வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, August 17, 2013

விஜய் மீது ஏன் யாருக்கும் அனுதாபம் வரவில்லை ?



விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது, பெரும்பாலானோருக்கு கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன் அவர் ரசிகர்களைத் தவிர யாருக்குமே அனுதாபம் இல்லை... ?

2007ம் ஆண்டு. விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. பல திரைப்படங்களை ரசிக்கும் வகையில் கலாய்ப்பார்கள். அப்படி பல படங்களை கலாய்த்து பெரிய நடிகர் ஆனவர்தான் சந்தானம். சந்தானம் திரைத்துறைக்கு சென்றதையடுத்து, அவர் இடத்தில் லொள்ளு சபாவில் நடித்தவர் நடிகர் ஜீவா. விஜயின் போக்கிரி படத்தை பேக்கரி என்ற பெயரில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் செம்மையாக கலாய்த்தார். இணைப்பு




நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை சந்திரசேகருக்கும் இது பிடிக்கவில்லை. உடனே தமிழகம் முழுக்க விஜய் டிவியை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டினர். பயந்து போன விஜய் டிவி நிர்வாகம், நடிகர் விஜயிடம் மன்னிப்பு கேட்டது. அது தொடர்பாக ஒரு ஸ்லைடையும் நிகழ்ச்சி நடுவே ஒளிபரப்பியது. இது முதல் சம்பவம்.

திரைப்படம் தொடர்பாக விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த விவாதத்தின்போது, பார்வையாளர் ஒருவர் விஜய் படத்தில் கதையே இல்லை... அரைச்ச மாவையே அரைக்கிறார்கள் என்று சொன்னார். உடனே விஜய் ரசிகர்களை தூண்டி விட்ட விஜய்யும் அவர் தந்தையும், ரசிகர்களை விட்டு, விஜய் டிவிக்கு கடிதங்கள் மற்றும் தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்தார்கள். இதையடுத்து நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத், விஜய் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார். இணைப்பு





ஒரு நடிகர் என்ற வகையில் தன்னை யாரும் கிண்டல் செய்வதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் விஜய் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா ? அவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்று தன்னை விஜய் மற்றும் அவர் தந்தை நினைத்துக் கொண்டதால்தான் இன்று தலைவா படத்தை வெளியிட முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். இவர்களின் கையறு நிலையைப் பார்த்து யாருக்கும் பரிதாபம் வரவில்லை... மாறாக நல்லா வேணும் என்ற எண்ணமே பெரும்பாலானோருக்கு இருக்கிறது..... நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட என்றும், நான் புறா இல்லடா சுறா என்றும் பன்ச் டயலாக் பேசிய விஜய், "நானும் எங்கள் யூனிட்டும் ஆடிப்போயிருக்கிறோம், அதிர்ச்சியில் இருக்கிறோம்" என்று பேசி வீடியோ வெளியிடுகிறார். மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தையே முதல் மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள் என்று பேசுகிறார். (அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முறையாக ஒரு திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீசாகப் போகிறது.) தமிழக முதல்வர் இதில் தலையிட்டு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கெஞ்சுகிறார்.
இணைப்பு



இவருக்கு படம் எப்படி முக்கியமோ அது போலத்தானே தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அந்த நிகழ்ச்சிகளும் ? அவர்களை மிரட்டி மன்னிப்புக் கேட்கச் செய்தபோது உங்களுக்கு அவர்களின் வலி என்னவென்று தெரியுமா ? இப்போது புரிந்து கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment