வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, May 31, 2011

உங்க காசு எனக்கு வேண்டாம்


நீங்கள் கொடுத்ததே போதும் - விஜய்காந்த்...



ரிஷிவந்தியம் தொகுதியில் நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கும் பணத்தில்,
ஒரு நயா பைசா கூட எடுக்க மாட்டேன். எனக்கு நீங்கள் கொடுத்ததே போதும் என்று தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவருமான விஜயகாந்த் கூறினார்.


ஒரு கட்சியின் தலைவர் என்பதால், என்னால் அடிக்கடி இங்கு வர முடியவில்லை என்றாலும் கூட, உங்களின் தேவைகளை அறிந்து கடமையாற்றுவேன். நான் இங்கு வருவதில்லை என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்வார்கள். இவர்கள் 15 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து என்ன செய்தார்கள்.

மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்...


மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்...



அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 35 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார்.

தற்போது தமிழகத்தில் பச்சை நிற ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம்தோறும் 12 கிலோ முதல்20 கிலோ அரிசி, கிலோ அரிசி ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் ரேஷன் கடையில் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

அந்தியோதயா அரிசித் திட்டத்தின் கீழ் 18.62 லட்சம் பேர் பயன் அடைவர். அதேபோல இதுவரை ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியை வாங்கி வந்தவர்களுக்கு இனி அது இலவசமாக கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் 1.83 கோடி பேர் பயனடைவர். இவர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக கிடைக்கும்.

நாளை ஜெயலலிதா. இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த பின்னர் மாவட்டத் தலைநகரங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள். 
எப்படி இந்த அரிசியைப் பெறுவது என்பது குறித்து உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை ஆணையர் கே.பாலச்சந்திரன் கூறுகையில், 

ரேஷன் கடைகளில் இதுவரை ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை முதல் இலவசமாக அரிசி வழங்கப்படும். இலவச அரிசி எல்லா நாட்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் பொது மக்கள் தங்களுக்கு கிடைக்காதோ என்று கவலைப்பட தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் சென்று பெறலாம்.

இலவச அரிசி வழங்குவதில் குறைபாடு, முறைகேடு நடந்தால் அதுபற்றி தகவல் தெரிவிக்க அனைத்து மாவட்டங்களிலும் புகார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மையம் செயல்படும். 

சென்னையில் உள்ள மையத்தின் தொலைபேசி எண். 28592828. இதில் புகார் தெரிவிக்கலாம். ரேஷன் கடைகளில் இலவச அரிசி வினியோகத்தை கண்காணிக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் ரேஷன் கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்வார்கள். பறக்கும் படை எல்லா மாவட்டத்திலும் அமைக்கப்படுகிறது என்றார்.

முதல் அரசு நிகழ்ச்சி

ஜெயலலிதா முதல்வரான பின்னர் அவர் பங்கேற்கவுள்ள முதல் அரசு நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Monday, May 30, 2011

உரசிய ரசிகர்கள்! உர்ர்ரான அனுஷ்கா!!


அனுஷ்கா சமீபத்தில் வெளிப்புற படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்க சென்றார். தங்கச் சிலைபோல தகதகத்த அனுஷ்காவிடம் ஆட்டோகிராப் வாங்க ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடி விட்டனர். ஆட்டோகிராப் கேட்டு அவரை ‌நெருங்கிய ரசிகர்கள் சிலர் கதகதப்புக்கா அனுஷ்காவை உரசியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அனுஷ்கா, வாய்க்கு வந்தபடி ரசிகர்களை திட்டித் தீர்த்து விட்டாராம்.

இதையடுத்து அங்கிருந்த ரசிகர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு அனுஷ்காவுக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் தெரியாமல் இடித்த ரசிகரை இப்படி திட்டியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், என்று அவர்கள் கூறியதுடன், மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு படப்பிடிப்பு நடத்த முடியாது, என்று கூச்சல் போட ஆரம்பித்தனர். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அனுஷ்கா சம்பந்தப்பட்ட ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடம் பிடிக்கும் அனுஷ்கா!!


விலைமாது கேரக்டர் எனக்கு வேணும்! அடம் பிடிக்கும் அனுஷ்கா!!



வானம் படத்தை எந்த மொழியில் ரீ-மேக் செய்தாலும் அந்த விலைமாது கேரக்டரை எனக்குத்தான் கொடுக்க வேண்டும், என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். தெலுங்கில் வெளியான வேதம் படத்தின் தமிழ் ரீ-மேக்தான் வானம். சிம்பு நாயகனாக நடித்த இப்படத்தின் நாயகியாக அனுஷ்கா நடித்திருந்தார். பரத், வேகா, பிரகாஷ் ராஜ், சோனியா அகர்வால் என பல முன்னணி நட்சத்திரங்கள், முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தாலும், அனுஷ்காவின் விலைமாது கேரக்டர்தான் ரொம்பவே பேசப்பட்டது.

