வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, March 4, 2019

பெண்கள் ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.


பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல... அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.

செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.

அவற்றில் சில...
  • ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம்.
  • ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி.
  • 84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம்.
  • வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு.
  • ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்... அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.

அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு!

பெண்களையே அதிகம் பாதிக்கும்... 
  • ஆண்களைக்காட்டிலும், பெண்களே ஒற்றைத்தலைவலியால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, கர்ப்பப்பை பிரச்னை, நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை காரணமாக இருக்கின்றன.
  • தவிர, பூப்பெய்தும் காலம், மாதவிலக்கு வரும் காலக்கட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரங்களிலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • பீடி, சிகரெட், புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் உடலில் உண்டாகும் பித்தத்தால், உடலின் ஆற்றல் குறையும். இதனால், வயிற்றுப்புண் உண்டாகி, வெப்பம் அதிகரிக்கும். இதுவும் ஒற்றைத்தலைவலியில் முடியும்.


குணப்படுத்துவது எப்படி?
  • பக்கவாத ஒற்றைத் தலைவலி (Hemiplegic Migraine ), கண் நரம்பு ஒற்றைத்தலைவலி (Ophthalmoplegic Migraine) முக நரம்பு ஒற்றைத்தலைவலி (Facioplegic Migraine) என வலிகளில் பலவகை உள்ளன. மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், தேவையற்ற சிந்தனையைத் தவிர்த்தல், நல்ல தூக்கம் என வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொண்டாலே வலி வராமல் தடுத்துக்கொள்ள முடியும்.
  • அலுப்பு தரக்கூடிய ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருத்தல், மனதுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தல், வயல்வெளி, பூங்கா, இயற்கைக் காட்சிகளை ரசித்தல் எனப் பசுமையான இடங்களுக்குச் செல்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தி, வலி உண்டாகாமல் தவிர்க்கலாம்.
  • தவிர, உடலில் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தலையில் நீர்கோத்தல், மூளையில் கட்டி என ஒற்றைத்தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. எனவே, சாதாரணத் தலைவலி என்று புறக்கணிக்காமல், ஏன் ஏற்படுகிறது எனக் காரணத்தை ஆராய்ந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வலி, தாங்கவே முடியாதபட்சத்தில் மட்டும் மருத்துவரின் பரிந்துரைப்படி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி தீர்க்கவே முடியாத நோய் என்றுதான் பலரும் பயப்படுகின்றனர். அது, ஓர் அறிகுறி மட்டுமே. நோய்க்கான அறிகுறியை அறிந்து வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டால், ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபடுவது நிச்சயம்.

0 comments:

Post a Comment