வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, April 17, 2011

அரசியல்வாதிகளின் அலப்பறையும்,சினிமாக்காரர்களின் சிரிப்புரையும்

 


1.முதல்வர் கருணாநிதி: கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது


  சட்னி-சாம்பார் -தலைவா,ஆனா ஆ.ராசா காலத்துக்குப்பிறகு அது வழக்கொழிஞ்சு போச்சே? ஏனுங்கோ?



2.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது. கூட்டணி பற்றி நானே பேசக்கூடாது. அந்த முடிவு சோனியாவிற்கு மட்டும் தான் உண்டு. எனவே, இனிமேல் கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

சட்னி-சாம்பார் - அண்ணே,தலைவர் நீங்களே கூட்டணி பற்றி பேசக்கூடாதுன்னா அப்புறம் எதுக்கு அந்த தலைவர் போஸ்ட்டிங்க்?


3.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
விஜயகாந்த் கட்சி உட்பட பல கட்சிகள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், காங்கிரஸ், மக்களின் உரிமைக்காகப் போ ராடி வரும் இயக்கம். வரும் 2016க்குள் நாம் மூன்று பெரிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த ஆறு ஆண்டு காலமும் கட்சியை வலுப்படுத்த மேலிடம் முன்வந்தால், 2016ல் ஆட்சி அமைக்க முடியும்.

சட்னி-சாம்பார் - யானை போய் குதிரை வந்தது டும் டும் டும்,குதிரை போய் கழுதை வந்தது டும் டும்,2011 போய் 2016 வந்தது டும் டும் டும்


 

4.சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு:
 கருணாநிதி கூறிய வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் ஓட்டளித்தனர். இன்று குடும்பத்தினர் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன.

  சட்னி-சாம்பார் - அது வேணா உண்மைதான்,கலைஞர் குடும்பத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குது.







5.   திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் - காதலன் பிரபுதேவா

  சட்னி-சாம்பார் -ஆம்,டைவர்ஸுக்குப்பிறகு நடிப்பார்.(இத்தனை நாளா நடிச்சாரா?)




6. இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க  - நயன்தாரா


  சட்னி-சாம்பார் -ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஃபினிஷிங்க்லதான் பிரச்சனை ஆகிடுது.போன வருஷம் சிம்பு,இந்த வருஷம் பிரபுதேவா,அடுத்த வருஷம் உங்க மனசை அசத்தப்போவது யாரு?



7.பிரபுதேவா பெயரை நான் பச்சை குத்தியிருக்கிறேன். எதற்காக அவர் பெயரை பச்சை குத்தியிருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்றவங்களுக்காக நாம வாழுறோம். இதுதான் உண்மை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.

-நயன்தாரா




சட்னி-சாம்பார்-நீங்க வேணா பாருங்க கஜினி சூர்யா மாதிரி பல பேரை பச்ச குத்தி கலக்கப்போறீங்க.

Saturday, April 16, 2011

இனிமே நான் சரக்கடிக்க மாட்டேன்... இது குவாட்டர் பாட்டில் மேல சத்தியம்

1. எலெக்‌ஷன்ல  தோத்த  பிறகும்  கூட  தலைவர்  எதுக்காக  மக்கள்ட்ட  நிதி  திரட்டறாரு?

டெபாசிட்  கூட  கிடைக்கலை.  என்ன  பண்ணுவாரு?  இழந்த  பணத்தை  எப்படி  மீட்டெடுப்பது?

----------------------------

2. குடிமக்களின்  நன்மதிப்பைப்  பெற  வேண்டும்ங்கற  எண்ணம்  தலைவரோட  தேர்தல்  அறிக்கைல  தெரியுது.

எப்படி  சொல்றே?

நடமாடும்  டாஸ்மாக்  கடை  அமைத்து  வீட்டுக்கு  வீடு  சரக்கு  சப்ளை  டோர்  டெலிவரி  செய்யப்படும்கறாரே?

-----------------------------

3. அவர்  ஒரு  பரம்பரைக்  குடிகாரர்-னு  எப்படி  சொல்றே?

இனிமே  நான்  சரக்கடிக்க  மாட்டேன்...  இது  குவாட்டர்  பாட்டில்  மேல  சத்தியம்  அப்டீன்னாரே?


--------------------------

4. நாங்க  பொண்ணு பார்க்க  வந்தப்ப  நீ  ஒரு  ஸ்வீட்  வெச்சியே...  அது  ரொம்ப  கேவலமா  இருந்துச்சு...

அதை  ஏன்  அப்பவே  சொல்ல்லை?

அம்மா  சொன்னாங்க...  பொண்ணே  ரொம்ப  கேவலமாத்தான்  இருக்கு;  ஸ்வீட்  கேவலமா  இருந்தா  என்ன?-னு...

------------------------------

5. சேலை  இல்லாத  பெண்களுக்கு  லேப்டாப்  ஃப்ரீனு  தலைவர்  அறிக்கை  விட்டிருக்காரே?

வேலை இல்லாத  ஆண்களுக்கு  மட்டும்தான்  வேலை  வாய்ப்பா?-னு  யாரும்  கேள்வி  கேட்டுடக்  கூடாதே?

---------------------------------

6. தலைவர்  எப்பவும்  மேடைல  டபுள்  மீனிங்லதான்  பேசுவாராம்.

அதுக்காக  டபுள்  டிஜிட்ல  சீட்  வேணும்னு  கூட்டணி  கட்சி  கிட்டே  நிர்ப்பந்தம்  விதிச்சா  எப்படி?

