வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Friday, August 23, 2013

***இன்றைய தமிழகம்***



கடவுளின் அருள் பெற்று பயன் அடைந்த
கூட்டத்தை விட
கடவுளின் பெயர் சொல்லி பயன் அடைந்த
கூட்டம் அதிகம்

தியானமும் யோகாவும் விற்பனைக்கு
ஞானமும் கடவுளும் கற்பனைக்கு

பாதி நேரம் அருளுரை
மீதி நேரம் ஆணுறை
கட்டினிலே கன்னி
கையிலே கமண்டலம்

ஆசையை துறந்தவர்கள் இருந்த
பதவியிலே இன்று
ஆடையை துறந்தவன் அமர்கிறான்

திரை போட்டு காட்டியும்
திருந்தாத மக்கள் _ சிலர்
கறை பட்ட பின்பும்
வருந்தாத மாக்கள்

இயற்கையின் விதி இணை
சேர வேண்டும்
இருபாலும் அதற்கு துணை
சேற வேண்டும்
அதற்கு முறையாக முன்னோர்கள்
வைத்த பெயர் திருமணம்

ஆனால்
அன்று கடல் கடந்து வியாபாரம்
இன்று கல்யாணத்தில் வியாபாரம்

சில பவுன் நகைக்கு ஆண்மையை
விக்கிறான்
தங்கத்தை கொடுத்தால்
அவன் தாய்மையை கொடுக்கிறான்

அன்று குளத்தடி நீரிலே
குளித்த என் தமிழினம் _ இன்று
நிலத்தடி நீரைகூட காணாமல்
தவிக்கிறது

நேர்மையை மறந்து விட்டோம்
நிம்மதி இழந்து விட்டோம்
நீதியை துறந்து விட்டோம் - அட
நீரை கூட இழந்து விட்டோம்

ஒரு படி அரிசிக்கி உரிமையை
விற்றோம் - பிச்சைக்கார
வேடத்தை பெருமையாக
பெற்றோம்

ஒரு வேளை காமதில்
சுகம் இல்லை என்றல்
கூடகுட மாட்டோம்
குழந்தையை free'ya கேட்போம்

அன்று சொந்தங்கள் கூட சொர்கத்தை
கண்டோம்
இன்று சொத்துக்காக சொந்தத்தை
மறந்தோம்

அன்று வழிபோக்கன் வாழ கூட
திண்ணையை வைத்தோம் - இன்று
வயதான பெற்றோரையே
தெருவிலே விட்டோம்

அன்று கோ உயர குடி உயர்ந்தது
இன்று குடி உயர கோ உயர்கிறது
அரசாங்கம் ஊத்தி தரும்
அநியாயம் போத்தி வரும்

கல்வியெல்லாம் தனியாரிடம்
காலமும் மதுக்கடை அரசிடம்
குடிக்க Beer இருக்க
படிக்க Book எதற்கு ?

நீதியில் நிலைத்து
நித்தமும் உழைத்து
நிம்மதியில் வாழ்ந்த
எம் தமிழனின்
வாழ்கை இனி
காணவும் கிடைகாது
அந்த காலமும் திரும்பாது

இன்னும்...

சோழனும் கம்பனும் வாழ்ந்த
எங்கள் பூமி என
பெருமை பட்டு கொள்வதால்
பயன் ஒன்றும் இல்லை
நம் இனதின் பெருமை மறைய
காலம் தூரம் இல்லை

- வை . நடராஜன்

0 comments:

Post a Comment