கடந்த தி.மு.க. அரசில் நடைமுறைப்படுத்தப்பட்ட இலவச டீ.வி. திட்டத்தை நிறுத்தியுள்ளது புதிய அ.தி.மு.க. அரசு. இலவசங்களை மக்களுக்கு வாரிக்கொடுத்து அவர்களைச் சோம்பேறிகளாக்குகிறது தி.மு.க. அரசு என்று, அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவியாக இருந்தபோது குற்றம்சாட்டியிருந்தார்
.

இம்முறை சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில், அ.தி.மு.க. தரப்பில் கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, மாணவர்களுக்கு இலவச லேப்டாப்!

தமிழக அளவில், 10ம் வகுப்பில் 10 லட்சம் மாணவர்களுக்கும், பிளஸ் 2 மாணவர்கள் 7.5 லட்சம் பேருக்கும் தமிழக அரசு லேப்டாப் வழங்கவுள்ளது. அது தவிர, கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்-டாப் வழங்கப்படவுள்ளது. இதற்காக, 912,000 இலவச லேப்-டாப் வழங்குவதற்காக, சர்வதேச அளவிலான டெண்டரை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .

லேப்-டாப் தயாரிக்க விரும்பும் நிறுவனங்கள், அந்நிறுவனத்தின் லேப்-டாப் மாதிரியை, “எல்காட்’ நிறுவனத்திடம் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசால் கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 11. அதற்கான வைப்புத் தொகை 20 லட்சம்.

டென்டர் அறிவித்தலின்படி, தமிழக அரசு கொடுக்கவுள்ள இலவச லேப்டாப்பில்,

விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் இருக்கும்.

• வெப் கேமரா, வயர்லெஸ் மோடம், டிவிடி ரைட்டர், ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

• புரோகிராம்களில், மைக்ரோசாப்ட் வேர்ட், எக்சல் ஆகியவற்றுடன், கல்வி தொடர்பான வேறு சாப்ட்வேர்களும் இன்ஸ்டால் பண்ணப்பட்டிருக்கும்.

• இயங்குதிறனைப் பொறுத்தவரை, 2GB RAM, 320 GB ஹார்ட் டிஸ்க் இருக்கும்.

லேப்டாப் இலவசமாக வழங்கப்பட்டாலும், தமிழக மக்கள் சோம்பேறிகளாகப் போய்விடாமல் சுறுசுறுப்பாகச் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கிறது தமிழக அரசு.