வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Sunday, September 25, 2011

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?

அஜித்…….எந்த ஒரு சினிமா நடிகர்களையும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என்ற கொள்கையை எவ்விடத்திலும் வலியுறுத்தும் என் கருத்தை உடைத்தெறிந்த ஒரு நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். கொழுகொம்பு இன்றி வளர்ந்த கொடி அஜித்.


தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும் ஓர் சராசரி குடிமகன் தான் என்று வாழ்ந்து வருபவர்.மேலே உள்ள படத்தை பார்த்தாலே புரியும். வாக்களிக்க செல்லும்போதுகூட மக்களோடு மக்களாக நின்று வாக்களித்துவிட்டு வருபவர்.
இதுவரையான தமிழ் சினிமா வரலாறு அஜித் போன்ற உன்னதமான ஒரு மனிதரை கண்டிருக்குமா என்பது கேள்வியே. ஒருவேளை சிலர் பார்வைக்கு அஜித் சாதாரணமாக தெரியலாம். ஆனால் என்னைப்பொறுத்த வரை அஜித் ஒரு மாமனிதன் என்று சொல்வதில் கூட தவறில்லை. மாமனிதன் என்று சொல்வதற்கு அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா?.. இன்று ஒரு சாதாரண பதவியில் இருந்தாலோ, சிறிய புகழை அடைந்தூவிட்டாலோ அதை வைத்து அட்டூழியம் செய்பவர்களுக்கு மத்தியில் எவ்வளவோ பெரிய பெயர் புகழை அடைந்திருந்தும் அதை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு வாழ்ந்து வருகிறாரே, அது போதாதா?.
அஜீத் அதிரடியாக தன் ரசிகர் மன்றங்களை கலைத்தபோது அது பற்றி பல்வேறு தகவல்கள் வந்தன. ரசிகர்களின் வாழ்க்கையை பாழாக்கக்கூடாது என்றுதான் அந்த முடிவை எடுத்தார் என்றும், தன் பேச்சை கேட்காமல் தேர்தலில் தி.மு.க விற்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதால்தான் கலைத்தார் என்றும் பல்வேறு தகவல்கள் வந்தன. இருந்தபோதும் அந்த செயல் பலரது மனதிலும் அஜித் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.
அந்த துணிச்சல் தமிழ் ஹீரோக்களுக்கு இதுவரை வந்ததுமில்லை. இனிமேல் வரப்போவதுமில்லை.
அதன் பின்னர் மங்காத்தா வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டபோது பலரும் ஜெயலலிதாவை சந்திக்கும்படி வற்புறுத்தினார்கள். அதை அடியோடு மறுத்த அஜித் “ இப்போது சென்று சந்தித்தால் அது சுயநலமாகிவிடும்” என்று கூறியிருந்தார். அது அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகப்படுத்தியது.
கண்டிப்பாக அஜித் என்ற நடிகனை விட்டு அஜித் என்ற மனிதனை முன்னுதாரணமாக கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.
மங்காத்தா வெற்றிக்குப் பின்னர் தல காட்டில் மழை அடிக்கத்தொடங்கிவிட்டது. அடுத்து பில்லா 2 விலும் அதற்கடுத்து ஜெயம் ராஜா அல்லது ஷங்கரின் இயக்கத்தில் பெரிய பட்ஜெட் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தல தொடர்ந்து வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள்...


1 comment: