வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, February 20, 2012

வாழ்க்கை ஒரு பெரிய வட்டம்...

வாழ்க்கை ஒரு பெரிய வட்டம்



நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.

இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.

நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும்.

Sunday, February 19, 2012

கவனச் சிதறல்களுக்கு காரணமாகும் ரிங்டோன்கள்

ரிப்போர்ட் - கவனச் சிதறல்களுக்கு காரணமாகும் ரிங்டோன்கள்

மொபைல் ரிங்டோன்கள் கவனச் சிதறல்களுக்கு காரணமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. மொபைல்களில் பிடித்த பாடல்களை ரிங்டோனாக வைப்பது அனைவரும் அறிந்த விஷயம். இன்றைய நவநாகரீக உலகில் இது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஆனால் இந்த ரிங்டோன் கவனக் குறைவை ஏற்படுத்துவதாக அமெரிக்காவிலுள்ள
வாஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் ஆய்வு ஒன்றை நடத்தினர். சில மாணவர்களை வைத்து பரிசோதனை செய்தனர். மாணவர்களை குறிப்பிட்ட பாடம் தொடர்பாக தேர்வு எழுத வைத்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. 30 நொடிகள் ரிங்டோன் கேட்ட பிறகு தேர்வு எழுத வைத்து சோதனை நடத்தப்பட்டது. இதில், அவர்கள் சாதாரணமாக தேர்வு எழுதியதைவிட ரிங்டோன் கேட்டபிறகு தேர்வு எழுதியதில் பல குளறுபடிகள் இருந்தன. தெளிவாக எழுதவும் இல்லை.

முதலில் எழுதியதில் உள்ள தெளிவைவிட 25% சதவிகிதம் குறைவாக இருப்பதை காட்டி இருக்கிறது, இந்த ஆய்வு. இதன் மூலம் ரிங்டோன்களால் ஏற்படும் கவண குறைவு மிக தெளிவாக எடுத்து காட்டப்பட்டுள்ளதாக ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ரிங்டோன்களை தவிர்த்து சைலன்ட் மோடில் மொபைலை வைத்து இருப்பது கூட நல்லது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கவனத்தை குறைக்கும் இது போன்ற விஷயங்களில் இருந்து தள்ளி இருப்பது அவசியமாகிறது.

Saturday, February 18, 2012

நேற்று (17-2) 5 படங்கள் வெளியானது

இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள். போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் 'தோனி'க்கு நல்ல பெயர். இந்த வாரம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'உடும்பன்', 'காட்டுப்புலி' மற்றும் 'அம்புலி' என 5 படங்கள். இவற்றில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதர்வா-அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் என்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்து இயக்கியுள்ளார்.
'காதலில் சொதப்புவது எப்படி' படம் தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. நடிகர் சித்தார்த் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இதிலும் ஹீரோயின் அமலா பால்தான். சில நெருக்கடிகளைத் தாண்டி 'உடும்பன்' படம் வெளியாகிறது. உடும்பை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அர்ஜுன் நடிப்பில் வரும் 'காட்டுப் புலி'யும் ஆக்ஷன் த்ரில்லர்தான்.
'அம்புலி' ஒரு 3 டி படம். மனோஜ் நைட் ஷியாமளனின் வில்லேஜ் மாதிரி. இவற்றோடு, கௌதம் மேனனின் 'ஏக் தீவானா தா' (விண்ணைத்தாண்டி வருவாயா)வும் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 11 அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ்! ஆங்கிலப்படம் 'தி வுமன் இன் பிளாக்', ரவி தேஜாவின் தெலுங்குப் படம் 'நிப்பு' போன்றவையும் ரிலீஸ்.
எம்புட்டு மழை கொட்டுனாலும் சிப்பிக்குள் விழும் துளி எதுன்னுதான் பார்த்திடுவோம்.....

யுவராஜ்க்கு அமெரிக்காவில் சிகிச்சை...


முதல் கீமோதெரபி சிகிச்சைப் பிறகு புற்றுநோய்க் கட்டி பெருமளவில் குணமடைந்துவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் புற்றுநோய்க்காக அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்று வரும் அவர், டுவிட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை கூறியிருப்பது:

டாக்டர் லாரன்ஸிடம் இருந்து வியாழக்கிழமை நல்ல செய்தி கிடைத்தது. என்னுடைய ஸ்கேன் அறிக்கையை பார்த்துவிட்டு புற்றுநோய்க்கட்டி பெருமளவில் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். 2-வது கட்ட கீமோதெரபி சிகிச்சை தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அமெரிக்க சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் அனுப்பிய செய்தி, தனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 362 ரன்களைக் குவித்த யுவராஜ் சிங், 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். 2000-ம் ஆண்டில் அறிமுகமான அவர், இதுவரை 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,051 ரன்கள் குவித்துள்ளார்.

