வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, July 30, 2011

ஸ்பெக்ட்ரம் நடந்தது என்ன?

ஒரு சராசரி குடிமகன் பார்வையில்தேசிய  அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர்.இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல் நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யலாம்.மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் தமிழக முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.Error! Filename not specified.1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.Error! Filename not specified.நியாயக் கணக்கு: இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.அப்போது 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும்.

என்னிடம் என்ன இருக்கு? த்ரிஷா கேள்வி!!


என்னிடம் என்ன இருக்கு? ரசிகர்களுக்கு த்ரிஷா கேள்வி!!


என்னிடம் என்ன இருக்கிறது என்று என்னைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புகிறார்கள்? என நடிகை த்ரிஷா, ரசிகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். கிசுகிசுவுக்கும், த்ரிஷாவுக்கும் ரொம்பவே நெருக்கம் அதிகம்.

வாரத்திற்கு ஒரு கிசுகிசுவாவது அம்மணியைப் பற்றி வந்துவிடும். அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் செய்தி, அம்மணிக்கும், அமெரிக்க தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும், மாப்பிள்ளையை த்ரிஷாவின் தாயார் உமா தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதுதான். இதனை மறுத்துள்ள த்ரிஷா, வதந்திகளை பரப்புபவர்களையும், ரசிகர்களையும் வசை பாடியிருக்கிறார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். எந்த ரகசியமும் இல்லை. ஆனாலும் என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. கற்பனையான செய்திகளை பரப்புகிறார்கள். எனக்கு அமெரிக்க மாப்பிள்ளையை பார்க்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. ஒரு நடிகருடன் திருமணம் நடக்கப் போவதாகவும் வதந்திகள் பரவி உள்ளது. இப்படி என் திருமணத்தை பற்றி விதவிதமான செய்திகள் வந்தபடி உள்ளன. ரசிகர்களுக்கு இதனால் என்ன பயன் என்று எனக்கு புரியவில்லை. நடிகைகளின் சொந்த வாழ்க்கைப்பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் விரும்புவதாகவும் அதனால்தான் இதுபோன்ற செய்திகள் வருவதாகவும் கூறுகின்றனர்.
என்னிடம் என்ன இருக்கிறதென்று ரசிகர்கள் என்னைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என தெரியவில்லை. இதைத் தெரிந்து கொண்டு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நான் ரகசிய திருமணம் செய்ய மாட்டேன். எந்த விஷயத்தையும் பகிரங்கமாக அறிவித்து விட்டுதான் செய்வேன். ரசிகர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசியுடன்தான் எனது திருமணம் நடைபெறும், என்று கூறியுள்ளார்.

விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை…


விஜய் படப்பிடிப்பில் பெரும் ரகளை… கேரவனை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்


நடிகர் விஜய்யின் நண்பன் படப்பிடிப்பில் ரசிகர்கள் திடீரென்று புகுந்த ரகளை செய்தனர். கேரவனை அடித்து நொறுக்கினர்.

இந்தியில் ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் தயராகிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கின்றனர். எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் இயக்கும் படம் இது.
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு சில தினங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இன்றைய படப்பிடிப்பின்போது 200 பேர் திடீரென அந்தக் கல்லூரிக்குள் நுழைந்துவிட்டனர். அவர்கள் விஜய் உள்ளிட்ட நடிகர்களை பார்க்க முண்டியடித்தனர்.
நிலைமையை உணர்ந்து விஜய், ஜீவா போன்றோர் ரசிகர்களைச் சந்தித்து கையசைத்து விட்டுச் சென்றார்கள்.
ஆனால் கூட்டத்தினர் திரும்பிச் செல்லவில்லை. அவர்கள் படப்பிடிப்பு அரங்குக்குள் நுழைந்து நடிகர்களின் கைகளை பிடித்து இழுக்க துவங்கினர். இதனால் படப்பிடிப்பை ஷங்கரால் நடத்த இயலவில்லை.
ரசிகர்களிடம் கலைந்து செல்லும்படி வேண்டினார். அவர்கள் போகவில்லை. அரங்குகளை சேதப்படுத்தி ரகளை செய்தனர். கேரவன் கண்ணாடிகளையும் உடைக்க ஆரம்பித்தனர். அவர்களின் இந்த நடவடிக்கையால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சியானார்கள்.
உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை வெளியேற்றினர். இந்த சம்பவத்துக்கு பிறகு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

Tuesday, July 26, 2011

எகிறும் வேலாயுதம் பட்ஜெட்….


விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகரித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
காவலன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் வேலாயுதம். விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார். தெலுங்கில் வெளியான ஆசாத் படத்தின் ரீமேக் இந்த வேலாயுதம்.

எகிறும் வேலாயுதம் பட்ஜெட்…. பதறும் ஆஸ்கர் ரவிச்சந்திரன்!


இப்படத்திற்கான பட்ஜெட் ஆரம்பத்தில் ரூ.35 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது கிராபிக்ஸ், பாடல்களில் பிரமாண்டம் என நிர்ணயித்த பட்ஜெட்டையும் தாண்டி ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம்.
இதனால் தயாரிப்பாளர் அதிர்ந்து போயிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய சூழலில் முதல் ஒரு வாரத்தில் இந்த ரூ 45 கோடியை விஜய் படம் வசூலித்துத் தருமா என்ற சந்தேகம்தான்.


இயக்குநர் சந்திரசேகரன் மற்றும் விஜய் ஆகியோர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருப்பதால், திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் பெரிய அளவு பிரச்சினை இருக்காது.
மேலும் ஓவர்சீஸ் மற்றும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஓரளவு வசூல் கிடைக்க வாய்ப்புள்ளது இந்தப் படத்துக்கு. இந்த இரண்டு நம்பிக்கைகளில்தான் தயாரிப்பாளர் தைரியமாக படத்தை ரிலீஸ் செய்கிறாராம்.
மேலும் விஜய் படங்கள் கேரளாவில் ஓரளவு ஓடக் கூடியவை என்பதால், ஓரளவு நம்பிக்கையுடன் உள்ளாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன்

மங்காத்தாவில் அஜீத்தின் அரசியல் பஞ்ச்!


கடந்த ஆட்சிகாலத்தில் பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்ற பெயரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் சார்பில் எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் அரசியல்வாதி கெட்அப்பில் கலந்து கொண்டு அஜீத் பேசிய பேச்சு எப்படியெல்லாம் சர்ச்சையை உருவாக்கியது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அந்த சர்ச்சைகளால் அஜீத் சந்தித்த பிரச்சனைகளும் ஏராளம். நாங்கள் அரசியல்வாதிகள் இல்லை; சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகர்கள்; எங்களை வலுக்கட்டாயமாக இதுபோன்ற விழாக்களுக்கு அழைக்காதீர்கள் என்று அதிரடியாக பேசி, ஒட்டுமொத்த திரையுலகின் கைத்தட்டலைப் பெற்ற அஜீத், தற்போது மங்காத்தா படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கும் இப்படத்தினை டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளதால் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறிவிட்டுள்ளது. இதனிடையே தினமும் மங்காத்தா பற்றி புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் தகவல், மங்காத்தாவில் அஜீத்தின் அரசியல் பஞ்ச்கள் இடம்பெற்றுள்ளன என்பதுதான். எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டு நிற்கும் அஜீத், தன் படங்களில்கூட அரசியல் வசனங்களை தவிர்ப்பார். கடந்த ஆட்சிகாலத்தில் அரசியல்வாதிகளால் தான் உள்பட திரைத்துறையை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டதால், மங்காத்தாவில் அரசியல் வசனங்களை அனுமதித்திருப்பாரோ என்னவோ?

Wednesday, July 20, 2011

சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்., சொல்கிறார் டி.ஆர்.,!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா. பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் “அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.,” என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது. இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் கூறியதாவது, சிம்புவின் வானம் படத்தை 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை ரெடி பண்ணியது நான் தான். இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே. சினிமா வாழ்க்கையில் சிம்புவும், எம்.ஜி.ஆர்., போன்ற நிலைமையை அடைய வேண்டும். அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம். அதற்காக சிம்புவை நான் தயார் பண்ணி வருகிறேன். அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான். மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர்., எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன். எம்.ஜி.ஆர்., மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லாம் தகுதியும் இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான்.
தற்போது நான் ஒரு தலைக்காதல் படத்தை இயக்கி வருகிறேன். இந்த படம் ஒரு அழகான காதல் கதை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறேன். விரைவில் ஒரு தலைக்காதலுடன் உங்களை சந்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, July 19, 2011

22,500 கோடி கடன்பாக்கி இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை!

ரூ.22,500 கோடி கடன் பாக்கியை செலுத்தவில்லை என்றால், இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்துவோம் என ஈரான் கூறியுள்ளது. 


சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, ஈரான் நாட்டில் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

 மாதத்துக்கு 1 கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஈரானிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. இதற்காக செலுத்தப்படும் பணம் ஜெர்மனியின் சென்ட்ரல் பாங்க் மூலம் செலுத்தப்பட்டு  வந்தது.

 அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால் ஈரானுக்கு சர்வதேச நாடுகள் தடை விதித்திருந்தன. இதனால் ஜெர்மனி வங்கி மூலமாக ஈரானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பணம் செலுத்துவது தடைபட்டது.

 மாற்று வழியில் ஈரானுக்கு பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கடன் பாக்கி ரூ.22 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்தது

. இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் எண்ணெய் அமைச்சக அதிகாரி ஒருவர், இந்தியா கடன்பாக்கியை செலுத்தவில்லையென்றால்,
 அடுத்த மாதம் 1ம் தேதி முதல் கச்சா எண்ணெய் அனுப்பமாட்டோம் என கூறியுள்ளார்.

டோனியின் பேட் 72 லட்சத்திற்கு ஏலம்!

உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கேப்டன் டோனி பயன்படுத்திய அவரது பேட் ரூ. 72 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.


 அவரது அறக்கட்டளைக்கு நிதி சேகரிப்பதற்காக இந்த ஏலம் நடத்தப்பட்டது. இந்த பேட்டை வைத்துத்தான் இலங்கைக்கு எதிராக ஏப்ரல் மாதத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 91 ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தார் டோனி என்பது குறிப்பிடதக்கது. 
இதே ஏலத்தில் டோணி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைக் கெளரவிக்கும் வகையில், உலகப் புகழ் பெற்ற கலைஞர் சச்சா ஜாப்ரி உருவாக்கிய கலைப்படைப்பும் ஏலத்தில் விடப்பட்டது. சமூகத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளஞ்சிறார்கள் மத்தியில் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறக்கட்டளை செயல்படும் என்றார் டோனி தெரிவித்தார்.

ஐயம் ஹேப்பி - அ‌‌ஜீத்

அ‌‌ஜீத்துக்கு இத்தனை திருப்தியுடன் ஒரு படம் இதுவரை அமைந்திருக்குமா தெ‌ரியாது. மங்காத்தா குறித்த பேச்சில் திருப்தி வழிகிறது. ஒவ்வொரு வார்‌த்தையின் இறுதி ஐயம் ஹேப்பி என்பதாகவே இருக்கிறது.



மங்காத்தா அ‌‌ஜீத்தின் 50வது படம். 50வது படமும், 100வது படமும் காலை வாரும் என்பது கோடம்பாக்க சென்டிமெண்ட். விதிவிலக்கு எம்‌ஜிஆரும், விஜயகாந்தும். இந்த வ‌ரிசையில் அ‌‌ஜீத்தையும் மங்காத்தா இடம்பெற வைக்கும்.

மங்காத்தாவில் தனது கதாபாத்திரம் குறித்து அ‌‌ஜீத் முதல் முறையாக பேசியிருக்கிறார். இந்தப் படத்தில் நான் கெட்டவனாக வருகிறேன். மொத்தம் 5 கெட்டவர்கள் இதில் இருக்கிறார்கள். அவர்களில் நான்தான் ரொம்ப கெட்டவன். நான் வொர்க் பண்ணியதில் வெங்கட்பிரபுவின் டெடிகேஷன் யா‌ரிடமும் பார்த்தில்லை. அவரது டெடிகேஷன் காரணமாக மங்காத்தா சிறப்பாக வந்திருக்கிறது ஐயம் ஹேப்பி.

யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

Monday, July 18, 2011

இன்பத்தில் மூழ்கினார் நித்தியானந்தா

ஆனந்த தாண்டவம் ஆடினார் ரஞ்சிதா – இன்பத்தில் மூழ்கினார் நித்தியானந்தா

 

பெங்களுரிலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா துள்ளிக் குதித்து நடனமாடியதை நித்தியானந்தா பார்த்து இரசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள பிடரியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் ஆண்டு தோறும் குரு பூர்ணிமா விழாவையொட்டி சிறப்பு யாகங்கள், பூஜைகள், குண்டலினி யோகா போன்றவை நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இவ்வருடம் பிடரி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். பட்டுப்புடவை அணிந்திருந்த ரஞ்சிதா, நித்தியானந்தாவுக்கு பாத பூஜை செய்து அவரது முன் மண்டியிட்டார். அப்போது, ரஞ்சிதாவின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் வழங்கிய நித்தியானந்தா, பின்னர் பெண்கள் அனைவரும் வரிசையில் வந்து அவருக்கு பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெற்றனர்.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்த நித்தியானந்தா முன்பு நடிகை ரஞ்சிதா திடீரென எழுந்து துள்ளிக் குதித்த படி ஆனந்த நடனம் ஆடினார். அவரைப் போல் ஏராளமான பெண்களும் உற்சாக நடனம் ஆடினர். இதை நித்தியானந்தா சிம்மாசனத்தில் அமர்ந்தபடி இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு மனிதனிடமும் குண்டலினி சக்தி உள்ளது எனவும் அதை உயிர்ப்பிப்பதற்காக இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் குண்டலினி யோகாசன பயிற்சி பற்றி நித்தியானந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

