Saturday, August 27, 2011


இரண்டாவது கணவரை பிரிந்து விட்டேன். முதல் கணவர் நடிகர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று நடிகை வனிதா அறிவித்துள்ளார்.

முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான்.

இதையடுத்து, மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி விட்டதாக நடிகை வனிதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிதான் இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி, அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

அவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன். அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.

ராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறான். நானும் ஆகாஷு ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன். ஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசை இருந்தாலும் நடக்குமா? என்று தெரியவில்லை.

எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும். என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம். ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது. அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். என் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும் சகோதரிகளும் மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று நினைக்கிறார்கள்.


Posted on 11:08 PM by obuli

No comments


சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.

மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில்தான் ஞானவேல் ராஜா உள்ளே வந்தார். அவர் படத்தின் தயாரிப்பாளரான க்ளவுட் நைன் பெயரையே அவர் சுத்தமாக மறைத்துவிட, போங்கப்பா நீங்களும் உங்க டீலும் என கடுப்பானார் தயாநிதி அழகிரி.

இந்த நேரத்தில் அவரது க்ளவுட் நைன் பேனரையும் சன் பிக்சர்ஸையும் இணைத்து வைத்தவர் கருணாநிதியின் மற்றொரு வாரிசான உதயநிதி ஸ்டாலின்.

தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் உதவியுடன் சன் பிக்சர்ஸ் வழங்கும் அஜீத்தின் மங்காத்தா என இப்போது நிலைமை மாறியிருக்கிறது. விளம்பரங்களில் ‘க்ளவுட் நைன் – சன் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள தயாநிதி அழகிரி, “அண்ணன் உதயநிதிக்கு நன்றி. அவர்தான் இந்தப் படம் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியிட ஏற்பாடு செய்து கொடுத்தார்” என்று கூறியுள்ளார். பொதுவாக ஒரு படத்துக்கு 25 நாட்களுக்கு மேல் விளம்பரம் செய்து வெளியிடுவது சன் பிக்சர்ஸ் பாணி. ஆனால் தயாநிதிக்காக இந்தப் படத்தை ஒரு வாரத்துக்குள் விளம்பரம் செய்து வெளியிடுகிறார்கள்.

படம் வரும் 31-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என உறுதியளித்துள்ளார் தயாநிதி அழகிரி.


Posted on 3:09 PM by obuli

No comments

Thursday, August 25, 2011


தயாநிதி ஸ்டாலின் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் '7ஆம் அறிவு' படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு, இன்று பதில் கிடைத்திருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக, இதன் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்திருக்கிறார். இப்படம் எப்போது வெளிவரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அதற்கு காரணங்களும் இருக்கின்றன; டி.என்.ஏக்களின் ரகசியத்தை இப்படத்தில் சொல்லியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ். நம் மூதாதையர்கள் எவ்வளவு சர்வ வல்லமை பொருந்தியவர்கள், நமது வரலாறு என்ன, நம் திறமைகள் என்னென்ன என்பதை அறியவியல் பூர்வமாக காட்டியிருக்கிறாராம். சூர்யா இப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறார். ஒருவர் புத்த துறவியாகவும், ஒருவர் சர்க்கஸ் கலைஞராகவும் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் கதாநாயகியாக (விஞ்ஞானியாக) நடித்துள்ளார். 'கஜினி' படத்தில் சூர்யா-ஏ.ஆர்.முருகதாஸ்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி அபார வெற்றியைப் பெற்றது. இரண்டாவது முறையாக இக்கூட்டணி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் புனைகதையாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்தில், வில்லன் வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார். ஹாலிவுட்டிற்கு இணையாக படத்தை உருவாக்கி வருவது, குங்பூ சண்டைக் காட்சியை கிளைமாக்ஸில் இணைத்திருப்பது, இவை எல்லாம் தமிழ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமை சன் டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விலை சுமார் ஏழு கோடியாம். அதுமட்டுமல்ல, இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் நேரடியாக ஒளிபரப்பப் போகிறதாம் சன். இப்படத்தை பெரிய விலை கொடுத்து வாங்க அத்தனை சேனல்களுக்கும் அடிதடி போட்டி. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படங்கள் எல்லாமே கலைஞர் டிவி அல்லது விஜய் டிவி தவிர வேறெந்த சேனல்களுக்கும் கொடுப்பதில்லை அவர். இந்த நிலையில்தான் சன் குழும தலைவர் கலாநிதி மாறனும் உதயநிதியும் சந்தித்திருக்கிறார்கள். முழு படத்தையும் வாங்கி வெளியிட சன் தயாராக இருந்தும், தற்போதைக்கு சேனல் ரைட்ஸ் வரைக்கும்தான் கொடுத்திருக்கிறாராம் உதயநிதி. செப்டம்பர் 10ந் தேதி சிங்கப்பூரில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறதாம். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி, அதாவது வரும் தீபாவளி தினத்தன்று திரைக்கு வருகிறது என்று இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அவரது டுவிட்டர் இணைய பக்கத்தில் உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார். ஓ.கே. ஓ.கே. ட்ரீட்டுக்கு எல்லாரும் ரெடி..........Posted on 12:10 AM by obuli

