வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Wednesday, July 6, 2011

சுழற்பந்து வீச்சாளர் சுப்பையா புதிய உலக சாதனை...


டி-20 போட்டியில் சோமர்செட் சுழற்பந்து வீச்சாளர் சுப்பையா புதிய உலக சாதனை


கிரிக்கெட் உலகுக்கு இன்னொரு தமிழ் சூறாவளி கிடைத்து விட்டது. இலங்கையின் முத்தையா முரளீதரனின் திறமைகளை அப்படியே தன் வசம் வைத்துள்ள இங்கிலாந்தின் சோமர்செட் கவுன்டி கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அருள் சுப்பையா, 5 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி டுவென்டி 20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


உலக அளவில் தமிழர்களை தலை நிமிர வைத்த, பெருமை கொள்ளச் செய்த பந்து வீச்சாளர் இலங்கையின் முத்தையா முரளீதரன். இப்போது அவர் ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் முத்தையாவை அப்படியே உரித்து வைத்தது போன்ற ஒரு சுழற்பந்து தமிழர் கிரிக்கெட் உலகுக்குக் கிடைத்துள்ளார்.சூப்பர் சுப்பையா என்று அவரை கிரிக்கெட் உலகமே கொண்டாடத் தொடங்கியுள்ளது. அப்படி என்ன செய்தார் இந்த சுப்பையா? டுவென்டி 20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ரன்களைக் கொடுத்த அதிக விக்கெட்களை வீழ்த்திய உலக சாதனையை சுப்பையா படைத்துள்ளார்.சோமர்செட் அணிக்காக ஆடி வரும் சுப்பையா, கார்டிப்பில் நடந்த கிளாமர்கானுக்கு எதிரான டுவென்டி 20 போட்டியில், ஐந்தே ஐந்து ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை அள்ளி அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளார்.

Arul Suppiah
முதலில் பேட் செய்த கிளாமர்கான் அணியை, சுப்பையாவின் சுழற்பந்து சூறாவளி நிலை குலையச் செய்து விட்டது.அட்டகாசமாக பந்து வீசிய சுப்பையா 98 ரன்களில் கிளாமர்கானை சுருட்டி விட்டார். இதற்கு முன்பு கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் ஜெய்ப்பூரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் ராஜஸ்தான்அணியின் சொஹைல் தன்வீர் 14 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே உலக சாதனையாக இருந்து வந்தது.

 தற்போது அதை தவிடுபொடியாக்கி விட்டார் சுப்பையா.இந்தப் போட்டியில் மற்ற நான்கு விக்கெட்களை இந்திய சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் மற்றும் மேக்ஸ் வாலர் ஆகியோர் எடுத்தனர். பத்து விக்கெட்களையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தியதும் ஒரு புதிய வரலாறாகும்.

புதிய சாதனை படைத்துள்ள சுப்பையா, கோலாலம்பூரில் பிறந்த தமிழர். தற்போது இங்கிலாந்தில் குடியேறி சோமர்செட்டுக்காக ஆடி வருகிறார்.

27 வயதான சுப்பையா, தனது 1வது வயதில் சோமர்செட்டுக்காக ஆட ஆரம்பித்தார் என்பது வியப்புக்குரியதாகும். அந்த அணிக்காக தற்போது 10வது சீசனில் அவர் பங்கேற்றுள்ளார்.

0 comments:

Post a Comment