விஜய்யின் தலைவா படத்திற்கு கடைசி நேரத்தில் வரிவிலக்கு தரமுடியாது என்று கைவிரித்தது போன்று விஜய்யின் ஜில்லா படத்துக்கும் அதே நிலமை ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. விஜய்யின் தலைவா படத்தில் நிறைய ஆங்கிலச் சொற்கள் படத்தின் வசனத்தில் வருகின்றன என்று காரணம் காட்டித்தான் படத்திற்கு வரி விலக்கு தர முடியாது என்று சொல்லப்பட்டது. இதனால் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதிலும் பிரச்சினை ஏற்பட்டது. வரிவிலக்கு இல்லாவிட்டால் படத்தை மினிமம் கியாரன்டியில் படத்தை வாங்க முடியாது என்று கையை விரித்துவிட்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். அதைத் தொடர்ந்து ஒரு வழியாக தலைவா ரிலீஸ் ஆனது.

விஜய் இப்போது பிஸியாக ஜில்லா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரி தயாரிக்கும் ஜில்லா படத்தை நேசன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார். ஜில்லா படம் பொங்கல் அன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்துக்கும் வரிச்சலுகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல் கிளம்பியுள்ளது. அரசு வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்கும் படங்களிளுக்கு தலைப்பு தமிழில் இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் ஜில்லா படத்தின் டைட்டில் வடமொழியில் உள்ளது. எனவே வரிச்சலுகை கிடைப்பது சந்தேகம் என்கிறார்கள் சிலர்.

தலைவாவுக்காக கடைசி நேரத்தில் என்னென்ன மாற்றம் எல்லாமோ செஞ்சாங்க, ஜில்லாவுக்கு வரிசலுகை இல்லைன்னா கடைசி நேரத்தில தலைப்பையும் மாற்றத் தயங்க மாட்டாங்க, அதுக்கு பேசாம இப்பவே மாத்திடுறது நல்லது…!