------------------------------------



7. நாட்டில்  இருக்கிற  எல்லா  கள்ளர்  இன  மக்களையும்  தலைவர்  தொகுதிக்கு  கூட்டிட்டு  வந்து  இறக்கிட்டாரே! ஏன்?

கள்ள  ஓட்டுக்கள்  போடனும்னா  கள்ளர்கள்  போடற  ஓட்டு-னு  நினச்சுட்டார்.

------------------------------------

8. தலைவருக்கு  ரெண்டே  ரெண்டு  சின்ன  வீடுதான்  இருக்காம்.  அதுலயும்  ஒரு  சின்ன  வீட்டுக்கு  மட்டும்தான் போய்ட்டு  இருக்காராம்.

ஓஹோ...  ஒன்றுக்கு  மேல்  இப்போது  வேண்டாம்...  இரண்டுக்கும்  மேல்  எப்போதும்  வேண்டாம்-னு  சொல்றாங்களே... அதை  ஃபாலோ  பண்றார்  போல...

---------------------------------

9. தலைவரோட  தேர்தல்  அறிக்கை  நம்பற  மாதிரி  இல்லையாமே?  ஏன்?

வீட்டுக்கு  வீடு  ஜிப்சி  ஜீப்  இலவசம்ங்கறாரே?

-------------------------------



10.  தலைவருக்கு  சினிமா  நாலெட்ஜ்  கம்மின்னு  எப்படி  சொல்றே?

பவர்  ஸ்டாரின்  லத்திகா  படம்  லத்திகா  சரணின்  சுயசரிதையா?  அப்டினு  கேட்கறார்.

Friday, April 15, 2011

பொல்லாத காலத்தில் புடலங்காயும் பாம்பாகும்-கராத்தே தியாகராஜன்

சென்னை: இரவு பகல் என்றும் பாராமல் அவர் அழைத்த போதெல்லாம் ஓடிப் போய் கட்சிப் பணியாற்றிய எனக்கு, நன்றிக் கெட்டத்தனமாக தொடர்ந்து துரோகம் செய்து வரும் தங்கபாலுவுக்கு என்னைக் கட்சியை விட்டு நீக்க எந்த அதிகாரமும் இல்லை என்று முன்னாள் சென்னை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கராத்தே தியாகராஜனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு கட்சியை விட்டு நீக்கினார். மேலும் அவருடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் ஒரே காரில் சென்னை விமான நிலையம் சென்ற கராத்தே அவரை டெல்லிக்கு வழியனுப்பி வைத்தார்.

பின்னர் கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், பொல்லாத காலத்தில் புடலங்காயும் பாம்பாகும் என்பார்கள். அது போல ஆகி விட்டது தங்கபாலுவின் நிலை. மயிலாப்பூர் தொகுதியில் மரண அடி நிச்சயம் என்பதை வாக்குப்பதிவின் முடிவில் உணர்ந்து கொண்ட தங்கபாலு, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று தனது ஆணிவேரை தானே அறுக்கும் அபாயகரமான செயலில் இறங்கியிருக்கிறார்.

நான் மற்றும் எஸ்.வி.சேகர் உள்பட 18 பேர் கட்சி வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருக்கிறார். அன்னை சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கட்சிப் பணியாற்றி வரும் என்னை சமீப காலங்களில் அதிக அளவு கட்சிப் பணிகளில் பயன்படுத்திக் கொண்டவர் தங்கபாலு.

இரவு பகல் என்றும் பாராமல் அவர் அழைத்த போதெல்லாம் ஓடிப் போய் கட்சிப் பணியாற்றிய எனக்கு, நன்றிக் கெட்டத்தனமாக தொடர்ந்து துரோகம் செய்து வரும் தங்கபாலுவுக்கு என்னைக் கட்சியை விட்டு நீக்க எந்த அதிகாரமும் இல்லை. அதற்கான தகுதியும் இல்லை. மேலும் காங்கிரஸ் தலைமையின் ஒப்புதல் பெறாமல், தென்சென்னை மாவட்டத் தலைவர் மங்கள் ராஜ், சென்னை மாநக ராட்சி கவுன்சிலர் சாந்தி, மற்றொரு கவுன்சிலர் மாநில எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு காங்கிரஸ் தலைவர் செங்கை செல்லப்பா ஆகியோரையும் எவ்வித விளக்க நோட்டீசும் அளிக்காமல் தன்னிசையாக கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருக்கிறார்.

இதைவிட பெரிய கேலிக்கூத்து என்னவென்றால், இளந்தலைவர் ராகுல் காந்தியின் ஆணைப்படி முறையாக தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான தென் சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ் ஜி.பிரகாஷ், மயிலாப்பூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜயசேகர், மத்திய சென்னை தொகுதி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சன்குமார், காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் ரஞ்சித்குமார், ஈரோடு பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ், ஈரோடு பாராளுமன்ற தொகுதி பொதுச் செயலாளர் சக்திவேல், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜவஹர்பாபு உள்பட பலரை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார்.

இது அவரது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாகும். சட்டப்படி இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களில் தலையிட காங்கிரஸ் கட்சியின் எந்த மாநிலத் தலைவர்களுக்கும் உரிமையில்லை என்பதை மறந்து அத்துமீறி இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் துரோகி தங்கபாலு போகிற போக்கில் தனது சுய விருப்பு வெறுப்புகளைக் காட்டி கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலம் வெளிப்படையாக தெரிகிறது.