No comments

Tuesday, August 23, 2011


தனக்குப் புகழை அள்ளித்தந்த சினிமாவுக்கு தரமான படங்களை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் பிரகாஷ்ராஜ். திரைமொழியின் மீது தீவிரக்காதல் கொண்ட பிரகாஷ்ராஜ், தனது தயாரிப்பில் 'மொழி' என்ற அற்புதமான படத்தைக் கொடுத்தார். இதுதவிர 'வெள்ளித்திரை', 'அபியும் நானும்', 'பயணம்' போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளராக முகம் காட்டியவர், இயக்குநராகவும் முகம் காட்ட விரும்பி, கன்னடத்தில் 'அபியும் நானும்' படத்தை 'நானு நானா கனசு' என்ற தலைப்பில் இயக்கி அசத்தினார். தற்போது மீண்டும் ஒரு படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இயக்கத் தயாராகி விட்டார். இந்திய க்ரிகெட் வீரரான தோனியின் பெயரையே படத்தின் தலைப்பாக 'தோனி' என வைத்திருக்கும் பிரகாஷ்ராஜ், இதுபற்றி தனது டிவிட்டரில் 'தோனி' என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க இருக்கிறேன். எனது அடுத்த பயணம் துவங்கி விட்டது" என்று பதிவிட்டிருகிறார். இம்முறை இளையராஜாவை இசைக்கும் நா.முத்துக்குமாரை பாடல்களுக்கும் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஓகே.. ஓகே.. ஆரம்பிங்க கலக்கலான ஒங்க க்ரிக்கெட் டூர.....

Posted on 12:11 AM by obuli

No comments

Monday, August 22, 2011


அதிமுக - தேமுதிக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று திருப்பரங்குன்றம் 
எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா தெரிவித்துள்ளார். 


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெள்ளப்பாறைப்பட்டியில் புதிய பேருந்து வழித்தட துவக்க விழா நடந்தது. அதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா சிறப்பு அழைப்பாரக கலந்து கொண்டு புதிய வழித்தடத்தை துவக்கி வைத்தார்.

அந்த விழாவில் அவர் பேசியதாவது,
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. எப்படி சட்டசபை தேர்தலில் அதிமுக, தேமுதிக கூட்டணியை வெற்றி பெறச் செய்தீர்களோ அதே போல் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதிமுக- தேமுதிக கூட்டணியை பிரிக்க முயற்சி நடந்து வருகிறது. 
அது வீண் முயற்சி. முதல்வர் ஜெயலலிதா, 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரி்க்கவே முடியாது என்றார். 


இந்த வழித்தடம் வெள்ளப்பாறைப்பட்டியிலிருந்து நாகமலை புதுக்கோட்டை, சிம்மக்கல் வழியாக மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்லும்.

Posted on 2:01 PM by சட்னி

No comments

ஒரே வாரத்தில் 400 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு...தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 இன்ஸ்பெக்டர்கள்(சட்டம்-ஒழுங்கு) அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து காவல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏராளமான போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர், செய்யப்பட்டு வருகின்றனர்.

ஓரிரு உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படும் நிலை மாறி தற்போது பலர் கூண்டோடு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 250 டி.எஸ்.பி.க்கள், 400 சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.பி., சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கின்றது.

