தனக்குப் புகழை அள்ளித்தந்த சினிமாவுக்கு தரமான படங்களை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் பிரகாஷ்ராஜ். திரைமொழியின் மீது தீவிரக்காதல் கொண்ட பிரகாஷ்ராஜ், தனது தயாரிப்பில் 'மொழி' என்ற அற்புதமான படத்தைக் கொடுத்தார். இதுதவிர 'வெள்ளித்திரை', 'அபியும் நானும்', 'பயணம்' போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளராக முகம் காட்டியவர், இயக்குநராகவும் முகம் காட்ட விரும்பி, கன்னடத்தில் 'அபியும் நானும்' படத்தை 'நானு நானா கனசு' என்ற தலைப்பில் இயக்கி அசத்தினார். தற்போது மீண்டும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இயக்கத் தயாராகி விட்டார். இந்திய க்ரிகெட் வீரரான தோனியின் பெயரையே படத்தின் தலைப்பாக 'தோனி' என வைத்திருக்கும் பிரகாஷ்ராஜ், இதுபற்றி தனது டிவிட்டரில் 'தோனி' என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க இருக்கிறேன். எனது அடுத்த பயணம் துவங்கி விட்டது" என்று பதிவிட்டிருகிறார். இம்முறை இளையராஜாவை இசைக்கும் நா.முத்துக்குமாரை பாடல்களுக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஓகே.. ஓகே.. ஆரம்பிங்க கலக்கலான ஒங்க க்ரிக்கெட் டூர.....