எனவே நாங்கள் இதுபற்றி எந்த கவலையும் கொள்ளவில்லை. இந்த “உடான்ஸ்” அறிவிப்பை பொருட்படுத்தப் போவதும் இல்லை. தண்ணீரிலேயே மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் தங்கபாலுவை தரையில் தூக்கி எறியும் வரை ஓயப் போவதுமில்லை.

தகிடுதத்த தங்கபாலுவை காங்கிரஸ் தலைவர் பதவி யிலிருந்து விரட்டியடித்து அவரது “குறிச்சி” கிராமத்தில் ஓய்வு பெறச் செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்

Wednesday, April 13, 2011

விஜயகாந்த் டெபாசிட் வாங்கி விடக் கூடாது-மக்களுக்கு வடிவேலு கோரிக்கை!

ரிஷிவந்தியம்: விஜயகாந்த் டெபாசிட் வாங்கி விடாத அளவுக்கு மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ரிஷிவந்தியத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் வடிவேலு கோரிக்கை விடுத்தார்.

கிட்டத்தட்ட 20 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்து விஜயகாந்த்தை கடுமையாக திட்டித் தீர்த்த, கிண்டலடித்த, நக்கலடித்த நடிகர் வடிவேலு நேற்று விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் தனது பிரசாரத்தை முடித்தார்.

ஜி.அரியூர் என்ற கிராமத்தில் தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார். கிட்டத்தட்ட 12 இடங்களில் பிரசாரம் செய்த வடிவேலு இறுதியாக அரியூரில் பேசியபோது,

என்னால் திரைப்படங்கள் மூலமாகத்தான் உங்களையும், குழந்தைகளையும் சிரிக்க வைக்க முடியும். ஆனால், உங்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க முடியாது. அவற்றை செய்து கொடுக்கக் கூடியவர் முதல்வர் கருணாநிதிதான். ஐந்தாண்டுகளில் முதல்வர் கருணாநிதி பல நல்ல திட்டங்களை செய்துள்ளார். கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் ஆகியோரது ஆசியோடு மதுரையில் பிரசாரத்தை தொடங்கி, ரிஷிவந்தியம் தொகுதியில் முடிக்கிறேன்.

கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருகிறார். அந்த அரிசியை உலை வைப்பதற்காக கேஸ் அடுப்பும் கொடுக்கிறார். அது கொதிக்கின்ற நேரம் வரை உலகத்தை பார்க்க டிவியையும் கொடுத்துள்ளார். ஏழை மாணவர்கள் படிப்பதற்காக சமச்சீர் கல்வி கொண்டு வந்துள்ளார். வாரம் 5 முட்டை வழங்குகிறார். மாணவர்களுக்கு 3 சீருடைகளையும் வழங்குகிறார்.

பெண்களுக்கு திருமணம் உதவி தொகையாக ரூ.25,000 கொடுத்தார். இப்போது ரூ.30,000 கொடுக்கப்போகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6,000 கொடுத்து வருகிறார். இப்போது ரூ.10 ஆயிரமாக கொடுக்க போகிறார். முதியோருக்கு ரூ.500 கொடுத்து, இப்போது ரூ.750 கொடுக்க போகிறார். 58 வயது கடந்த முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க உள்ளார். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குகிறார். வேறு ஆட்சி மாறினால். இந்த திட்டங்கள் எல்லாம் போய்விடும்.

எங்கள் வீட்டில் 7 பிள்ளைகள். குடும்ப கஷ்டம் காரணமாக 4 தம்பிகளுடன் கண்ணாடி கடையில் வேலை செய்தேன். ரூ.60 சம்பளத்தில் 15 பேரை காப்பாற்ற வேண்டும். ஏழையின் கஷ்டம், அவர்களது வலி எனக்கு நன்றாக தெரியும் (இதைக் கூறும்போது வடிவேலு அழுதுவிட்டார்). மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த என் தந்தையை வறுமையின் காரணமாக காப்பாற்ற முடியாமல் போனது (அப்போது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார் வடிவேலு). 
இப்போது உள்ளது போல் கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருப்போம்.

நான் சென்ற இடங்களில் எல்லாம் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு இருந்து வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

தமிழ்நாட்டில் குடிசைகளே இருக்க கூடாது என்ற எண்ணத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் தொடங்கி பல்வேறு இடங்களில் வீடுகளை கட்டி கொடுத்துள்ளார். இந்த சாதனை திட்டங்கள்போல் வருகிற தேர்தலில் வெற்றி பெற்றால் மிக்சி, கிரைண்டர் மக்களுக்கு வழங்கப்படும் என்பது போன்ற பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த் விருத்தாசலத்தில் மக்களிடத்தில் பொய் சொல்லி, அவர்களை ஏமாற்றிவிட்டு ரிஷிவந்தியம் வந்துள்ளார். இங்கு யாரையும் ஏமாற்ற முடியாது. விருத்தாசலத்தை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சொன்னவர் அவ்வாறு செய்யவில்லை. சினிமாவில் அவர் தர்மம் செய்வது போன்ற காட்சியை பார்த்து மக்கள் ஏமாந்துவிட்டனர்.

முதல்வர் கருணாநிதி அறிவி்த்துள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டுமானால் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜை, அவரை எதிர்த்துப் போட்டியிடும் விஜயகாந்த் டெபாசிட் வாங்காத அளவிற்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயிகளுக்கு உழத் தெரியும். வியாபாரிகளுக்கு வியாபாரம்  தெரியும். மன்னனுக்கு ஆளத் தெரியும். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு என்ன தெரியும்?

