹீரோக்கள் அனைவரது படங்களும் வெளிவந்தது ஒரு கலர்ஃபுல் கமர்ஷியல் கலாட்டா.இதில் கதையை நம்பிய நாயகர்களே கமர்ஷியல் கதாநாயகர்களாக பந்தயத்தில் முந்தியிருக்கிறார்கள். இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதை, கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நட்சத்திரங்கள், இன்றைய சினிமா மார்க்கெட்டுக்கு ஏற்ற பட்ஜெட் என்ற ஃபார்முலாவில் வெளிவந்த முயற்சிகளுக்கு மக்கள் ரெட் கார்பெட் மரியாதைக் கொடுத்திருக்கிறார்கள். வசூலிலும் இப்படங்கள் திடீர் ஆச்சர்யத் தைக் கொடுத்திருக்கின்றன.


மறுபக்கம் ‘சுறா’, ‘அசல்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ’ரெட்டச்சுழி’, ’குட்டி‘, ’தில்லாலங்கடி’, ‘ராவணன்’, ‘வம்சம்’, ‘ரத்த சரித்திரம்’, ‘நந்தலாலா’, ‘ஈசன்’, ‘மன்மதன் அம்பு’ ஆகிய படங்கள் ஒரு கமர்ஷியல் படத்திற்கான எதிர்பார்ப்பையும் மீறி, தனி வேல்யூவையும் கொண்டிருந்தன. இதனாலேயே இந்த வருட டாப் 10 பட்டியலில் வழக்கத்திற்கு மாறாக ஒரு பாதியை முன்னணி ஹீரோக்கள் படங்களும்,அடுத்த பாதியை இயக்குநர்களின் படங்களும் பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றன.2010-ல் தமிழ் சினிமாவின் வசூல் நிலவரம்:

மொத்த முதலீடு சுமார் 750 கோடி ரூபாய். இதில் வசூலானது சுமார் 500 கோடி. நஷ்டம் சுமார் 250 கோடி. 2009-ஐ ஒப்பிடும் போது இந்த 2010 கொஞ்சம் பாஸிட்டிவாகவே கழிந்திருக்கிறது என்பது ஆறுதலான விஷயம். குட் லக் தமிழ் சினிமா. சியர்ஸ்!