Wednesday, October 19, 2011

பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் டோணி!



பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி நடிக்கிறார்.




இந்தப் படத்துக்குப் பெயரே டோணி என்றுதான் வைக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை இயக்குபவரும் பிரகாஷ் ராஜ்தான். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:குழந்தைகள் மனநிலையை மையப்படுத்தி டோனி படம் தயாராகிறது. தேர்வுக்காக குழந்தைகள் கஷ்டப்பட்டு படிக்கின்றனர்.



பெற்றோரும் அவர்களை அதிக மதிப்பெண் பெற நிர்ப்பந்திக்கின்றனர். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை வெளிக் கொண்டுவரும் கல்விமுறை நம்மிடம் இல்லை. குழந்தைகளை பெற்றோர் கட்டாயப்படுத்தக் கூடாது. சமூகத்துக்கு இப்படம் சில கருத்துக்களை சொல்லும். ஆகாஷ், ராதிகாஆப்தே, தலைவாசல் விஜய், நாசர், பிரம்மானந்தம் ஆகியோர் நடிக்கின்றனர்.



கே.பி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இளையராஜா இசை அமைக்கிறார்.

பிரபுதேவா எனக்கு நெருங்கிய நண்பர்.

அவர் இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார்.

ஒரு பாடல் காட்சியில் வருகிறார்.

இந்த வருடம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.



இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரர் டோணியும் கவுரவ தோற்றத்தில் தோன்றப் போகிறாராம். இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்டபோது, படத்தில் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அதை பின்னர் சொல்கிறேன் என்று கூறினார்.

Monday, October 17, 2011

சகுனி - குறித்து கார்த்தியின் லேட்டஸ்ட் பேட்டி


‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு கார்த்தி மும்முரமாக நடித்து வரும் படம் ‘சகுனி’. 
அறிமுக இயக்குனர் சங்கர் தயாளின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பூர்ணிதா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படம் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது; “பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என எல்லா படங்களுமே வெவ்வேறு களங்களில் உருவானது. இந்த படங்களிலிருந்து மாறுபட்ட அரசியல் கதையாக அமைந்திருக்கிறது ‘சகுனி’. எல்லோரிடமும் திட்டு வாங்குகின்ற ஒரு கதாபாத்திரம்.

ராதிகா, நாசர் போன்ற சீனியர் ஆர்ட்டிஸ்டுகளுடன் நடித்திருக்கிறேன். சிறுத்தையில் சந்தானத்துடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தது வரவேற்பு பெற்றது. அதுபோல் இப்படத்திலும் வரவேற்பு கிடைக்கும்.”

Wednesday, September 28, 2011

அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை...

அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை- விஜயகாந்த்



Vijayakanth

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார்.

அதிமுகவால் தூக்கி எறியப்பட்டு விட்ட தேமுதிக, வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது. கூட்டணி அரசியலுக்குப் புகுந்த குறுகிய காலத்திலேயே இன்னொரு கூட்டணியில் அந்த கட்சி இணைந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி தேமுதிக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், மயிலாப்பூரில் நடந்தது. மேயர் வேட்பாளர் வேல்முருகன் மற்றும் 200 கவுன்சிலர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் பேசுகையில்,

இந்த கூட்டத்துக்கு வரும்போது, இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சி தேமுதிகவுக்கு வர இருப்பதாக செய்தி கேள்விபட்டேன். நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர், தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்றீர்கள், இப்போது கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேட்டார்.
இப்போதும் சொல்கிறேன், மக்கள்தான் தெய்வம். அவர்கள் விருப்பபடிதான் கூட்டணி வைத்தேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் கூட்டணி சேர்ந்தேன்.

இப்போதுள்ள ஆட்சியை 6 மாதம் குறை சொல்ல மாட்டேன். அதன் பிறகுதான் விமர்சிப்பேன்.
போலீசார் சரியாக இருந்தால் நாட்டில் 50 சதவீத பிரச்சனைகள் சரியாகி விடும்.

உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்குத்தான் ஓட்டு போட வேண்டுமா? அவர்கள் வந்தால்தான் நல்லது செய்வார்களா? எங்கு பார்த்தாலும் ரோடு சரியில்லை. ஒரு மணி நேர மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளக்காடாகி விடுகிறது. கொசுக்கடி தாங்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் குப்பை, திருட்டு, கொள்ளை நடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா?.

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை தருவோம்.
சாலை, மருத்துவம், போக்குவரத்து வசதி என்று செய்ய ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் நிதி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை. பிரிச்சு, பிரிச்சு ஆட்சியை கொடுங்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரிசி விலை ஏறவில்லை. என்னிடம் ஆட்சியை கொடுங்கள். மக்களை தங்க தட்டில் வைத்து அழகுபார்ப்பேன்.

ஜால்ரா அடிப்பது எனக்கு பிடிக்காது. ஏனென்றால் நான் வளர்ந்தது அப்படி. தவறு நடந்தால் கோபப்படுவேன். தட்டிக் கேட்பேன். தேமுதிகவினர் ஐந்து பைசா கூட லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்றார்.

தடையை மீறி கார் ஓட்டிய சவூதி அரேபிய பெண்ணுக்கு 10 கசையடி தர உத்தரவு!

Saudi Woman Driver

பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி கார் ஓட்டிய ஒரு சவூதி அரேபியப் பெண்ணுக்கு 10 கசையடிகள் தர அந்த நாட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சவூதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முஸ்லீம் நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே பெண்களுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது, ஆண் துணை இல்லாமல் வெளிநாடு போகக் கூடாது, வாக்குரிமை கிடையாது என பல கட்டுப்பாடுகள். இதில் வாக்குரிமைக்கு வழிவகுத்து சமீபத்தில் அந்த நாட்டு மன்னர் அப்துல்லா உத்தரவிட்டார்.

ஆனால் மன்னர் இந்த முடிவை எடுக்க முக்கியக் காரணம், கார் ஓட்டக் கூடாது என்ற தடையை அந்த நாட்டுப் பெண்கள் சிலர் மீற ஆரம்பித்ததுதான். கார் ஓட்டும் தடையை மீறி அந்த நாட்டைச் சேர்ந்த பெண்ணுரிமை அமைப்பினர் கார் ஓட்டத் தொடங்கினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி எச்சரித்து, இனிமேல் கார் ஓட்ட மாட்டோம் என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வந்தனர்.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்து மன்னர் உத்தரவிட்ட சில நாட்களிலேயே இப்படி ஒரு தண்டனையை அறிவித்திருப்பது சவூதி பெண்ணுரிமைவாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

தண்டனைக்குள்ளாகவுள்ள பெண்ணின் பெயர் ஷைமா ஜெஸ்டெய்னா. இவருக்கு வயது 30. அனுமதி இல்லாமல் கார் ஓட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் இந்த தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. தன் மீதான தண்டனையை எதிர்த்து ஷைமா அப்பீல் செய்துள்ளதாக அவர் சார்பில் சமர் பதாவி என்பவர் கூறியுள்ளார்.

உலகிலேயே சவூதியில் மட்டுமே பெண்கள் கார் ஓட்டத் தடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சவூதி பெண்கள் மட்டுமல்ல பிற நாட்டுப் பெண்களும் கூட இங்கு கார் ஓட்ட அனுமதி கிடையாது. இதனால் தங்களது தேவைகளுக்காக வெளி டிரைவர்களை நாடும் நிலையில் சவூதி பெண்கள் உள்ளனர். ஆனால் டிரைவர்களுக்கான குறைந்த பட்ச மாதச் சம்பளம் 400 டாலர் என்பதால் டிரைவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளவும் அவர்கள் தயங்குகின்றனர். இதனால் தங்களது உறவினர்களையே கார் ஓட்டச் சொல்லி கேட்டுக் கொள்ளும் பெண்கள் அங்கு அதிகம்.