நான் சினிமாவில் காமெடி செய்கிறேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார். நகைச்சுவையும் இசையும் நம் ரத்தத்தோடு கலந்த ஒன்றாகும். இப்போது கருணாநிதியின் நலத்திட்டங்களும் நம் ரத்தத்தோடு கலந்துவிட்டது.

கூட்டணி என்பது ஒரு கூட்டுப் பிரார்த்தனை போன்றது. ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் விஜயகாந்த்தும் ஒரே மேடையில் இதுவரையில் பேசவில்லை. இவர்களுக்குள் தொகுதி உடன்பாடு இருந்தால் மட்டும் போதாது, 
மனசு உடன்பாடு இருக்க வேண்டும்.

அதிமுக கூட்டணி எண்ணையும், தண்ணியும் கலந்தது போல உள்ளது. இரண்டும் ஒன்று சேரவே சேராது. அதை செய்வேன், இதை செய்வேன் என்று கூறும் விஜயகாந்த வெற்றிபெற்றாலும் அந்த அம்மாவிடம் ஒன்றும் கேட்க முடியாது. ஏனென்றால் அந்த அம்மாவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தியும், செருப்பால் அடித்தும் விஜயகாந்த அவமானப்படுத்தியுள்ளார்.

இதை அந்த அம்மா மறக்கமாட்டார். விஜயகாந்தால் அதிமுக கூட்டணி கெட்டுப்போச்சு. அவருக்கு ஒரு ஓட்டுகூட போடாதீங்க. உடல்நிலையை காரணம் காட்டி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அனுதாபம் மூலம் ஓட்டுக்களை பெற விஜயகாந்த் முயற்சிக்கிறார். அவருடைய டெபாசிட்டை காலி செய்யுங்கள். என்னை பயமுறுத்த பார்க்கிறார்கள். என் மக்களை ஏமாற விடமாட்டேன். எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துவது மிகப்பெரிய தப்பு. விஜயகாந்தை பார்த்தாலே குழந்தைகள்கூட அழுகிறது. நான் சினிமாவில் காமெடி செய்தேன். விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார். யாரும் ஏமாந்து விடாதீர்கள்.

நான் எப்படி சிரிக்க வைத்தாலும் உங்களுடைய அடிப்படை வசதிகளை என்னால் நிறைவேற்ற முடியாது. அதை தமிழக அரசுதான் செய்ய வேண்டும்.

எனவே கலைஞர் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலர்ந்திட, சினிமா காட்சியை காட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் தேமுதிகவை தோற்கடிக்க, காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.சிவராஜுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார் வடிவேலு.

Tuesday, April 12, 2011

இந்த வார ஸ்பெஷல்: பிரமாண்ட பொன்னர் சங்கர்-திரை விமர்சனம்!

கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள பொன்னர் சங்கர் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

கருணாநிதியின் கதை வசனத்தில் தயாரான படங்களில் முற்றிலும் வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் வரும் படம் பொன்னர் சங்கர். தரத்தில் அனைவரையுமே விழி விரிய வைத்துள்ள படமும் கூட!

கொங்கு மண்டலத்தில் பிரபலமான அண்ணன்மார் சுவாமி கதைதான் இந்த பொன்னர் சங்கர். பிரசாந்த் இருவேடங்களில் நடிக்க, தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார்.

இளையராஜா இசையில், பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சினேகா, ராஜ்கிரண், நெப்போலியன், குஷ்பு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே உள்ளது.

இந்தப் படத்தை தேர்தலுக்கு முன்பே வெளியிடுவதில் தீவிரமாக இருந்த இயக்குநர் தியாகராஜன், திட்டமிட்ட படி போஸ்ட் புரொடக்ளஷன் பணிகளை முடித்துவிட்டார். பின்னணி இசைச் சேர்ப்பும் முடிந்துவிட்டதால், தேர்தலுக்கு நான்கு தினங்களுக்கு முன்பே இந்தப் படம் வெளியாகிறது.

2.40 மணி நேரம் ஓடும் பொன்னர் சங்கரை பார்த்த அனைவருமே, மனம் திறந்து பாராட்டியிருப்பது இந்தப் படத்துக்கு பலம்.

பிரசாந்த் தனது கேரியருக்காக பெரிதும் நம்பியிருக்கும் படம் இந்த பொன்னர் சங்கர்தான்.

Saturday, April 9, 2011

சிறப்பு தேர்தல் அறிக்கை 2011:




எங்கள் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்தியது..!!! இதையொட்டி இன்று மாலை 6 :30 க்கு தீவுத்திடலில் கலைஞருக்கு பாராட்டு விழா..!!! அனைவரும் வாரீர்...!!!

இந்திய வெற்றி பெற்றதை அடுத்து மக்களை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு Cricket Bat & Ball இலவசமாக வழங்கபடும்..!!!!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் இருமுறை India விளையாடும் International Cricket  போட்டியை சென்னையில் நடத்துவோம்..!!!!  


நமது இளைஞர் அணி இந்திய அணியில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறது..!!! இதற்கு ஒரே ஒரு காரணம் அது கலைஞர் தான்...!!!



