இந்த வெள்ளிக்கிழமையும் கோலிவுட் ரொம்ப பிஸி. காரணம் 5 புதிய படங்கள். போனவாரம் 6 படங்கள் வெளியாகின. ஒவ்வொன்றும் ஒரு விதமான படம். இதில் 'தோனி'க்கு நல்ல பெயர். இந்த வாரம் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'காதலில் சொதப்புவது எப்படி', 'உடும்பன்', 'காட்டுப்புலி' மற்றும் 'அம்புலி' என 5 படங்கள். இவற்றில் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. அதர்வா-அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் என்கிறார்கள்.
ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்து இயக்கியுள்ளார்.
'காதலில் சொதப்புவது எப்படி' படம் தமிழ் - தெலுங்கில் வெளியாகிறது. நடிகர் சித்தார்த் இந்தப் படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இதிலும் ஹீரோயின் அமலா பால்தான். சில நெருக்கடிகளைத் தாண்டி 'உடும்பன்' படம் வெளியாகிறது. உடும்பை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அர்ஜுன் நடிப்பில் வரும் 'காட்டுப் புலி'யும் ஆக்ஷன் த்ரில்லர்தான்.
'அம்புலி' ஒரு 3 டி படம். மனோஜ் நைட் ஷியாமளனின் வில்லேஜ் மாதிரி. இவற்றோடு, கௌதம் மேனனின் 'ஏக் தீவானா தா' (விண்ணைத்தாண்டி வருவாயா)வும் வெளியாகிறது. சென்னையில் மட்டும் 11 அரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ்! ஆங்கிலப்படம் 'தி வுமன் இன் பிளாக்', ரவி தேஜாவின் தெலுங்குப் படம் 'நிப்பு' போன்றவையும் ரிலீஸ்.
எம்புட்டு மழை கொட்டுனாலும் சிப்பிக்குள் விழும் துளி எதுன்னுதான் பார்த்திடுவோம்.....