மூடிய அறைக்குள் 3 நாட்களாக ஒரு ஹீரோவையும், ஹீரோயினையும் அடைத்து வைத்து அவர்களுக்குள் கெமிஸ்ட்ரியை டெவலப் பண்ண டைம் கொடுத்து அப்புறம் ஷூட்டிங்கை வைத்துள்ளனர் பாலிவுட்டில். இந்த வித்தியாசமான டீலிங் நன்றாகவே கை கொடுத்ததாம்.. காரணம் படப்பிடிப்பின்போது ஹீரோவும், ஹீரோயினும் செம அன்னியோன்மாக நடித்துக் கொடுத்து அசத்தி விட்டனராம். சுத் தேசி ரொமான்ஸ் என்ற படத்திற்காகத்தான் இந்த ‘அலேக் போர்’….! பரினீதி சோப்ராதான் அந்த அழகான ஹீரோயின். அவர்தான் சுத் தேசி ரொமான்ஸ் படத்தில் காதல் காட்சிகளில் கலக்கியவர். அவருக்கு ஜோடியாக வருபவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். ஹேன்ட்சம் ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள சுஷாந்த் காதல் காட்சிகளில் பரினீதியுடன் நன்கு இழைந்து இழைந்து நடித்துக் கொடுத்தாராம். தேரே மேரே பீச் மெய்ன் கியா ஹை என்ற பாடலுக்காகத்தான் இந்த 3 நாள் உள் வைப்பு அணுகுமுறையாம். இந்தப் பாட்டில் காதலும், கவர்ச்சியும், காமமும் நன்றாக வெளிப்பட வேண்டும் என்று விரும்பிய இயக்குநர் மனீஷ் சர்மா, ஹீரோவும், ஹீரோயினும் நன்கு அன்னியோன்யமாக பழக வேண்டு்ம் என்று நினைத்து 3 நாள் உள்ளேயே இருங்க என்று கூறினாராம். இதைக் கேட்ட பரீனிதியும், சுஷாந்த்தும் உடனே ஓ.கே. என்று சொல்லி விட்டார்களாம்.. பிறகென்ன ரெண்டு பேரையும் உள்ளே தள்ளி பூட்டி விட்டனர். 3 நாள் கழித்து வெளியே அழைத்து வரப்பட்ட இருவரையும் வைத்து அந்தப் பாட்டை படமாக்கினார்களாம். சும்மா சொல்லக் கூடாது.. பாட்டு படு சூப்பராக வந்திருக்காம்.. காரணம், இருவரின் நடிப்பும் அப்படி… ஆஹா..கெமிஸ்ட்ரிக்காகத்தானே அனுப்பினார்கள்.. கெமிஸ்ட்ரி மட்டும் தான் ஒர்கவுட் ஆனதா….. இல்லை…… 
 முடிவு 10 மாதத்தில் தெரியவரும் தானே..!