கலைஞர் ஆட்சியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியதை முன்னிட்டு கலைஞர் அரங்கில் நாளை மாலை 6 :30 க்கு மாபெரும் பாராட்டு விழா..!!! கலைஞருக்கு "மட்டைப்பந்துச செம்மல்" என்று தமிழக திரை உலகம்  சார்பில் பட்டமளிக்க படும்..!!!..!!!



Minority திமுக அரசு Sachin டெண்டுல்கரை சதம் அடிக்க விடாமல் out ஆக்கியது..!!!! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய அணியில் உள்ள அனைவரையும் சதம் அடிக்க வைப்போம்..!!!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த கிரிக்கெட் போட்டிக்கு இலவசமாக டிக்கெட் வழங்குவோம்..!!!!



விஜயகாந்த: நேற்று நடந்த India vs Srilanka அரை இறுதி ஆட்டத்தில்...!!!
வேட்பாளர்: தலைவரே அது India vs Pakistan.....!!!விஜயகாந்த்: பளார்.... பளார்..... பளார்....!!!!!!! மூடு மூடு வாய மூடு... வீட்ட்ல யார்னா பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா.. போ.. போ..!!!



திமுக காங்கிரஸ் கூட்டணியால் india நேற்று அபார வெற்றி பெற்றது..!!!!!




ஆள விடுங்கடா சாமி…!!!

கலைத்துறையில் இந்தக் கருணாநிதி குடும்பம் இருக்கக் கூடாதா? - முதல்வர் வருத்தம்

Ponnar Sankar Audio Releaseசென்னை: சினிமா துறையை எனது வீட்டுத் துறையாக பங்கிட்டுக் கொள்வதாக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நானும் கலைத்துறையைச் சேர்ந்தவன்தான். எனது குடும்பம் கலைத்துறையில் இருக்கக்கூடாதா?, என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.


முதல்வர் கருணாநிதி எழுதிய பொன்னர்-சங்கர் என்ற நாவல் அதே பெயரில் படமாகி இருக்கிறது. கதை-திரைக்கதை வசனத்தை முதல்வர் கருணாநிதி எழுத, நடிகர் தியாகராஜன் இயக்கியுள்ளார். பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை முதல்வர் கருணாநிதி வெளியிட, அதை தொழில் அதிபர்  அருட்செல்வர் பொள்ளாச்சி நா மகாலிங்கம் பெற்றுக்கொண்டார். 

விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

எனக்கு இந்த நேரம் நாட்டில் என்ன வேலை  என்றால் - எங்கேயாவது ஒரு ஊரில் மேடை அமைத்து - அந்த மேடையில் தி.மு.க. கூட்டணி கட்சியின் வேட்பாளர் யாரையாவது அறிமுகம் செய்து - அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிற பெரும் பணி. அந்தப் பணியை ஒத்தி வைத்து விட்டு இந்தப் பணிக்கு நான் வந்திருப்பதற்குக் காரணம் - இந்தப் பணியையும் நான் அந்தப் பணியைப் போலவே மதிப்பதுதான்.

திரைப்பட விழாக்களைத் தவிர்க்கிறேன்...

பொதுவாக இப்போதெல்லாம் திரைப்பட விழாக்கள் - திரைப்பட இசை கேசட் வெளியீட்டு விழாக்கள் - திரைப்படத் தொடக்க விழாக்கள் போன்ற விழாக்களில் கலந்து கொள்ள எனக்கு ஒரு வகையிலே அச்சம். ஏனென்றால் அந்த விழாவைத் தொடர்ந்து திரை உலகத்திலே இருக்கின்றவர்களே கூட, அதை விமர்சிக்கின்ற வகையில் அந்த நிகழ்ச்சியை விமர்சித்தால் கூட பரவாயில்லை - அதை வைத்து என்னையே விமர்சிக்கின்ற வகையில் நிலைமை ஏற்பட்டிருக்கின்ற காரணத்தால் கூடுமான வரையில் அத்தகைய நிகழ்ச்சிகளை-ஆங்கிலத்திலே சொல்வார்களே avoid என்று- அப்படி தவிர்ப்பதை நான் மிகுந்த அக்கறையோடு கையாண்டு வருகிறேன்.

இன்றைக்கு நாம் மிகுந்த மகிழ்ச்சியடையக் கூடிய அளவிற்கு - இந்தப் படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள். ஒரேயொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் தியாகராஜனுடைய கைகளை எடுத்து முத்தமிட்டுக் கொள்ளலாம் - அந்த அளவிற்கு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பிரசாந்தின் கன்னத்தில் அந்த முத்தத்தைத் தரலாம் - அந்த அளவிற்கு தம்பி பிரசாந்த் இரு வேடங்களில் இதிலே நடித்திருக்கிறார்.

சினிமா துறையைவிட்டு...

இவைகளையெல்லாம் நான் பேசினால் இந்தப் படத்தினுடைய பாடல்களை - உரையாடல்களை - நடிப்பை - இசையை - இசையமைத்த நம்முடைய இசைஞானி அவர்களைப் பாராட்டினால் கருணாநிதி சினிமா உலகத்தை விட்டு என்றைக்கும் வெளியே வரமாட்டான் இந்தக் கருணாநிதி என்று எனக்கு ஜாதகம் கணிப்பார்கள். அது கணிக்கப்பட வேண்டிய ஜாதகம். அப்படித்தான் என்னுடைய ஜாதகம் கணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். 

