ரசிகர்களிடம் சிக்கி நடிகைகள் படாத பாடுபட்டதாக பல நேரங்களில் செய்தி பார்த்திருப்பீர்கள்.
இவற்றில் சில உண்மையாகவே நடந்திருக்கும். சில பப்ளிசிட்டிக்காக உருவாக்கப்பட்டிருக்கும்.
இப்போது நீங்கள் படிப்பது எந்த ரகம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நடிகை ஸ்ரேயா கடந்த சில தினங்களாக தொடர்ந்து மீடியா செய்திகளில் முதலிடம் பிடித்து வருகிறார். முன்பு புகைப்படக்கார்களிடம் தகராறு, பின்னர் 25 வயதுக்குட்பட்டோர் குடிக்க ஆதரவு கொடுத்ததற்காக சமூக அமைப்புகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது… இப்படி எல்லாமே வில்லங்க விவகாரங்கள்.
இந்த வரிசையில், இப்போது ரசிகர்களிடம் ஸ்ரேயா சிக்கிக் கொண்டு அவதிப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜீவா – ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் படம் ரவுத்திரம். கோகுல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது.
அங்குள்ள பாரதி பூங்காவில் ஜீவா ஸ்ரேயா நடித்த காட்சிகளை படமாக்கினர். அதை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து நின்று பார்த்தனர். திடீரென்று கூட்டம் அதிகமாகியது. எல்லோரும் பூங்காவுக்குள் நுழைந்தனர்.
படப்பிடிப்பு குழுவினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் முண்டியடித்து போய் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். சிலர் கைகளை பிடித்து இழுத்தனர். சிலர் இடுப்பில், கழுத்தில் என வாய்ப்பு கிடைத்த இடங்களில் தொட்டனராம். சில குறும்புக்கார இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிடுவதுபோல ஸ்ரேயா மீது விழுந்து கிள்ளினார்களாம்.
பாதுகாப்புக்கு சில போலீசாரே நின்றதால் தடுக்க முடியவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
சில நிமிடங்களில் ஏராளமான போலீசார் வேன்களில் வந்து இறங்கினார்கள். கூட்டத்தினரை அடித்து விரட்டி ஸ்ரேயாவை மீட்டார்களாம்!