மார்க்கெட் இல்லாத பரத் படத்தையெல்லாம் போஸ்டரில் போட முடியுமா என தாக்கியுள்ளார் நடிகர் சிம்பு.

சிம்பு, பரத் இணைந்து நடித்த படம் வானம். சமீபத்தில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கான விளம்பரங்களில் பரத்தை விட சிம்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், பரத் கடுப்பாகி பேசி வருகிறார்.

“சிம்புவுக்கு சமமான ரோல் தருவதாகத்தான் என்னை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படத்தில் என்னை ஓரம் கட்டினர். போஸ்டரில் கூட என் படம் இல்லை,” என வருத்தப்பட்டிருந்தார்.

இது சிம்புவை கடுப்பேற்றிவிட்டது. அவர் கூறுகையில், “இரு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் யாருக்கு மார்க்கெட் இருக்கிறதோ, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் விளம்பரம் செய்வார்கள். மார்க்கெட் இல்லாதவர்கள் படத்தைப் போட முடியுமா… பரத் கருத்து பற்றி எனக்கு கவலை இல்லை. நான் என் வேலைகளை செய்தபடி போய்க்கொண்டு இருக்கிறேன்,” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் கூறுகையில், “பரத்தை விட சிம்புக்கு மார்க்கெட் அதிகம். சிம்பு மெகா ஸ்டார். எனவே அவரை வைத்துதான் விளம்பரப்படுத்த முடியும். பரத் பேசும் கருத்துக்கள் தொழில் ரீதியாக தவறானவை. பரத் கேரக்டரில் நடிக்க முதலில் நகுலைத்தான் தேர்வு செய்தோம். சிம்புதான் பரத்துக்கு சிபாரிசு செய்தார்,” என்றார்.