சினிமா உலகத்தை விட்டு - திரைப்படத் துறையை விட்டு - எழுத்துத் துறையை விட்டு கருணாநிதி வெளியே வர மாட்டான் என்று சொல்வதை விட ஒரு சிலாக்கியமான, நல்ல மதிப்புரை வேறு யாரும் எனக்குத் தர இயலாது.

ஏனென்றால் நான் அரசியல்வாதியாக இருந்தாலுங்கூட, இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கின்ற முதல்வராக இருந்தாலுங்கூட, என்னுடைய எண்ணம் எல்லாம், என்னுடைய ஆர்வம் எல்லாம் எழுத வேண்டும் - எழுத வேண்டும் - எழுத வேண்டும் என்பதிலேதான். எழுத்தை மறந்து விட்டு - இந்தக் கலைத் துறையை விட்டு - இலக்கியத் துறையை விட்டு விட்டு - அரசியல் துறையிலே மாத்திரம் நாட்டம் செலுத்த வேண்டுமென்றால் அது என்னால் இயலாத காரியம். 

எனவேதான் அரசியல் துறையிலே ஈடுபட்டிருக்கின்ற இந்த நேரத்திலே கூட கலைத்துறைக்குத் தர வேண்டிய மதிப்பை அளிப்பதற்காக அழைத்தவுடன் ஏற்றுக் கொண்டு இன்று உங்களையெல்லாம் காணுகின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.

என் வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கா?

பொதுவாக நான் இந்த விழாவிலே இதையெல்லாம் பேசுவது சரிதானா என்பது எனக்கே கூட - என் உள்ளத்தின் அடித்தளத்திலே எழுகின்ற வினாவாக இருந்தாலுங்கூட, பேசித் தான் தீர வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் அழுத்தந் திருத்தமாக இருக்கிறேன். நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். 

ஒரு பெரியவர்(?) அரசியலிலே நானே கருதிக் கொள்கிறேன் - என்னை விட சிறந்தவராகவோ அல்லது என்னை விட திறமையானவராகவோ இருப்பவர் (?) என்று சிலரால் கருதப்படுபவர் - சொல்லியிருக்கிறார் - கருணாநிதி சினிமா துறையையும் தன்னுடைய வீட்டுப் பிள்ளைகளுக்கு பங்கு போட்டுக் கொண்டு அதிலும் கொள்ளை அடிக்கிறார் என்று!

சினிமா துறையில் என்னுடைய மகன் முத்து நடித்தான். அதற்குப் பிறகு என்னுடைய இன்னொரு மகன் தமிழரசு ஒரு படத்தைத் தயாரித்தான், அடுத்த படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 

ஆனால் நான் அந்த விமர்சகரைக் கேட்க விரும்புகிறேன். அந்த விமர்சகர் சொன்னதை வெளியிட்டு மகிழ்கின்ற பத்திரிகைக்காரர்களைக் கேட்க விரும்புகிறேன். என் குடும்பத்திலே மாத்திரம்தானா மூன்று நான்கு பேர் சினிமா துறையிலே இருக்கிரார்கள்? மன்னிக்க வேண்டும் - ஏ.வி.எம். குடும்பத்தினர்கள் - செட்டியார் யார், அவருடைய பிள்ளைகள் ஏ.வி.எம். சரவணன், இப்படி ஏ.வி.எம். ஏ.வி.எம். என்று பல பெயர்கள் பத்திரிகைகளிலே வருகிறது. பல பெயர்கள் பட்டியலிடப்படுகின்றன. 

நான் அதைக் குற்றமாகச் சொல்லவில்லை. ஏ.வி.எம். வீட்டுப் பிள்ளைகள் மூன்று பேர், நான்கு பேர், அவருடைய குடும்பத்தார் கலைத்துறையிலே இருக்கலாம், என்னுடைய வீட்டிலே உள்ளவர்கள் கலைத் துறையிலே ஏன் இருக்கக் கூடாது என்று எனக்கே தெரியவில்லை.

கலைக் குடும்பம் என்று நான் இந்தக் குடும்பத்தையே கலைக் குடும்பமாக நான் ஆக்கியிருக்கும்போது - இதிலே நான் மாத்திரம் என்ன - வைரமுத்து இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? ராமநாராயணன் இங்கேயிருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? தம்பி பிரசாந்த் இருக்கிறார், அவர் என்னுடைய குடும்பம் அல்லவா? எல்லோரும் என்னுடைய குடும்பம்தான்.

கலைத்துறைக்கு விரோதியாக...

அதனால்தான் கடந்த ஐந்தாண்டு காலத்தில் என்னுடைய தலைமையிலே இயங்குகின்ற இந்த ஆட்சியில் - கடந்த காலத்தில் எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவிற்கு அவ்வளவு உதவிகள், அவ்வளவு சலுகைகள் திரைப்பட உலகத்திற்காகச் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். 

இதற்கு முன்பெல்லாம் வெளிப்புறக் காட்சி ஒன்றை படமாக்க வேண்டு மென்று - ஒரு படத்தயாரிப்பாளர் நினைத்தால், ஏதோ ஒரு மண்டபம், ஏதோ ஒரு அரண்மனை முகப்பு தேவை என்று எண்ணினால் - ராஜாஜி மண்டபத்திலே உள்ள படிக்கட்டுகளையும், முகப்பையும் படம் எடுக்கவேண்டுமென்றால், ஒரு நாள் வாடகையாக ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டுமென்று இருந்தது. அதைக் குறைத்து ஐந்தாயிரம் ரூபாயாக ஆக்கியவன் கருணாநிதி. ஆனால் கலைத் துறைக்கு இன்றைக்கு நான் விரோதியாக ஒரு சிலரால் கருதப்படுகிறேன் என்பதுதான் வேடிக்கை, ஆச்சர்யம்.