இந்நிலையில் அனுஷ்கா அளித்துள்ள பேட்டியொன்றில், தெலுங்குப் படங்கள் ஆர்ப்பாட்டமானவை. ஆனால் தமிழ்ப் படங்கள் ஆழமானவை… யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை. எனக்கு இந்த இருவகைப் படங்களிலும் நடிப்பது சுவாரஸ்யமாக உள்ளது. வானம் படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தேன். அதன் ஒரிஜினல் படமான வேதம் படத்திலும் இதே கேரக்டரை நான் செய்திருந்தேன். எந்த மொழியில் அந்தப் படத்தை ரீமேக் செய்தாலும் அந்த வேடத்தை நானே செய்ய விரும்புகிறேன். அந்த கேரக்டரை எனக்குத்தான் தர வேண்டும் என்று டைரக்டரிடம் கேட்பேன், என்று கூறியுள்ளார்.

முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடிக்கத் தயங்குகிற கேரக்ரை விரும்பி கேட்டுப் பெறுவேன் என்று சொல்லும் அனுஷ்கா, தன் அழகு ரகசியம் யோகாதான் என்று கூறுகிறார். ஒரு யோகா டீச்சராக வாழ்க்கையை தொடங்கிய அனுஷ்கா, 12 வயதிலிருந்து யோகா செய்து வருகிறாராம். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது யோகா செய்து விடுவாராம்.

ஹீரோவாகிறார் நமீதா!


கவர்ச்சி கன்னியாக, கனவு தேவதையாக இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நாயகி நமீதா, ஹீரோவாக களம் இறங்குகிறார் என்றால் நம்பமுடியாமல் தான் இருக்கும், இனி அவர் தூங்காமல் இருக்கப் போகிறார், பிரியம் கிரியேஷன்ஸ் சார்பில், எஸ்.ஆர்.மனோகரன் தயாரிப்பில், பிரபல இயக்குநர் மங்கை அரிராஜன் இயக்கத்தில் நமீதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
சாதாரண கேரக்டரில் இல்ல, காக்கி சட்டையில் கலக்கப் போகிறாராம்.
இதற்காக சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார் நமீதா. “இ‌ளமை ஊஞ்சல்” என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இப்படம், சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், மற்றும் பிரான்சில் படமாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

Sunday, May 29, 2011

Come, join me at the Rummy tables on Ace2Three.com!

Hi,

I love playing Indian Rummy at Ace2Three.com, the first and best rummy site in India!

Feel the excitement and thrill at the regular, cash and multi-table tourneys and win cash prizes instantly!
Click on the link below to register and join me at the tables!

http://www.ace2three.com/track.jsp?trackid=gry94jwx05xos6m

Thanks - see you at Ace2Three.com!

Monday, May 23, 2011

நான் கல்வியமைச்சரானால்....(வெளங்கிரும்!)


நான் கல்வியமைச்சரானால்.....!!



+2 கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும்! (வெளங்கிரும்!)

1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது?

(அ) தமிழ்      (ஆ) துளு       (இ) பாரசீகம்

2. கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்

2(அ).முதுமக்கள் தாழி எனப்படுவது யாது?

2(ஆ).அண்மையில் தனுஷ்-ஸ்ரேயா நடிப்பில் வெளியானமூன்றெழுத்துத் திரைப்படம் எது?

(i) மெட்டி
(ii) சட்டி
(iii) பெட்டி
(iv) குட்டி

3.கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது

(அ) புல் வெட்டுவது
(ஆ) பஞ்சர் ஒட்டுவது
(இ) ஊதுபத்தி விற்பது
(ஈ) கவிதை எழுதுவது

4. திருக்குறளில் அறத்துப்பால்பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது?

(அ) இன்பத்துப்பால்
(ஆ) மசாலா பால்
(இ) ஆவின் பால்

5. முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால்! (தோராயமாகச் சொல்லவும்)

6. கடியாரத்தில் பெரிய முள் 12-லும் சிறிய முள் 5-லும் இருந்தால் எத்தனை மணி? (4-க்கும் 6-க்கும் இடைப்பட்ட எண்)

7. ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை

8. தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம்

(அ) வட இந்தியர்கள்
(ஆ) பஜ்ஜி இந்தியர்கள்
(இ) போண்டா இந்தியர்கள்

9. எது பல்குத்த உதவும்?
(அ) துரும்பு (ஆ) கரும்பு (இ) இரும்பு

10. மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
(அ) மன்னார்குடி (ஆ) மாமண்டூர் (இ) மதுரை

11. ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?

12. உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன

13. இந்தியாவின் தேசியப்பறவை எது?

(அ) மயில் (ஆ) காக்காய் (இ) இரண்டும் இல்லை

14. புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமாமுடியாதா?

(அ) முடியும் (ஆ) முடியாது

15. பதினான்கு தளங்கள் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது?

16. ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும்?

(அ) கரடி (ஆ) காண்டாமிருகம் (இ) ஆடு

17. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது

(அ) துவரங்குறிச்சி
(ஆ) ஆழ்வார்குறிச்சி
(இ) கல்லிடைக்குறிச்சி

18. உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால்மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?

19. BBC (Briish Broadcasting Corporation) என்பதன் விரிவாக்கம் என்ன?

20. உங்களது முழுப்பெயரை எழுதுக (எழுத்துப்பிழை தவிர்க்கவும்)

தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் - 2050 ல்


2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா ?

இப்படித்தான்...

தமிழ்



முதலில் "கடவுள் வாழ்த்து"
மொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி
திருக்குவளை தீய சக்தியே போற்றி
மஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி
காகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி
கனிமொழியின் தந்தையே போற்றி
செம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி
அஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி
தளபதியின் தந்தையே போற்றி
மானாட மயிலாட தந்த மன்னவா போற்றி
குஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி
வீல் சேரில் வரும் வில்லனே போற்றி
சிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி
ஈழத்தை அழித்த இதயமே போற்றி
தமிழின துரோகியே போற்றி போற்றி

 அடுத்து மொழி வரலாறு.
தமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.
தமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.
20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன.  2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.

21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.

 கணிதம்.
திருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வந்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.

அடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.

பத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக   பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.
1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது.  2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.
புவியியல்
உதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர்.  முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.
தலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.
 வரலாறு
தமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது.  முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார்.  அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.
கருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயகுமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது.  உதயகுமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.
கருணாநிதிக்கு மூன்று மகன்கள்.  ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன். 
திருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் மிகச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.
தா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன்.  அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.
அடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார்.  21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.
பட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்.... 

பாடங்களைக் கவனத்துடன் படித்துப் பட்டம் வாங்கியவர்சட்னி-சாம்பார்



Sunday, May 22, 2011

முதல்வருக்கு ஒரு கடிதம்.

முதல்வருக்கு ஒரு கடிதம்... 



மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு.....,
தேர்தலின் போது மட்டுமே உங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு மகேசனாக தெரியும் ஒரு சாதாரண வாக்காளன் எழுதிக்கொள்வது, 

நீங்கள் நலமாக இருப்பீர்கள், ஆனால், நாங்கள் நலமாக இல்லை.... மூன்றாவது முறையாக முதல்வரானதிற்கு வாழ்த்துக்கள். தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் அசுர பலத்துடன் மீண்டும் இவ்வளவு பெரிய வெற்றியடைந்ததற்கு உங்களின் ராஜதந்திரமோ, கூட்டணி பலமோ, களப்பணியோ காரணமில்லை, முந்தைய ஆட்சியாளர்களின் இமாலய தவறுதான் என்று நீங்களும் உணர்ந்தே இருப்பீர்கள்

ஒரு கட்சி இப்படி அசுர பலத்துடன் ஆட்சிக்கு 
வருவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல....  

 இடிப்பார் இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லாமல் கெடும். என்பது வள்ளுவரின் குறள்.   இடித்து சொல்லவும், எடுத்துசொல்லவும் வாய்ப்பே இல்லாமல் உங்கள் கூட்டணி கட்சியே எதிர்கட்சியாகவும் மாறிவிட்டது. 

(தொடர்ந்து விஜயகாந்த் உங்கள கூட்டணியில் இருப்பாராவென்று சந்தேகமே...கூட்டணியிலிருந்து உங்களால் விரட்டப்படலாம், அல்லது அவரே விலக நேரிடலாம் ஆனால் அதுவரை....உங்கள் தவறுகளை எடுத்து சொல்ல யார் இருக்கிறார்கள்?)  பரவாயில்லை,


 இதுதான் மக்களின் தீர்ப்பு என்னும் போது விமர்சிக்க யாரால் முடியும்? (ஆனால், தோற்கும் ஒவ்வொரு முறையும் மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்காமல் வாக்குப்பதிவு மிசினையும், தேர்தல் ஆணையத்தையும் குறைசொல்லும் உங்கள் தைரியம் இங்கு யாருக்குமில்லை என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆகணும். 