Posted on 1:56 PM by சட்னி

No comments

Saturday, August 20, 2011

தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி! என்ன அந்த நற்செய்தி என்று கேட்கிறீர்களா? தமிழ்நாட்டில் நிலவி வந்த அழகு பஞ்சத்த தீர்க்க வந்த சமீரா ரெட்டி சென்னையிலேயே செட்டிலாகப் போகிறார் என்பதுதான் அந்த செய்தி.
பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷாலுடன் ‘வெடி’, லிங்குசாமியின் வேட்டை என்று தமிழில் பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டிக்கு. தமிழ்நாடு மிகவும் பிடித்து விட்டதாம். அதிலும் சென்னை மிக மிக பிடித்து விட்டதாம்.

எப்போது பார்த்தாலும் சென்னை, தமிழ்நாடு, மெரினா, இட்லி, சாம்பார் என்று தமிழ்நாட்டு புராணம் பாடிக்கொண்டே இருப்பதால் சமீரா ரெட்டியின் அப்பா சென்னையில் ஒரு வீடு வாங்கி சமீராவுடன் செட்டிலாகாம் என்று ஐடியாவில் இருக்கிறாராம்.

Posted on 7:41 PM by obuli

No comments

Tuesday, August 16, 2011


சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதையடுத்து, சமச்சீர் பாட வகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளன.

""மாநிலம் முழுவதும் மொத்தம் 86 சதவீத புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதப் புத்தகங்கள் கிடங்குகளில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாக'' அதிகாரிகள் தெரிவித்தனர்.

10 முதல் 20 சதவீதம் வரையான புத்தகங்களை அச்சிடுவது, பைண்டிங் செய்வது உள்ளிட்ட பணிகள் இப்போது நடைபெறுகின்றன. பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை இந்த ஆண்டிலிருந்தே அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சமச்சீர் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய 41 பகுதிகளை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, செம்மொழி வாழ்த்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த குறிப்புகள், சென்னை சங்கமம், புதிய தலைமைச் செயலகக் கட்டடம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், தி.மு.க. குறித்த குறிப்புகள் போன்ற பகுதிகளை சமச்சீர் பாட புத்தகங்களில் இருந்து கருப்பு மையிட்டும், ஸ்டிக்கர் ஒட்டியும், கிழித்தும் நீக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தப் பணிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்தன. புத்தகங்களில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் திங்கள்கிழமையோடு பல பள்ளிகளில் நிறைவடைந்ததாகவும், மாணவர்களுக்குப் புத்தகங்கள் திங்கள்கிழமையே விநியோகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தக விநியோகப் பணிகள் குறித்து அதிகாரிகள் கூறியது:

அரசு உத்தரவைத் தொடர்ந்து 65 கல்வி மாவட்டங்களில் இருந்த சமச்சீர் பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன. இவற்றில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மீதமுள்ள புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. பள்ளிகளுக்கு இந்தப் புத்தகங்கள் வர, வர அவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும். ஒரு சில பாடப்புத்தகங்கள் தவிர பெரும்பாலான புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பணிகள் தொடர்பாக தலைமையாசிரியர்கள் கூறியது:

பெரும்பாலான பள்ளிகளுக்கு இதுவரை 50 சதவீத புத்தகங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. ஒரு சில வகுப்புகளுக்கு ஒரு புத்தகம் மட்டுமே கிடைத்துள்ளது. பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகம் விநியோகிக்கப்படவே இல்லை.

பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமைதான் ஸ்டிக்கர் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பப்பட்டன. சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புத்தகங்கள் கிடைத்தவுடன் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எவ்வளவு புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்யாததே புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்காததற்குக் காரணம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்புக்கு முன்னுரிமை: ""பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் 80 சதவீதம் தயாராக உள்ளன. இந்தப் புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி அச்சடித்துத் தரப்படும். மீதமுள்ள வகுப்புகளுக்கான புத்தகங்கள் 60 சதவீதம் வரை தயாராக உள்ளன. மீதமுள்ள புத்தகங்கள் பல்வேறு நிலைகளில் தயாராகி வருகின்றன. இந்தப் புத்தகங்களை முழுமையாக அச்சிட்டு வழங்க 3 வாரங்கள் வரை ஆகலாம்'' என்று பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரிக் பள்ளிகள்: மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி புத்தகங்களை அச்சிட்டு வழங்க 1 மாதம் வரை ஆகும் என்று தனியார் பதிப்பாளர்கள் கூறிவிட்டனர். எனவே, இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்திலேயே புத்தகங்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இலவச புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி அச்சிடும் பணி நடைபெற்றது. மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்துப் புத்தகங்களும் அச்சிட்டு வழங்க மேலும் ஒரு சில நாள்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted on 10:37 PM by obuli