குழந்தைகளை அழைத்து வர பள்ளி செல்ல, கடைகளுக்குப் போய் வர, டாக்டரிடம் போக என எதற்குமே அவர்களால் கார் ஓட்டிச் செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரசின் இந்த கடுமையான கெடுபிடிகள் குறித்து சோஹிலா மேலும் குமுறலுடன் கூறுகையில், நபிகள் நாயகத்தின் மனைவியர் கூட ஒட்டகம், குதிரைகள் ஆகியவற்றை ஓட்டியதாக குரான் கூறுகிறது. போக்குவரத்துக்கு அப்போது இருந்தவை அவை மட்டுமே. இந்தக் காலத்தில் வாகனங்கள் வந்து விட்ட நிலையில் அதை ஓட்டக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறார்.

கார் ஓட்டியதற்காக கசையடி தண்டனை தரப்பட்டுள்ளது உலக அளவில் மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, September 25, 2011

குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்


சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சானா கான். இப்படத்தை அடுத்து‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வெளிவந்துள்ள ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படவாய்ப்பு இன்றி இருப்பவரை குத்துப்பாட்டுக்கு ஆட கூப்பிடுகிறார்களாம்.
இதுகுறித்து சானா கான் கூறியாதவது:
“தமிழில் குத்து பாடலுக்கு ஆடுவது, கெஸ்ட் ரோலில் நடிப்பது அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் நிலையில் இதுபோல் நடிக்க விரும்பவில்லை. என்னை யாரும் குத்து பாட்டுக்கு ஆட கூப்பிடாதீங்க என்று என்னைத் தேடு வர்வோர்களிடம் சொல்லிவிட்டேன்.
‘ஆயிரம் விளக்கு’ பட ஷூட்டிங்கின் போது எனது அம்மாவுக்கு உடலநலமில்லாமல் போனது. அவரை மருத்துவமனையில் சேர்த்த நேரம். ஷூட்டிங், மருத்துவமனை என்று மாறி மாறி அலைந்தேன். கவலைகளை மறைத்துக்கொண்டு நடித்தேன். அதற்கான பலன் கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?

அஜித்…….எந்த ஒரு சினிமா நடிகர்களையும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என்ற கொள்கையை எவ்விடத்திலும் வலியுறுத்தும் என் கருத்தை உடைத்தெறிந்த ஒரு நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். கொழுகொம்பு இன்றி வளர்ந்த கொடி அஜித்.


தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும் ஓர் சராசரி குடிமகன் தான் என்று வாழ்ந்து வருபவர்.மேலே உள்ள படத்தை பார்த்தாலே புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.
இதுவரையான தமிழ் சினிமா வரலாறு அஜித் போன்ற உன்னதமான ஒரு மனிதரை கண்டிருக்குமா என்பது கேள்வியே. ஒருவேளை சிலர் பார்வைக்கு அஜித் சாதாரணமாக தெரியலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை அஜித் ஒரு மாமனிதன் என்று சொல்வதில் கூட தவறில்லை. மாமனிதன் என்று சொல்வதற்கு அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?.. இன்று ஒரு சாதாரண பதவியில் இருந்தாலோ, சிறிய புகழை அடைந்தூவிட்டாலோ அதை வைத்து அட்டூழியம் செய்பவர்களுக்கு மத்தியில் எவ்வளவோ பெரிய பெயர் புகழை அடைந்திருந்தும் அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு வாழ்ந்து வருகிறாரே, அது போதாதா?.
அஜீத் அதிரடியாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்தபோது அது பற்றி பல்வேறு தகவல்கள் வந்தன. ரசிகர்களின் வாழ்க்கையை பாழாக்கக்கூடாது என்றுதான் அந்த முடிவை எடுத்தார் என்றும், தன் பேச்சை கேட்காமல் தேர்தலில் தி.மு.க விற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதால்தான் கலைத்தார் என்றும் பல்வேறு தகவல்கள் வந்தன. இருந்தபோதும் அந்த செயல் பலரது மனதிலும் அஜித் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.
அந்த துணிச்சல் தமிழ் ஹீரோக்களுக்கு இதுவரை வந்ததுமில்லை. இனிமேல் வரப்போவதுமில்லை.
அதன் பின்னர் மங்காத்தா வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டபோது பலரும் ஜெயலலிதாவை சந்திக்கும்படி வற்புறுத்தினார்கள். அதை அடியோடு மறுத்த அஜித் “ இப்போது சென்று சந்தித்தால் அது சுயநலமாகிவிடும்” என்று கூறியிருந்தார். அது அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது.
கண்டிப்பாக அஜித் என்ற நடிகனை விட்டு அஜித் என்ற மனிதனை முன்னுதாரணமாக கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.
மங்காத்தா வெற்றிக்குப் பின்னர் தல காட்டில் மழை அடிக்கத்தொடங்கிவிட்டது. அடுத்து பில்லா 2 விலும் அதற்கடுத்து ஜெயம் ராஜா அல்லது ஷங்கரின் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தல தொடர்ந்து வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்...