எனக்கு குடும்பம் இருக்கிறதே...

தமிழ்நாட்டிலே தான் இன்றைக்கு கேளிக்கை வரி இல்லாமல் படங்களை வெளியிடலாம் என்ற அற்புதத்தைச் செய்திருக்கிறோம். ஆனால் இதற்கு எனக்கு தரப்படுகின்ற பரிசு என்ன தெரியுமா? நான் படம் எடுத்து - படத்தயாரிப்பாளர் களிடையே பெரிய அளவுக்கு நான்தான் மற்ற தயாரிப்பாளர்களை எல்லாம் கெடுக்கிறேன் - அவர்களுக்கெல்லாம் போட்டியாக என்னுடைய குடும்பம்தான் இருக்கிறது என்கிறார்கள். 

நானும் பார்க்கிறேன். எதற்கெடுத்தாலும் என்னுடைய குடும்பம், என்னுடைய குடும்பம் என்று இதுதான் அவர்கள் கண்ணிலே படுகிறது. என்ன செய்வது? எனக்கு குடும்பம் இருக்கிறதே? குடும்பத்தை நானே ஒழித்து விட முடியுமா? குடும்பம் இருப்பதால் அதிலே உள்ள பிள்ளைகள் - உறவினர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். 

இந்தத் துறைக்கு வருகிறவர்கள் எல்லாம் ஏதோ ஏகாதிபத்தியத்தை - ஏகபோகத்தை இந்தத் துறையிலே அனுபவிக்க வேண்டும் என்று என்னால் அனுப்பப்படுகிறவர்கள் என்று சொன்னால், அது நியாயமா? சரி தானா? என்பதை இந்தத் துறையிலே பணியாற்றுகின்ற நீங்கள் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நிழலோடு போராட்டம்:

ஆனால், சில பேருக்கு - யாரும் போராடுவதற்கு எதிரே வராவிட்டால், நிழலோடுவாவது போராடுவார்கள். நிழலோடு போராடிப் போராடிப் பழக்கம். அவர்கள் இப்படி நிழலோடு போராடி, என்னை - முதலமைச்சராக இருக்கிற என்னை விமர்சித்தால்தான், அவர்கள் நடத்துகின்ற எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு - அவர்கள் எண்ணி இருக்கின்ற புதிய கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று கருதி, இன்று தங்களுடைய நேரத்தைச் செலவிடுவது நல்லதல்ல; அவர்கள் என்னதான் என்னை அழிப்பதற்கு, எனக்குத் தோல்வியை தருவதற்குப் பாடுபட்டாலும்கூட, நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன் - அவர்களுடைய மேன்மைக்காக, அவர்களுடைய நன்மைக்காக, அவர்களுடைய வளர்ச்சிக்காகத்தான் நான் என்றைக்கும் பாடுபடுவேன் என்ற அந்த உறுதியை மாத்திரம் நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா:

இந்த படத்திலே வரப்போகின்ற வெற்றிகளுக்கு என்னுடைய உரையாடல் மாத்திரம் காரணமாக இருக்க முடியாது; நான் எழுதிய திரைக்கதை மாத்திரம் காரணமாக இருக்க முடியாது. இதிலே இசையமைத்த என்னுடைய அருமைத்தம்பி இளையராஜாவை நான் பாராட்டாமல் இருக்க முடியாது. 

எந்தக் கதையை அவரிடத்திலே கொடுத்து, இசையமைக்க வேண்டுமேன்று கேட்டாலும், முதலில் கதையின் தரம் என்ன - கதையின் போக்கு என்ன - கதையின் கதாபாத்திரங்கள் யார் - கதை நடைபெறுகின்ற காலம் எது - என்பவைகளை எண்ணிப் பார்த்து, அதற்கேற்ப இசையமைக்கக்கூடிய ஆற்றல், தமிழ்நாட்டிலே ஒருவர், இருவருக்குத்தான் உண்டு. அவர்களிலே ஒருவர் நம்முடைய இசைஞானி இளையராஜா என்றால், அது மிகையாகாது. அவருக்கு "இசைஞானி'' என்ற பட்டத்தைக் கொடுத்ததும் நான்தான். 

நல்ல காலம் - பட்டம் பெற்று, இவ்வளவு நாளுக்குப் பிறகும், அவர் விரோதமாகாமல் இருக்கிறார். ஏனென்றால், பல பேர் - வைரமுத்து தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது - பல பேர் என்னிடத்திலே பட்டம் பெற்றவர்கள் எல்லாம், திரும்ப என்னை எதிர்க்கின்ற, பகைத்துக் கொள்கின்றவர்களாகத்தான் இருந்திருக்கின்றார்கள். நான் அதற்காகப் பட்டத்தை திரும்ப வாங்கிடவா முடியும்? கொடுத்தது கொடுத்ததுதான்.

இந்தப் படம் மிக வெற்றிகரமாக ஓடக் கூடிய படம். பொன்னர், சங்கரைப் போன்ற பல புதினங்கள் - சரித்திரப் பிரசித்தி பெற்ற கதைகள் - நம்முடைய தமிழ்நாட்டினுடைய மக்களின் ஊக்கத்தை, வீரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தட்டும் என்கின்ற அந்த ஆசையை வெளியிட்டு நீங்கள் என்னை இந்த விழாவிற்கு அழைத்தமைக்காக நன்றி கூறி விடைபெறுகிறேன், என்றார்.

