
பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?
நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு.எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல்ஏமாத்திக்கொண்டு என்று...
ஒரு சில நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில்...