No comments

Monday, August 15, 2011


இந்தியிலும் சரி, தமிழிலும் சரி ஆசினுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கையில் படமில்லை என்ற போதிலும் அவரது பந்தா பேச்சுக்கு சற்றும் குறைச்சலைக் காணோம்.
தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வந்த ஆசின் திடீரென இந்திக்குக் கிளம்பிப் போனார். முதல் படமான கஜினி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், அவருக்கு இந்தியிலும் கதவு திறந்தது. தொடர்ந்து சல்மான் கானுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்டார். கூடவே கிசுகிசுக்களும் படையெடுத்துக் கிளம்பின.
ஆனால் கஜினிக்குப் பிறகு ஆசினுக்கு இந்தியில் பெரியஅளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். இடையில் விஜய் கூப்பிட்டார் என்பதற்காக காவலன் படத்தில் நடித்துக் கொடுத்தார்.
காவலன் படம் வெற்றிகரமாக ஓடியதால், ஆசினைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரோ பிரஸ்டிஜ் பார்க்க ஆரம்பித்தார். இந்திக்குப் போய் விட்ட பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்தால் தனது கெளரவம் என்னாகும் என்ற ரீதியில் பேசி வருகிறாராம் ஆசின்.
இதனால் தன்னைத் தேடி வருகிற தமிழ்ப் பட வாய்ப்புகளை அவர் தட்டி வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியிலும் பெருமளவில் வாய்ப்புகள் வராததால் சற்றே டென்ஷனாக இருக்கிறாராம் ஆசின்.
இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அமெரிக்காவில் கூப்பிட்டாக, ஆப்பிரிக்காவில் கூப்பிட்டாக என்ற ரீதியில் பந்தாவாக பேசி வருகிறாராம். தமிழில் நல்ல கதைகள் வந்தால்தான் நடிப்பேன் என்றும் கூறி வருகிறாராம்.
‘அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்’- இந்தப் பழமொழி ஆசினுக்கு பொருத்தமாக இருக்கும்!

Posted on 2:21 PM by சட்னி

No comments


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல நடிகர் விஷாலும் ஆண்டிற்கு இமயமலைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் தனியாக இமய மலைக்கு செல்லும் விஷால், அங்கே குறைந்தது ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு வருவாராம். ஆனால் இந்த முறை அவர் தனியே செல்லாமல், ஒரு நடிகையுடன் இமயமலைக்கு சென்றாராம்.
சரி யார் அந்த நடிகை என்று கேட்டால், கோலிவுட் வட்டரமோ, மிகவும் ரகசியக் குரலில் ‘ஸ்ரேயாதான் அந்த நடிகை’ என்று கிசுகிசுத்து வருகிறது. இதைக் கேள்விப்பட்ட விஷால் மிகவும் நொந்து போய் விட்டாராம்.
“யார் தான் இந்த மாதிரியான வதந்திகளை கிளப்புறாங்கன்னே தெரியல. என்னோட குடும்பத்தினரில் இருந்து ஒருத்தரையும் இமயமலைக்கு கூட்டிகிட்டுப் போனதில்ல. ஆனா அந்த நடிகையோட போனதா சொல்றாங்க. எந்த ஆதாரமும் இல்லாம எப்படித்தான் இப்படியொரு வதந்தியை பரப்புறாங்களோ’ என்று மனிதர் புலம்பிவருகிறாராம்