நல்லவேளை உங்கள் கட்சி தோற்ற மற்ற இடங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு என்று சொல்லாமல் விட்டீர்களே....
அந்த அளவுக்காவது சந்தோஷ பட்டுக்கொள்ள வேண்டியதுதான்).



பிடிக்காத அரசு ஊழியர்களை, காவல்துறையினர்களை பழி வாங்குவது, பந்தாடுவது, பிடிக்காதவர்களை அடித்து உதைப்பது, கஞ்சா கேஸ் போடுவது, எஸ்மா, டெஸ்மா, போடா சட்டங்கள் மூலம் சிறைக்கு அனுப்புவது, மதமாற்ற தடை சட்டம் கொண்டுவருவது, கோவில்களில் ஆடு, மாடு, கோழி வெட்டக்கூடாது என்று தடைபோடுவது பத்திரிகைகளின் குரல்வளையை நெறிப்பது போன்ற கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் ஒரு நல்லாட்சியை தாருங்கள். 


குறிப்பாக சசிகலா வகையறாக்களை கட்சியிலும், ஆட்சியிலும் தலையிட விடாமல் தள்ளியே வையுங்கள். உங்களின் கடந்த கால ஆட்சியில் அவரால்தான் உங்களுக்கு கெட்டபெயர். கலைஞருக்கு அவரின் குடும்பம் என்றால் உங்களுக்கு சசியின் குடும்பம்.   கடந்த 1991-ஆம் ஆண்டு ஆட்சியில் சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையாவை சபாநாயகர் இருக்கையிலிருந்து எழ வைத்துவிட்டு அந்த இருக்கையில் சசிகலாவை அமர வைத்து உங்கள் நட்பின் தீவிரத்தை காட்டி, சட்டசபை மரபையே கேலிக்குரியதாக்கினீர்கள். இப்போதும் அப்படி செய்து விடாதீர்கள். சபாநாயகர் இருக்கையில் சபாநாயகரை மட்டும் அமர வையுங்கள். 





  கலைஞரால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக புதிய சட்டமன்ற கட்டிடம் பாண்டிச்சேரி போலீசின் தொப்பி போல இருக்கிறது என்று கிண்டல் செய்து, இந்த சட்டசபை வளாகத்தில் காலடியே எடுத்து வைக்க மாட்டேன் என்று சபதமேற்று இப்போது முதல்வரானதும் பழைய கோட்டையிலேயே நுழைகிறீர்கள். அதற்கான மராமத்து பணிக்காக எடுத்த எடுப்பிலேயே மக்களின் வரிப்பணத்தில் 50 கோடி ரூபாய்களை சிலவிடுகிறீர்கள்.  


 இப்படி செய்யும் நீங்கள்தான் கடந்தமுறை ஆட்சியில் இருந்தபோது ஜார்ஜ் கோட்டையில் இடவசதி போதவில்லை என்று புதிய சட்டமன்றம் கட்ட ராணி மேரி கல்லூரியை தேர்வு செய்து கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதை கைவிட்டீர். இப்போது இதை விட வசதியாக இருக்கும் சட்டசபையை மறுத்துவிட்டு மீண்டும் கோட்டைக்கே திரும்பியிருக்கிறீர்கள்.


 நீங்கள் மறுப்பதற்கு கலைஞர் கட்டிய கட்டிடம் என்ற காரணம் தானே தவிர வேறு என்ன இருக்க முடியும்? யார் வெட்டிய கிணறாக இருந்தால் என்ன தண்ணீர் நன்றாக இருந்தால் பயன்படுத்திக்கொள்ள வேண்டியதுதானே?...  





இதை மறுக்கும் நீங்கள்.....இன்று சென்னையில் பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க காரணமாக விளங்கும் மேம்பாலங்களில் அதிக மேம்பாலங்கள் கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டதுதான்....அப்படி கலைஞரால் கட்டப்பட்ட மேம்பாலங்கள் வழியில் நான் பயணிக்க மாட்டேன் என்று அவற்றையெல்லாம் இடித்து விட்டு புதிதாக கட்டுகிறேன் என்று மக்கள் வரிப்பணத்தை வீணடித்து விடாதீர்கள்.   அடுத்து, மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும்..

.தமிழ்நாட்டில் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ், வீட்டுவசதி திட்டம் போன்றவற்றை நீக்கி விடாதீர்கள். 




