வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, March 12, 2014

நாம் எதையெல்லாம் நிறுத்த வேண்டும்....

 
1.நடிகனுக்கு பூசை செய்வதையும், கொடி பிடிப்பதையும் நிறுத்த வேண்டும்.

2.யோசிக்காமல் அறியாமையால், இலவசத்திற்காக மட்டும் ஓட்டு போடுவதை நிறுத்த வேண்டும்.

3.எதற்காக இதை படிக்கிறோம் என்று தெரியாமலேயே உயர் கல்வி கற்பதை நிறுத்த வேண்டும்.

4.நம் வசதிகளுக்காக,நம் தேவைகள் சுலபமாக நிறைவேற அரசாங்க அலுவலங்களில் ஐந்து, பத்து கொடுப்பதை நிறுத்த வேண்டும்.

5.படிப்பறிவு இல்லாதவர்களிடமும், இயலாதவர்களிடமும் நம் புலமையையும், வீரத்தையும் காட்டுவதை நிறுத்த வேண்டும்.

6.கேள்வி கேட்க வேண்டிய இடங்களில் கேட்காமல் இருப்பதை நிறுத்த வேண்டும்.

7.தாய் மொழி பேசுவது வெட்கம் என்றும், அடிப்படைக் கல்வியை தாய்மொழியில் கற்பது பயனற்றது என்றும் நினைப்பதை நிறுத்த வேண்டும்.

8.டாஸ்மார்k-ன் வருமானத்தை கோடிக்கணக்கில் உயர்த்துவதை நிறுத்த வேண்டும்.

9.பெண்களை சோப்பு சீப்பு பவுடர் விளம்பரங்களுக்க ு பயன்படுத்துவதை, சிகப்பு தான் அழாகான நிறம் என்ற முட்டாள் தனமான விளம்பரங்களை மக்களிடம் திணிப்பதை நிறுத்த வேண்டும்.

10.காதலுக்கு முதலில் முக்கியம் தனிமனித ஒழுக்கம். காசை தண்ணீராய் செலவழித்து காதலிப்பதை நிறுத்த வேண்டும்.

11.ஆணாதிக்கம், பெண்ணடிமை, பெண்ணுரிமை போன்ற வார்த்தைகளின் புரிதல் இல்லாமல் தொட்ட தொண்ணூறுக்கும் அவைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

12.ஆன்மிகத்தின் அர்த்தம் அறியாமல் அதை ஆயுதம் ஆக்குவதை நிறுத்த வேண்டும்.

13.கலாச்சார காவலர்கள் என்று பேர் வைத்துக் கொண்டு கலாச்சாரத்தை பாதுகாப்பது போலவே சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.

14.சினிமாவால் வாழ்க்கை பாதிக்க படாமல் இருக்க , முகநூலால் சுய முன்னேற்றம் முடங்காமல் இருக்க, எதற்குமே அடிமை ஆவதை நிறுத்த வேண்டும்.


#அவனை நிறுத்த சொல்லு , நான் நிறுத்தறன்னு சொல்லாம , நாம மாறினா இங்கு நிறையவே மாறும்.

Monday, March 10, 2014

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு:27 பேர் புதுமுகங்கள்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தயாநிதி- ஆ.ராசா மீண்டும் போட்டி- 27 பேர் புதுமுகங்கள்

லோக்சபா தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார். இதில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக 35 தொகுதிக்கான வேட்பாளர்களின் பெயர்கள் விபரம்.... 

1. தென் சென்னை- டி.கே.எஸ்.இளங்கோவன்
2. மத்திய சென்னை- தயாநிதிமாறன் 
3. வட சென்னை- கிரிராஜன் 
4. ஸ்ரீபெரும்புதூர்- ஜெகத்ரட்சகன் 
5. கள்ளக்குறி்ச்சி- மணிமாறன் 
6. சேலம்- உமாராணி 
7. நாமக்கல்- காந்தி செல்வன்
8. ஆரணி- ஆர்.சிவானந்தம்
9. தருமபுரி- தாமரைச் செல்வன்
10. திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை
11. விழுப்புரம்- முத்தையன்

12. திருப்பூர்- செந்தில்நாதன்
13. நீலகிரி- ஆ.ராசா
14. கோவை- கணேஷ் குமார்
15. பொள்ளாச்சி- பொங்கலூர் பழனிச்சாமி
16. திருச்சி- அன்பழகன்
17. கரூர்- சின்னச்சாமி
18. கடலூர்- நந்தகோபால்
19. தஞ்சாவூர்- டி.ஆர்.பாலு
20. மதுரை- வேலுச்சாமி
21. தேனி- பொன்.முத்துராமலிங்கம்
22. விருதுநகர்- ரத்தினவேல்
23. ராமநாதபுரம்- முகமது ஜலீல்
24. ஈரோடு- பவித்திர வள்ளி
25. கன்னியாகுமரி- ராஜரத்னம்
26. காஞ்சிபுரம்- செல்வம்
27. பெரம்பலூர்- பிரபு
28. நாகப்பட்டினம்- ஏ.கே.விஜயன்
29. தூத்துக்குடி- ஜெகன்
30. அரக்கோணம்- என்.ஆர்.இளங்கோ
31. நெல்லை- தேவதாஸ்
32. திண்டுக்கல்- காந்திராஜன்
33. கிருஷ்ணகிரி- பில்லப்பா
34. சிவகங்கை- துரைராஜ்
35. புதுச்சேரி- நஜீம்

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தயாநிதி- ஆ.ராசா மீண்டும் போட்டி- 27 பேர் புதுமுகங்கள்

இவர்களில் 27 பேர் புதுமுகங்கள் ஆவர். இந்த வேட்பாளர்களில் 13 பேர் வழக்கறிஞர்கள், 3 பேர் டாக்டர்கள், ஒருவர் பொறியாளர், மற்றவர்கள் பட்டதாரிகள். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: ஆலந்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர். எஸ். பாரதி அறிவிக்கப்பட்டுள்ளார்.