Posted on 2:07 PM by சட்னி

No comments


உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்


“உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகைகள் சொல்வதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு நடிகர் இந்த வசனத்தை சொன்னது மட்டுமின்றி, இதனால் படப்பிடிப்பையே நிறுத்தி வைத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
நீங்கள் நம்புங்கள்.
அந்த நடிகர் வேறு யாருமல்ல ‘கோ’ படத்தில் வித்தியாச வில்லனாக வந்து கலக்கிய அஜ்மல்தான். இப்படத்திற்குப் பிறகு `கருப்பம்பட்டி.’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார், பிரபுராஜ சோழன் இயக்கும் இப்படத்தில் அபர்ணா பாஜ்பாய் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட காட்சிகள் பழனியில் படமாக்கப்பட்டன.
காட்சிப்படி, அஜ்மலின் காதலை அபர்ணா ஏற்றுக்கொண்தற்கு பரிசாக அவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் தர வேண்டும். அபர்ணாவிடம் இயக்குனர் காட்சியை விவரிக்க, அதன் முக்கியத்துவம் கருதி அபர்ணா நடிக்க சம்மதித்தார்.
அஜ்மலிடம் காட்சியை சொன்னதும், “உதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்” என்றார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. கதாநாயகிதான் மறுப்பார் என்று எதிர்பார்த்த டைரக்டருக்கு, அஜ்மல் மறுத்தது ஏமாற்றத்தை அளித்தது.
“உங்களிடம் கதை சொல்லும்போது கூட இந்த காட்சியை பற்றி விவரித்து இருந்தேனே” என்று டைரக்டர் வற்புறுத்தி கேட்டும், அஜ்மல் பிடிவாதமாக நடிக்க மறுத்தார்.
இதனால் 2 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர் சுந்தர் கே கதாநாயகன் அஜ்மல், இயக்குனர் பிரபுராஜ சோழன் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தினார். அதன்பிறகு உதட்டு முத்த காட்சி மாற்றப்பட்டு, கன்னத்தில் முத்தமிடுவது போல் படமாக்கப்பட்டது.
இது குறித்து அஜ்மலிடம் கேட்டதற்கு;
“நான் சினிமா நடிகர் ஆவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை. அவர்கள் விருப்பப்படி ரஷியாவில் டாக்டருக்கு படித்து முடித்து, `டிகிரி’யை அவர்களிடம் கொடுத்துவிட்டு, நடிப்பு துறைக்கு வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் சில நிபந்தனைகளை எனக்கு விதித்தார்கள்.
நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது. விரசமான காட்சிகளில் நடிக்கக்கூடாது. இரட்டை அர்த்த வசனம் பேசக்கூடாது” என்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இன்று வரை உறுதியுடன் இருந்து வருகிறேன். நான் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடித்தால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள்.” என்றார்.

Posted on 8:10 AM by சட்னி

No comments

Saturday, August 13, 2011


விஜய் என்னை பயப்பட வைக்கிறார் என்று டைரக்டர் பாலா கூறியிருக்கிறார். டைரக்டர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடித்து செம ஹிட் ஆகியிருக்கும் “தெய்வத்திருமகள்” வெற்றியை பகிர்ந்து கொள்ளும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் டைரக்டர் பாலா. அவர் பேசி முடிந்ததும் படத்தின் டைரக்டர் விஜய் கண்கள் குளமாகி நின்றன. அப்படியென்ன பேசினார் பாலா?.
நான் எடுத்த இரண்டு படங்களில் விக்ரம் நடிச்சிருந்தார். அந்த படங்களை விட இந்த படத்தில்தான் எனக்கு விக்ரமின் நடிப்பு ரொம்ப பிடிச்சிருந்தது. “தெய்வத்திருமகள்” படம் பார்த்துட்டு நான் கண்கலங்கினேன். உண்மையில் விஜய் என்னை பயப்பட வைக்கிறார். நான் அஞ்சுவது அவரது டைரக்ஷனை பார்த்துதான் என்று பாலா பேசியதை கேட்டதும், கிடைக்காத பெரிய விருது கிடைத்த சந்தோஷத்தில்தான் கண்களை குளமாக்கிக் கொண்டார் டைரக்டர் விஜய்.

Posted on 7:55 AM by சட்னி

No comments


சிறு வயதில் இருந்தே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்று பாலிவுட் கவர்ச்சி நாயகி கத்ரீனா கைப் கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் யாரிடமும் கலகலப்பாகப் பழகுவதில்லை.
சிறுவயதிலிருந்தே அதிக கூச்ச சுபாவம் உள்ளவள். எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. நான் விமான நிலையத்திலோ, வேறு எங்கேயோ உட்கார்ந்திருக்கும்போதும், நடக்கும்போதும் தரையையே பார்த்துக்கொண்டிருப்பேன். அதை ஒரு வித்தியாசமான சுபாவம் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நாம் தலைதூக்கிப் பார்க்கும்போது யாராவது நம்மை பார்த்து சிரித்தால் நாமும் சிரிக்க வேண்டும், பேச வேண்டும். தெரிந்தவர்களானால் பிரச்சினையில்லை. அறிமுகமாகாதவர்களை எதிர் நோக்கினால் பிரச்சினைகள் உருவாகலாம் என்று, என்னை காத்துக் கொள்வதற்காக நான் தரையை பார்த்தவாறு நடக்கிறேன்.
இது கெட்ட பழக்கமாகத் தோன்றினாலும் தப்பில்லை. என்னை பாதுகாத்து கொள்ள இதை ஒரு நல்ல பழக்கம் என்றே நினைக்கிறேன், என்று கூறியுள்ளார்.

