கோட் சூட் போட்ட அல்டிமேட் நடிகர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் கடவுள் நடிகரும் நடித்து வருகிறார். கடவுள் நடிகருக்கு ஜோடி களத்தில் ஆடிய டாப் நடிகை. ஷூட்டிங் சமயத்தில் எல்லாம் டாப் நடிகையுடன் தான் கடலையில் பொழுது போக்குகிறாராம் கடவுள் நடிகர். நைன் நடிகையுடன் காதல், யோகா டீச்சருடன் பார்ட்டியில் ஆட்டம், விரைவில் திருமணம் என ஏற்கனவே சார் ரொம்ப பிஸியோ பிசி. அம்மணியும் பார்ட்டி ப்ராளத்தில் சிக்கியவர் தான். இப்போது ஜாடிக்கேத்த மூடியா இருவரும் போடும் கடலையைப் பார்த்து, யூனிட்டில் உள்ளவர்கள் ‘கண்ணா மூணாவது லட்டு தின்ன ஆசையா..?' எனக் கிண்டலடிக்கிறார்களாம்.