சிறு வயதில் இருந்தே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்று பாலிவுட் கவர்ச்சி நாயகி கத்ரீனா கைப் கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் யாரிடமும் கலகலப்பாகப் பழகுவதில்லை.
சிறுவயதிலிருந்தே அதிக கூச்ச சுபாவம் உள்ளவள். எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. நான் விமான நிலையத்திலோ, வேறு எங்கேயோ உட்கார்ந்திருக்கும்போதும், நடக்கும்போதும் தரையையே பார்த்துக்கொண்டிருப்பேன். அதை ஒரு வித்தியாசமான சுபாவம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நாம் தலைதூக்கிப் பார்க்கும்போது யாராவது நம்மை பார்த்து சிரித்தால் நாமும் சிரிக்க வேண்டும், பேச வேண்டும். தெரிந்தவர்களானால் பிரச்சினையில்லை. அறிமுகமாகாதவர்களை எதிர் நோக்கினால் பிரச்சினைகள் உருவாகலாம் என்று, என்னை காத்துக் கொள்வதற்காக நான் தரையை பார்த்தவாறு நடக்கிறேன்.
இது கெட்ட பழக்கமாகத் தோன்றினாலும் தப்பில்லை. என்னை பாதுகாத்து கொள்ள இதை ஒரு நல்ல பழக்கம் என்றே நினைக்கிறேன், என்று கூறியுள்ளார்.