Posted on 7:49 AM by சட்னி

No comments

Friday, August 12, 2011ஆயிரம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இந்த தகவலை, டெல்லி மேல்சபையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 

1,000 ரூபாய் நாணயம் வெளியிடுவது பற்றிய மசோதா, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டது. அந்த மசோதா நேற்று மேல்-சபையில் தாக்கல் ஆனது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், ``ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் படி இந்த நாணயங்களின் தயாரிப்பு, மற்றும் வினியோகம் இருக்கும்'' என்றார். 


இந்த நாணயம் எப்போது வெளியிடப்படும் என்பதை அவர் அறிவிக்க வில்லை.
"இந்தியாவில் 10 லட்சம் நோட்டுகளில் 8 நோட்டுகள் கள்ள நோட்டுகளாக புழக்கத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. கள்ள நோட்டுகளை அதிக அளவில் இந்தியாவுக்குள் அனுப்பி, இந்திய பொருளாதாரத்துக்கு சீர்குலைவை ஏற்படுத்தும் முயற்சியில், சில அண்டை நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார். பின்னர் இந்த மசோதா மேல்-சபையில் நிறைவேறியது.

Posted on 4:22 PM by சட்னி

No comments


முனி இரண்டாம் பாகமான காஞ்சனா கண்டபடி ஓடுகிறது. முதல் இரு வாரங்களில் இல்லாத கலெக்சன் படத்தின் மூன்றாவது வார இறுதியில் கிடைத்திருப்பது ஆச்ச‌ரியம்.

காஞ்சானாவுக்கு அடுத்து தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ‌ரிபெல் படத்தை லாரன்ஸ் இயக்குகிறார். அதேநேரம் காஞ்சனாவை இந்தியில் ‌ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அனேகமாக சல்மான்கான் நடிக்கலாம்.

காஞ்சனாவின் வெற்றி காரணமாக முனி 3ஆம் பாகத்தை எடுக்கும் முடிவில் இருக்கிறார் லாரன்ஸ். தமிழில் இரண்டாம் பாகம் என்பதே அபூர்வம். அதிலும் பேய் படம் ஒன்றின் 3ஆம் பாகம் என்பது விசேஷம். அசத்துங்க லாரன்ஸ்.

Posted on 4:15 PM by சட்னி

No comments

Sunday, August 7, 2011


தனது தந்தையின் நினைவாக ராணா என படத்திற்கு ரஜினிகாந்த் பெயர் சூட்டியுள்ள போதிலும், ராசி கருதி இப்படத்தின் பெயரை ஐந்து எழுத்துக்களில் தமிழில் வருமாறு மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளனராம். இருப்பினும் படப் பெயர் மாற்றும் வேலையை கடைசியாக பார்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனராம்.

Raana
ரஜினிகாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோண் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உருவாகும் படம் ராணா. படத்தின் பூஜை போடப்பட்ட நாளில் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்படவே படம் தடைபட்டது. தற்போது ரஜினி உடல் நலமடைந்து திரும்பியுள்ளதைத் தொடர்ந்து மீண்டும் முழு வீச்சில் படம் தொடங்கவுள்ளது.ரஜினி தயாரானவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராணா என்ற பெயர் ராசிப்படி சரியாக இல்லை என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், அதை மாற்றி விடலாம் என்ற யோசனைக்கு படக் குழு வந்துள்ளதாக தெரிகிறது.

