சென்னை: தமிழ் சினிமா உள்ளவரைக்கும்  தலைமுறைகளைத்   தாண்டி  நிற்கும் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வாய்மை என்ற படத்தில் டாக்டராக நடிக்கும் அவர், அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் இன்றைய காமெடியன்கள் யாராலும்   இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு நீக்கமற   நிறைந்திருப்பவர் கவுண்டர் என செல்லமாக (சாதிப் பெயர் இல்லீங்) அழைக்கப்படும்  கவுண்டமணி. கவுண்டமணி -செந்தில் கூட்டணி  இணைந்தே  450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள்.
கவுண்டமணி மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12. எவ்வளவோ வாய்ப்புகள் வந்தும், தங்கம் படத்துக்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த கவுண்டமணி, தற்போது ‘வாய்மை’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்து கவுண்டரை கவுரவிக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன் ஒரு படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைக்கிறார். வெற்றி மாறனின் உதவியாளர்களுள் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம். படத்தின் கதையைக் கேட்டும் சம்மதமும் சொல்லிவிட்டார் கவுண்டர் என்கிறார்கள். அட்ரா சக்க.. அட்ரா சக்க… அட்ட்ரா சக்க!