மகேஷ்பாபு, காஜல் அகர்வால் நடித்து தெலுங்கில் ஹிட் அடித்த படம் பிசினஸ்மேன். இப்போது அதே பெயரில் தமிழில் வெளிவருகிறது. பூரி.ஜெகன்நாத் இயக்கி உள்ளார். 
வெளிநாட்டில் சம்பாதித்து ஆந்திராவில் செட்டிலாகும் குடும்பத்தின் சொத்துக்களை ஏமாற்றி பறித்து குடும்பத்தையே அழிக்கிறார் எம்.எல்.ஏ பிரகாஷ்ராஜ்.


 வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்தின் செல்ல மகன் மகேஷ்பாபு இதைக் கேள்விப்பட்டு இந்தியாவுக்கு வருகிறார். அப்புறம் என்ன தெலுங்கு படங்கள் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? ஒரே அடிதடி, கும்மாங்குத்து ரெண்டு ரீலுக்கு ஒரு சாங் என படம் களைகட்டும். கிளைமாக்சில் வில்லன் தோற்க ஹீரோ ஜெயிக்க சுபம்.
 தமிழ் பதிப்புக்கான பாடல்களை நா.முத்துகுமாரும் வசனத்தை கண்ணனும் எழுதி உள்ளனர். அடுத்த மாதம் ரிலீசாகிறது.

தமிழ்ல பிசினஸ் ஆகுமான்னு ரிலீசுக்கு பிறகுதான் தெரியும்...