உண்மையில் ராணோஜி ராவ் என்ற ரஜினியின் அப்பா பெயரிலிருந்துதான் இப்படத்திற்கு ராணா என்று ரஜினி பெயர் தேர்வு செய்து வைத்தாராம். எனவே இப்பெயரை மாற்றுவதில் ரஜினிக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது.ஆனால் தற்போது ராணா படத்தின் தொடக்கத்திலிருந்து பல்வேறு பிரச்சினைகளாகி விட்டதால் படத்தின் பெயரை மாற்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஏற்கனவே பாபா என்ற இரட்டை எழுத்துப் பெயர் கொண்ட படம் சந்தித்த பிரச்சினைகளையும் இத்தோடு இணைத்து ராணாவும், இரண்டெழுத்தில் இருப்பதால் தேவையில்லாத பிரச்சினை எதற்கு என்று கூறியுள்ளனராம்.மேலும் படையப்பா போல ஐந்தெழுத்து அல்லது சந்திரமுகி போல 6 எழுத்தில் நல்ல தமிழ்ப் பெயராக வைத்து விடலாம் என்ற யோசனையும் ரஜினிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ரஜினியும் யோசிப்பதாக தெரிகிறது.இப்போதைக்கு படப்பிடிப்பைத் தொடங்குவது, பெயர் மாற்றத்தைப் பிறகு பார்க்கலாம் என்று ரஜினித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

Posted on 5:25 PM by சட்னி

1 comment

Tuesday, August 2, 2011

மார்க்கெட் இல்லாத பரத் படத்தையெல்லாம் போஸ்டரில் போட முடியுமா என தாக்கியுள்ளார் நடிகர் சிம்பு.

சிம்பு, பரத் இணைந்து நடித்த படம் வானம். சமீபத்தில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கான விளம்பரங்களில் பரத்தை விட சிம்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், பரத் கடுப்பாகி பேசி வருகிறார்.

“சிம்புவுக்கு சமமான ரோல் தருவதாகத்தான் என்னை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படத்தில் என்னை ஓரம் கட்டினர். போஸ்டரில் கூட என் படம் இல்லை,” என வருத்தப்பட்டிருந்தார்.

இது சிம்புவை கடுப்பேற்றிவிட்டது. அவர் கூறுகையில், “இரு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் யாருக்கு மார்க்கெட் இருக்கிறதோ, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் விளம்பரம் செய்வார்கள். மார்க்கெட் இல்லாதவர்கள் படத்தைப் போட முடியுமா… பரத் கருத்து பற்றி எனக்கு கவலை இல்லை. நான் என் வேலைகளை செய்தபடி போய்க்கொண்டு இருக்கிறேன்,” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் கூறுகையில், “பரத்தை விட சிம்புக்கு மார்க்கெட் அதிகம். சிம்பு மெகா ஸ்டார். எனவே அவரை வைத்துதான் விளம்பரப்படுத்த முடியும். பரத் பேசும் கருத்துக்கள் தொழில் ரீதியாக தவறானவை. பரத் கேரக்டரில் நடிக்க முதலில் நகுலைத்தான் தேர்வு செய்தோம். சிம்புதான் பரத்துக்கு சிபாரிசு செய்தார்,” என்றார்.

Posted on 6:50 AM by சட்னி

No comments

Monday, August 1, 2011


ஒரே நாளில் உலகத்தைப் புரட்டிப் போடுறதெல்லாம் நடிகர் விஜய்க்கு சாதாரணம். சினிமாவில் அவர் செய்யும் சாகஸத்தை பாவம்… அவரது தந்தையும் நம்பிக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் நமது கவலை. இந்த சினிமா ஹேங்ஓவ‌ரில் அவர் ஈழம் குறித்து உதிர்த்திருக்கும் வார்த்தைகள் பக்கா ப்ளாக் க்யூமர்.


விடுதலைச் சிறுத்தைகள் பாசிஸ ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடித்தி வருகிறார்கள். விஜய்யிடம் கையெழுத்து கேட்ட போது போட முடியாது என்று சொன்னதாக சிறுத்தைகள் குற்றம்சாற்றுகிறார்கள். விஜய் சார்பில் வாய்ஸ் கொடுக்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தெ‌ரிவித்துள்ளார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். அதற்கு மேல் அவர் சொன்னதுதான் காமெடி.தமிழ் ஈழம் மலரவும், ஈழத்தமிழர் பாதுகாப்பாக வாழவும் விஜய் வழி செய்வார் என்று கூறியிருக்கிறார். காவலன் படத்தை ஒழுங்காக ‌ரிலீஸ் செய்ய முடியாமல் விழி பிதுங்கி அதிமுகவிடம் அடைக்கலம் தேடியவர் ஈழத்தை மலர வைக்கப் போகிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் கீறி வைகுண்டம் போன கதைதான்.

Posted on 12:48 PM by சட்னி

1 comment

asa

Blog Archive

There was an error in this gadget