சென்னை: அஜீத் குமார் பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். கார் பந்தய வீரரான அஜீத் குமாருக்கு பைக்குகள் என்றாலும் கொள்ளைப் பிரியம். அவர் நடிக்கும் படங்களில் பைக் சாகசம் செய்ய அவர் தயங்குவதே இல்லை. மங்காத்தாவில் கூட அவர் பைக் சாகசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் வாங்கியுள்ள அஜீத்

விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் டுகாட்டி பைக்கில் சாகசம் செய்யும் காட்சி உள்ளது. அஜீத் வீட்டில் ஏற்கனவே பல சூப்பர் பைக்குகள் உள்ளன. இந்நிலையில் அவர் பிஎம்டபுள்யூ எஸ்1000ஆர்ஆர் என்னும் ரேசிங் பைக்கை வாங்கியுள்ளார். காலில் காயம் ஏற்பட்டு வரும் அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருக்கும் அஜீத்தால் இந்த பைக்கை ஓட்ட முடியுமா என்று தான் தெரியவில்லை.