Tuesday, September 20, 2011

பலாத்காரம் செய்யவில்லை... எச்சரித்தேன்!!!


மது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரித்தேன். இதனால் என்மீது சோனா பொய் புகார் கொடுத்துள்ளார், என தனது முன்ஜாமீன் மனுவில் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார்.


'மங்காத்தா' படத்தில் நடித்த வைபவ் என்பவரது வீட்டில் செப்டம்பர் 14-ந் தேதி மது விருந்து நடந்தது. அப்போது தன் மேல் பாய்ந்த தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், ஆடைகளைக் களைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்று பாண்டிபஜார் போலீசில் நடிகை சோனா புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் 4 வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த புகாரில் குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பதாகவும் போலீசார் கருதுகின்றனர்.

மங்காத்தா' படத்தின் வெற்றியைகொண்டாட நடிகர் வைபவ் என்னை அழைத்தார். அதனால் அவரது வீட்டிற்கு சென்றேன். என்னைபோல் பலரும் அங்கு வந்திருந்தனர். எல்லாரும் இரவு 11 மணிக்கு மேல் மது அருந்தத் தொடங்கினோம்.

நடிகை சோனாவும் இந்த மது விருந்தில் கலந்து கொண்டார். அவர் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடக் கூடியவர். சினிமாவில் வெற்றி பெற முடியாத நிலையில், படங்களைத் தயாரித்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் பிரச்சினையில் சிக்கினார்.

சினிமாவில் என்னுடைய வெற்றி மற்றும் எனது குடும்ப பின்னணியை மனதில் வைத்துக்கொண்டு என்னிடம் சோனா உள்நோக்கத்துடன் நடந்துகொண்டார். கவர்ச்சியால் மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளதாக தெரிகிறது.

அந்த எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். நல்ல போதையில் அவர் இருந்தார். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, என்னிடம் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்துகொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன்.

அவரை அனைவரது முன்பாகவும் நான் எச்சரிக்கை செய்ததால், அவருக்கு அவமானமாக போய்விட்டது. அதைத்தொடர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். மறுநாள் போலீசில் என்மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்.

Monday, September 12, 2011

தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டம் 15ஆம் தேதி துவக்கம்


அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழக அரசின் இலவச மடிக்கணினித் (லேப்டாப்)திட்டம் இந்த வாரம் முதல் துவங்கவுள்ளது.
இந்த இலவச மடிக்கணினித் திட்டத்தின் கீழ் சுமார் 68 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படவுள்ளன. இதன் துவக்கமாக வரும் 15ஆம் தேதி இந்தத் திட்டம் அறிமுகமாகிறது.இந்த ஆண்டில் மட்டும் 9.12 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் மீதி மடிக்கணினிகள் வழங்குதல் 4 ஆண்டுகளில் முழுமை பெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டெம்பர் 15ஆம் தேதியன்று இந்த இலவச மடிக்கணினித் திட்டம் துவங்கப்படுகிறது.நாட்டில் முதன்முறையாக இலவசமாக வழங்கப்படும் இந்த மெகா இலவசத் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மற்றும் பாலி-டெக்னிக் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.

இந்த மடிக்கணினி இலவசத்திட்டத்திற்கு ரூ.10,200 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த ஆண்டு வழங்கப்படும்
 இலவச மடிக்கணினிகளின் எண்ணிக்கை 9.12 லட்சத்திற்காக தமிழக அரசு
 ரூ.912 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.தமிழ்நாடு எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (எல்காட்)
 இந்த மடிக்கணினி வினியோகத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளது. 
முதல் கட்ட 9.12 மடிக்கணினிகள் வழங்குதல் திட்டத்திற்காக எல்காட் ஏற்கனவே டெண்டர்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.செப்டெம்பர் 15ஆம் தேதி மடிக்கணினி வழங்குதலுக்காக ஹூலெட்-பகார்ட் மற்றும் ஆசர் தகவல் தொழில்நுட்ப நிறுவங்கள் முறையே 4,000 மற்றும் 2000 மடிக்கணிகளை வழங்கியுள்ளது.