வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Tuesday, April 3, 2012

பரீட்சைய விட இவங்களோட பேட்டிங் பவுலிங் பெருசாப் போச்சே( ஐபிஎல் 5 )

கொல்கத்தாவில் குழாய் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி....


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் போது, 90 டெசிபலுக்கு மிகாமல் ஒலி பெருக்கியை பயன்படுத்தி கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


மேற்கு வங்காளத்தில் அரசு பொதுத் தேர்வுகள் துவங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், தேர்வு முடியும் வரையிலும், மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் ஒலி பெருக்கி மற்றும் மைக்ரோபோன்கள் பயன்படுத்த மேற்கு வங்காள மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது.


இந்த நிலையில் இத்தடை உத்தரவை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிபதிகள் பி.கே.ரே, தீபன்கர் துத்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.


விசாரணை முடிவில் ஐபிஎல் போட்டிகளின் போது, கொல்கத்தா நைட் ரைடர் அணியினர் 90 டெசிபல் அளவுக்கு மிகாமல் ஒலி பெருக்கியை பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.


பரீட்சைய விட இவங்களோட பேட்டிங் பவுலிங் பெருசாப் போச்சே...

0 comments:

Post a Comment