Sunday, July 17, 2011

சொக்க வைக்கும் சோனியா!!!


பார்ட்டி, விழாக்கள் என்றால் எல்லோ‌ரின் விழிகளும் விழித்துப் பார்ப்பது இருவரை. இருவரும் ஏறக்குறைய ‌ரிட்டையர்ட் ஸடே‌ஜில் இருப்பவர்கள்.
ஒருவரை முன்பே தெ‌ரியும், நடிகை கஸ்தூ‌ரி. பிள்ளை குட்டிகளுடன் செட்டிலாகும் வயதில் ஒத்தப் பாடலுக்கு ஆடிக் கொண்டிருக்கிறார்.முதுகே இல்லாத ஜாக்கெட், கால்வாசி காஸ்ட்யூம் என பார்ட்டிகளை இவர்தான் சமீபமாக திணறடிக்கிறார். பங்ஷன் என்றாலும் இந்த வெளிப்படை காஸ்ட்யூம்தான்.
இன்னொருவர் சோனியா அகர்வால் விவாகரத்துக்குப் பிறகு இவ‌ரின் கவர்ச்சியில் காயகல்பம் கூடியிருக்கிறது. ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் இவர்தான் நாயகி. தொடக்க விழாவிலேயே பாடலுடன் படப்பிடிப்பை தொடங்கினார் இயக்குனர். அந்த குரூப் டான்சில் சோனியாவின் கவர்ச்சியை பார்த்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். அப்படியொரு கவர்ச்சி. பார்த்து மேடம்… காலைக்காட்சி படத்துக்கு கூப்பிடப் போறாங்க

Saturday, July 16, 2011

தனி அலுவலகம் அமைக்கும் ரஜினி!!!

ராணா'வுக்காக கேளம்பாக்கத்திலேயே தனி அலுவலகம் அமைக்கும் ரஜினி!


Connect with


Rajinikanth

ரஜினி திரும்பி வந்துவிட்டார், முன்னிலும் உற்சாகமாகவும், பொலிவுடனும். அவரைப் பார்க்க கஷ்டப்பட்டு முட்டி மோதி, போலீஸிடம் அடியெல்லாம்பட்டாலும், இந்த ஒரு விஷயத்துக்காகவே வந்திருந்த ரசிகர்கள் தங்களுக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பெரிதுபடுத்தவில்லை.
அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதில் அவர்கள் கவனம் திரும்பிவிட்டது.ரஜினியின் இப்போதைய உடனடி கவனம் ராணாதான். அதற்கு முன் ஒரு மாதம் தன்னை முழுமையான ஃபிட்னஸுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்குகிறார். காரணம் இந்தப் படத்தின் கதை ரஜினியுடையது.

திரைக்கதையை இயக்குநர் ரவிக்குமாருடன் இணைந்து செதுக்கியிருப்பவரும் அவரே. பெரிய பட்ஜெட் படம் என்பதால், எந்திரனை விட மிகப் பிரமாண்ட வெற்றியை ராணா பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
அதற்கேற்ப முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணாவுக்கான எதிர்ப்பார்ப்பு பெருகியுள்ளது.இதையெல்லாம் மனதில் கொண்டு, ராணாவில் புதிய அம்சங்களைச் சேர்ப்பது, இருக்கிற காட்சியமைப்புகளை சரி செய்வது என ரஜினியின் ஒரு மாத கால ஓய்வு கழியப்போகிறது. தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிலேயே புது அலுவலகம் திறந்து இயக்குநர் ரவிக்குமார் மற்றும் முக்கிய கலைஞர்களுடன் படத்தை சிறப்பாக உருவாக்க ஆலோசனைகள் மேற்கொள்ளவிருக்கிறார்.
இன்னும் சில தினங்களில் ரஜினியைச் சந்தித்து உடல் நலம் விசாரிக்க தீபிகா படுகோனேயும் இங்குவர இருக்கிறார்.