இன்று பெருமளவு உயிர் சேதத்தை தடுக்க 108 ஆம்புலன்ஸ் பெரிதும் காரணியாக விளங்குகிறது. குறிப்பாக கலைஞர் காப்பீடு திட்டம். ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவ வசதி இந்த திட்டத்தால் தான் கிடைத்திருக்கிறது.
 வேண்டுமானால் கலைஞர் காப்பீடு திட்டம் என்பதை உங்கள் ஆசான் எம்.ஜி.ஆர். காப்பீடு திட்டம் என்றோ, ஜெயலலிதா காப்பீடு திட்டம் என்றோ...இல்லாவிட்டால் உங்கள் தாயார் பேரில் சந்தியா காப்பீடு திட்டம் என்றோ பெயரை மாற்றி கொள்ளுங்கள். 


ஆனால் இந்த திட்டத்தை மட்டும் தயவு செய்து நீக்கிவிடாதீர்கள்.  
 அடுத்து, இலவசங்கள்.... 
மக்கள் விரும்புவது இலவசங்களை அல்ல....அப்படி இலவசம் தான் முக்கியமென்றால் அதையெல்லாம் கொடுத்த கலைஞரையே மீண்டும் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், அவர்கள் உங்களை தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்கள் கொடுப்பேன் என்று சொன்ன இலவசங்களால் அல்ல....தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உங்களை விட கலைஞரே நம்பகத்தன்மை உள்ளவர் என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது வேறு ஒன்றைத்தான்...


அதாவது மக்கள் விரும்புவது நல்ல வாழ்க்கை தரத்தைதான். மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டால் அவர்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்து அவர்களின் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்வார்கள்.


 பின்னர் யாரிடமும் எதற்காகவும் இலவசங்களுக்காக கையேந்த மாட்டார்கள். அதற்காக அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு திட்டம் தீட்டுங்கள். 





அடுத்து மின்சாரம், இன்று மின்தடையால் ஜெனரேட்டர், இன்வர்டர், UPS விற்பவர்களை தவிர மற்ற அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 


சிறுதொழில், பெருந்தொழில் என்று பாரபட்சமில்லாமல் நீக்கமற அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழில் துறையே நலிந்து நசிந்து போய் விட்டது. மின்சாரம் தடையின்றி கிடைக்க திட்டமிடுங்கள். 


இன்று இலவச மின்சாரங்கள் மூலம் பெருமளவு மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. இன்று இலவச மின்சார பயனாளிகளில் பலர் ஏக்கர் கணக்கில் சொத்து வைத்திருப்பவர்கள்தான். ஏழைகளுக்கு இலவச மின்சாரம் என்ற நோக்கமே அடிபட்டு விட்டது. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து என்று அறிவித்து முறைபடுத்துங்கள்.


அதுபோல...ஆங்காங்கே கொக்கிகள் போட்டு மின்சாரம் திருடுபவர்களை பிடித்து கடுமையான தண்டனை தாருங்கள்.   


அடுத்து.... மந்திரிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்...அது உங்கள் உரிமை என்றாலும் கூட அப்படி செய்வது நிர்வாக சிக்கலுக்கு வழிவகுக்கும். ஒருவரை ஒரு குறிப்பிட்ட துறைக்கு மந்திரியாக நியமிக்கிறீர்கள் என்றால்..அவர் அந்த துறையை பற்றி தெரிந்து(புரிந்து) கொள்ளவே சிலகாலம் எடுக்கும். அப்படி அவர் அந்த துறையை பற்றி தெரிந்து கொண்டிருக்கும்போதே அவரை மாற்றிவிட்டு இன்னொருவரை, பின்னர் அவரை மாற்றிவிட்டு வேறொருவரை நியமிப்பதால் தமிழ்நாட்டிற்கு ஒரு பயனுமில்லை. இதனால் உங்கள் கட்சி MLA-க்கள் அனைவரும் சுழற்சி முறையில் மந்திரியாகிவிடுவார்கள் என்பதை தவிர.....   இன்னும் நிறைய இருக்கிறது எழுத...


ஆனால் வெளியில் ஆட்டோ வரும் சப்தம் கேட்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.   


இறுதியாக ஒன்று, இந்த முறையாவது நீங்கள் நல்லாட்சி கொடுங்கள்....இல்லாவிட்டால் கலைஞரின் தவறுகள் மூலம் நோகாமல் நீங்கள் ஆட்சிக்கு வந்ததுபோல...அடுத்தமுறை தி.மு.க. வருவதற்கு உங்கள் தவறே காரணமாகிவிடும் என்று கூறி விடை பெறுகிறேன்.


 இப்படிக்கு எதிர்பார்ப்புடன்... 


----வாக்காளன்---