வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Monday, September 12, 2011

தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டம் 15ஆம் தேதி துவக்கம்


அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழக அரசின் இலவச மடிக்கணினித் (லேப்டாப்)திட்டம் இந்த வாரம் முதல் துவங்கவுள்ளது.
இந்த இலவச மடிக்கணினித் திட்டத்தின் கீழ் சுமார் 68 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படவுள்ளன. இதன் துவக்கமாக வரும் 15ஆம் தேதி இந்தத் திட்டம் அறிமுகமாகிறது.இந்த ஆண்டில் மட்டும் 9.12 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் மீதி மடிக்கணினிகள் வழங்குதல் 4 ஆண்டுகளில் முழுமை பெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டெம்பர் 15ஆம் தேதியன்று இந்த இலவச மடிக்கணினித் திட்டம் துவங்கப்படுகிறது.நாட்டில் முதன்முறையாக இலவசமாக வழங்கப்படும் இந்த மெகா இலவசத் திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மற்றும் பாலி-டெக்னிக் மாணவர்கள் பயனடையவுள்ளனர்.

இந்த மடிக்கணினி இலவசத்திட்டத்திற்கு ரூ.10,200 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த ஆண்டு வழங்கப்படும்
 இலவச மடிக்கணினிகளின் எண்ணிக்கை 9.12 லட்சத்திற்காக தமிழக அரசு
 ரூ.912 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.தமிழ்நாடு எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன் (எல்காட்)
 இந்த மடிக்கணினி வினியோகத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளது. 
முதல் கட்ட 9.12 மடிக்கணினிகள் வழங்குதல் திட்டத்திற்காக எல்காட் ஏற்கனவே டெண்டர்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.செப்டெம்பர் 15ஆம் தேதி மடிக்கணினி வழங்குதலுக்காக ஹூலெட்-பகார்ட் மற்றும் ஆசர் தகவல் தொழில்நுட்ப நிறுவங்கள் முறையே 4,000 மற்றும் 2000 மடிக்கணிகளை வழங்கியுள்ளது.

1 comment:

  1. இனி ஆடு மேய்ப்பதும் , மாடு மெய்பதும் கேள்விக் குறிதான் .

    ReplyDelete