அ‌‌ஜீத்துக்கு இத்தனை திருப்தியுடன் ஒரு படம் இதுவரை அமைந்திருக்குமா தெ‌ரியாது. மங்காத்தா குறித்த பேச்சில் திருப்தி வழிகிறது. ஒவ்வொரு வார்‌த்தையின் இறுதி ஐயம் ஹேப்பி என்பதாகவே இருக்கிறது.மங்காத்தா அ‌‌ஜீத்தின் 50வது படம். 50வது படமும், 100வது படமும் காலை வாரும் என்பது கோடம்பாக்க சென்டிமெண்ட். விதிவிலக்கு எம்‌ஜிஆரும், விஜயகாந்தும். இந்த வ‌ரிசையில் அ‌‌ஜீத்தையும் மங்காத்தா இடம்பெற வைக்கும்.

மங்காத்தாவில் தனது கதாபாத்திரம் குறித்து அ‌‌ஜீத் முதல் முறையாக பேசியிருக்கிறார். இந்தப் படத்தில் நான் கெட்டவனாக வருகிறேன். மொத்தம் 5 கெட்டவர்கள் இதில் இருக்கிறார்கள். அவர்களில் நான்தான் ரொம்ப கெட்டவன். நான் வொர்க் பண்ணியதில் வெங்கட்பிரபுவின் டெடிகேஷன் யா‌ரிடமும் பார்த்தில்லை. அவரது டெடிகேஷன் காரணமாக மங்காத்தா சிறப்பாக வந்திருக்கிறது ஐயம் ஹேப்பி.

யுவன் இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.