வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, July 22, 2013

பிரணாப் முகர்ஜி ...குடியரசுத் தலைவராக ஒரு வருடம்.. !

டெல்லி: பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்துள்ளார். அரசியல் மற்றும் அதிகாரத்தி்ல பல்வேறு பொறுப்புகளை வகித்தவரான பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில்ஒரு வருட காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார். பிரதீபா பாட்டீலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர் பிரணாப் முகர்ஜி. 


விதிமுறைகளைத் தாண்டாமல் அரசியல் சாசனச் சட்டத்தைத் தாண்டாமலும், விதிமுறைகளைத் தாண்டாமலும் வழக்கமான குடியரசுத் தலைவராகவே செயல்பட்டு வருகிறார் பிரணாப்.

சொன்னபடி கேளு... அரசியல் சாசனச் சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்கிறார் பிரணாப். அவராக எதையும் செய்வதில்லை.

கலாம் போல வருமா அப்துல் கலாம் இப்படி இருந்ததில்லை. விதிமுறைகளைத் தாண்டியும், அதேசமயம், வரம்பு மீறாத வகையிலும் மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்தவர் கலாம். ஆனால் பிரணாப் அப்படி எதையும் செய்யவில்லை.

அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் பிரணாப் ஆட்சிக்காலத்தில்தான் அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பதே அவருடைய ஒரே சாதனையாக உள்ளது.

மீதமுள்ள காலத்தில் இனி பாக்கி உள்ள பதவிக்காலத்திலாவது வித்தியாசமான குடியரசுத் தலைவராக பிரணாப் செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.




0 comments:

Post a Comment