பொள்ளாச்சி மகாலிங்கம்:

தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வாழ்த்திப் பேசுகையில், 'கொங்கு மண்டல வரலாற்றை அருமையான நவீனமாகக் கொடுத்திருந்தார் முதல்வர் கலைஞர். எதையும் சினிமா என்ற ஊடகம் மூலம் சொல்லும்போது, அதன் வீச்சு பல மடங்காகிறது. இப்போது பொன்னர் சங்கர் கதை சினிமா வடிவில் வருவதால், கொங்கு மண்டலத்தின் பெருமை உலகம் முழுக்க பரவப் போகிறது. அது ஆழந்த மகிழ்ச்சியைத் தருகிறது", என்றார்.

விழாவில் இசை அமைப்பாளர் இளையராஜா, மத்திய அமைச்சர் நெப்போலியன், கவிஞர் வைரமுத்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் வா.செ.குழந்தைசாமி, சிலம்பொலி செல்லப்பன், டாக்டர் பழனி பெரியசாமி, கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். 

விழாவில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி , கலைஞர் டி.வி. நிர்வாகி அமிர்தம், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம், பட அதிபர் ஆறுமுகனேரி முருகேசன், நடிகர் விஜயகுமார், நடிகை பானு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக நடிகர் பிரசாந்த் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். முடிவில் நடிகர் தியாகராஜன் நன்றி கூறினார். 

முன்னதாக பிரசாத் லேப் ஸ்டூடியோவில் முதல்வர் கருணாநிதிக்கு பொன்னர்-சங்கர் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதை அவர் சுமார் 2.30மணி நேரம் பார்த்தார். படம் பிரமாதமாக வந்திருப்பதாகப் பாராட்டினார்

Monday, April 4, 2011

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற அதிமுகவுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க: நடிகர் ஆனந்த்ராஜ்


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து நடிகர் ஆனந்த்ராஜ் திறந்த வேனில் பிரசாரம் செய்தார். அவர் வேடசந்தூர், எரியோடு, பூத்தாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
அதிமுக தேர்தல் அறிக்கையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச கம்யூட்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு்ள்ளது. அவர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பிலா ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் கருணாநிதியோ கல்லூரி மாணவர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு மட்டும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தாய்மார்களுக்கு மிக்சி அல்லது கிரைண்டர் வழங்கப்படும் என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதாவோ மிக்சி, கிரைண்டர் இரண்டும் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். மேலும், தாய்மார்கள் மிக்சி, கிரைண்டர் பயன்படுத்தும்போது வியர்க்காமல் இருக்க மின்விசிறியையும் சேர்த்து தருவதாக கூறியுள்ளார்.
அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது அதிமுக தேர்தல் அறிக்கை. எனவே, அனைவரும் அதிமுக வேட்பாளர் பழனிச்சாமிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாங்கள் வெற்றி பெற்ற பிறகு இதே இடத்தில் மேடை போட்டு நாங்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றார்.

வடிவேலு அடி வாங்குற நேரம் நெருங்கிடுச்சி: விந்தியா

சினிமாவில் அடிவாங்கி காமெடி பண்ணும் வடிவேலு நிஜத்தில் அரசியலில் அடி வாங்குற நேரம் வந்துடுச்சி என்று நடிகை விந்தியா கூறியுள்ளார். அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகை விந்தியா, வடிவேலுவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்.


நடிகர் வடிவேலு, விஜயகாந்தைப் பற்றி ஏக வசனத்தில் பேசி பிரசாரம் செய்து வருகிறார். அவரது பிரசாரத்தை கட்சி பாகுபாடு இல்லாமல் ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்து சிரிக்கிறார்கள். வடிவேலுவின் பிரசாரம் மக்களை எளிதில் சென்று வருவதாலோ என்னவோ ஆளும்கட்சி தொலைக்காட்சிகளில் வடிவேலு பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதுஒருபுறம் இருக்க, திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை விந்தியா பிரசாரத்தில் குதித்துள்ளார். நேற்று அவர் ‌பிரசாரத்தின்போது பேசுகையில், வடிவேலு ஒரு காமெடி பீஸ். அவரால திமுகவும் இப்போ காமெடி பீஸா தெரியுது. திமுககிட்ட எவ்வளவு வாங்குனாரோ தெரியல. வாங்குனதுக்கு வஞ்சமில்லாம பேசிக்கிட்டு திரியறாரு. இவரு வந்து கேப்டனை ஒழிச்சிக் கட்டுவாராம். இதை விட மிகப் பெரிய காமெடி ஒண்ணுமே இல்லைங்க. சினிமாவில கூட இந்த மாதிரி காமெடியை நான் பார்த்ததில்லை. மக்களுக்கு நல்லது செய்ய அம்மாவுடன் சேர்ந்திருக்கிற நல்லவர் கேப்டன். கேப்டனின் லெக் கிக்; பஞ்ச் பவர் பற்றி தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். பொதுவா சினிமாவில் வடிவேலு அடி வாங்கி அடி வாங்கித்தான் காமெடி பண்ணூவார். அவர் அரசியலில் இன்னும் அடிவாங்கல. இப்போ அதுக்கான நேரம் வந்துடுச்சி போலிருக்கு. அடி வாங்குறதுக்காகத்தான் இப்படி பேசுறாரு, என்றார்.